Sunday, January 15, 2012

கணவர்களே! இப்போது நீங்கள் மார்க் போடலாம்... உங்கள் மனைவிகளுக்கு


பரீட்சை மாடல் முந்தினது மாதிரிதான். 
30 வாக்கியங்கள் ­ 15 குறைகள்; 15 நிறைகள்; ­ 
மதிப்பெண் கண்டுபிடிக்கும் முறை முந்தைய மாதிரி. ­ 
Interpretation ­ கணவர் என்ற இடத்தில் 
மனைவி என்று வாசிக்கவும்.

அதே ‘Honour Code’ஐ பின்பற்றி 
உங்கள் அருமை மனைவியை எடைபோடுங்கள். 
மதிப்பெண்கள் குறைவாகக் கிடைத்தால்
சோர்ந்துவிடாதீர்கள். இருக்கவே இருக்கு... பாடல்

மனைவி அமைவதெல்லாம்...  இறைவன் கொடுத்த வரம்” 
என்று திருப்திப்பட்டுக்கொள்ளுங்கள்.

மனைவியும் இதைப் படிக்க சந்தர்ப்பம் இருப்பதால் 
ஒருவேளைஅவர்கள் உங்கள் லட்சிய மனைவி 
ஆவதற்கு முயற்சிகள் எடுக்கலாம் அல்லவா?


மனைவியின் குறைகள்

1. சந்தேக பிராணி, பொறாமை குணம்.

2. வம்பு பேசுவதில் ஆர்வம் உள்ளவள்.

3. போனை எடுத்தால், வளவளதான்.

4. சிடுமூஞ்சி.

5. கண்ணீர் Tap எப்பொழுதும் ரெடி.

6. மற்றவர்கள் மாதிரி வாழத் துடிப்பவள்.

7. நினைத்தால் அம்மா வீட்டுக்கு விஜயம். 
    அம்மாச் செல்லம்.

8. பொய் பேசுவாள்

9. பிள்ளைகளைக் கண்டிப்பதை அப்பா 
    ராத்திரி வரும்வரை காத்திருந்து      
    அவர் முன் நடத்தி காட்டுவாள்.

10. கணவனுடைய பேச்சு / நடவடிக்கைகளை 
      மற்றவர் முன் சுட்டிக் காட்டுவாள்.

11. நல்ல Overweight.

12. குடும்ப பட்ஜட், சிக்கனம் என்பதற்கு 
      அர்த்தம் தெரியாதவள்.

13. அடிக்கடி தன் பணத்தில்தான் குடும்பம் 
       நடக்கிறது என்று ஞாபகப்படுத்துவாள்.

14. எல்லா விசேஷங்களுக்கும் 
      லேட்டாகத்தான் போவாள்.

15. முன்பின் தெரியாதவர்களுடன் 
      வீட்டு விஷயங்களைப் பேசுவாள்.

மனைவின் நிறைகள்

1. விருந்தோம்பல் ­ கூட வந்த கலை. 
    எதிர்பாராத விருந்தினர்களுக்கும்       
    வரவேற்பு உண்டு

2. நல்ல பேச்சாளி. எது பேசினாலும் 
    அதில் ஒரு கவர்ச்சி இருக்கும்.

3. சங்கீதத்தில் நல்ல ஈடுபாடு. பாடுவாள்... 
    ஏதாவது Instrument வாத்ய கருவி வாசிப்பாள்.

4. வீட்டை எப்பொழுதும் அழகாகவும் 
    சுத்தமாகவும் வைத்திருப்பாள்.

5. ஒருபோதும் படுக்கைக்குக் கோபத்தோடு 
    செல்ல மாட்டாள்.

6. எந்தப் பிரச்சனையானாலும் கணவருடைய 
    அபிப்பிராயத்தைக் கேட்காமல் 
    முடிவு எடுக்க மாட்டாள்.

7. கடவுள் பக்தி உண்டு. 
    குழந்தைகளையும் அதில் ஈடுபடுத்துவாள்.

8. குடும்பத்தைப் பற்றி நிறைய கனவுகள்
    லட்சியங்களை அடைய தூண்டுகோலாக 
    இருப்பாள்.

9. நன்றாகச் சமையல் செய்வாள். 
    Balanced சமையல் செய்வதில் கெட்டிக்காரி.

10. படுக்கை அறையில் அவள் ஒரு பொக்கிஷம்

11. குழந்தைகளிடமும் ஆதரவில்லாதவர்களிடமும் 
      பிரியம், அன்பு காட்டுவாள்.

12. தன்னலம் கருதாதவள். இளகிய மனதுடையவள்.

13. கணவன் மேல் உள்ள அன்பை அடிக்கடி 
      பேச்சாலும், செய்கையாலும் வெளிப்படுத்துவாள்.

14. பெண்கள் சம்பந்தமான நிகழ்ச்சிகளிலும் 
      சங்கங்களிலும் கலந்துகொள்ள ஆசையுள்ளவள்.

15. சிக்கனமாக வாழ்வதில் விருப்பமுள்ளவள்.
      எந்த பணக் கஷ்டத்திலும் தைரியமாக 
      குடும்பத்தை நடத்திச்செல்வாள்.

மார்க் போட்டுவிட்டீர்களா
எப்படி... உங்கள் மனைவி
உங்கள் கனவுக் கன்னிதானே!

மனைவிமார்களே, இவற்றைத்தான் உங்களிடமிருந்து 
கணவர்கள் எதிர்பார்க்கிறார்கள். 
உங்களை நீங்கள் ஏன் கொஞ்சம் 
மாற்றிக்கொள்ளக் கூடாது?



...கிளறல் தொடரும்.







No comments: