Monday, January 30, 2012

உண்மை ஒன்றுதான், வழிகள் பலவிதம்!

எல்லா மதங்களின் சாராம்சமும் ஒன்றுதான். 
இதோ ஒரு உதாரணம்.

மற்றவர்களை நாம் எப்படி நடத்த வேண்டும் 
என்பதைப் பற்றி எல்லா மதங்களும் 
ஒரே கருத்தைத்தான் வலியுறுத்துகின்றன.

The Golden Rule என்று சொல்லப்படும். 
பின்பற்றத்தக்க மிகச் சிறந்த நன்னெறி சொல்கிறது
Treat others as you want to be treated. 
உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் 
என்று ஆசைப்படுகிறாயோ அதே மாதிரி 
நீயும் மற்றவர்களை நடத்து.

இது ஒரு உயர்ந்த moral code of ethics. 
பலதரப்பட்ட கலாச்சாரங்களின் மீது இந்த விதி 
செல்வாக்கு செலுத்திவந்திருக்கிறது. 
இதற்கு ethics of reciprocity 
என்றும் பெயர் உண்டு. 
நமக்கும் நம்மைச் சார்ந்த நபர்களுக்கும் 
இருக்கும் உறவு இருவழிப் பாதை போன்றது. 
ஒருதலைப்பட்ட தொடர்பு அல்ல. 
ஒரு சமமான தொடர்பு. 
இந்தத் தொடர்பைப் பற்றி 
வெவ்வேறு துறையினர் 
விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

மதங்களோ இந்த நன்னெறி முறையை 
வேறுபாடில்லாமல் ஒத்துக்கொண்டிருக்கின்றன.

இந்த Golden Rule, உடன்பாடாகவும் 
எதிர்மறையாகவும் கூறப்படுகிறது.

பாஸிட்டிவான Golden Rule சொல்கிறது. 
மற்றவர்கள் உன்னை எப்படி நடத்த வேண்டும் 
என்று நினைக்கிறாயோ அதே மாதிரி 
நீ மற்றவர்களை நடத்த வேண்டும். 
நெகட்டிவாக (Silver Rule என்றும் சொல்லலாம்) 
மற்றவர்கள் உன்னை எப்படி நடத்தக் கூடாது 
என்று நினைக்கிறாயோ அதேயே நீயும் 
மற்றவர்களுக்குச் செய்யக் கூடாது. 
இதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். 

குறிப்பாக பைபிளில் சொல்லப்படும் 
The Good Samaritanகதை ரொம்பப் பிரசித்தம். 

ஜான் கென்னடியின் 1963ஆம் ஆண்டு 
anti­segregation பேச்சு ஒரு நல்ல உதாரணம். 
அலபாமா பல்கலைக்கழகத்தில் முதல் 
கறுப்பரைச் சேர்க்கும் நாள் 
அன்று இந்த Golden Rule பற்றி 
வெள்ளையரிடம் பேசினார். 
வெள்ளையர்கள் தங்களைக் கறுப்பர்களாகக் 
கற்பனைசெய்துகொண்டு, வெள்ளையர்களை 
எப்படி நடத்துவார்கள் என்று நினைத்துப்பார்க்கச் 
சொன்னார். அப்படிச் செய்தால் நிச்சயமாக 
அவர்கள் கறுப்பர்களைக் கண்ணியமாக 
நடத்துவார்கள் என்று சொன்னார்.

உலகம் சுருங்கிக்கொண்டிருக்கிறது. 
யாதும் ஊரே, யாவரும் கேளிர்
வசுதேவ குடும்பகம் என்றெல்லாம் பேசுகிற 
இந்தக் காலத்தில் இந்த மாதிரியான 
ஒரு நல்ல கோட்பாடு அவசியம். 
எப்போதையும்விட இது இப்பொழுது 
ஒரு அவசரத் தேவை. 

முடிவாக, மற்றவர்களை நாம் எப்படி 
நடத்த வேண்டும் என்பதைப் பற்றி 
முக்கியமான மதங்கள் என்ன சொல்கின்றன 
என்பதைப் பார்க்கலாம்.

ஹிந்து மதம்: (சநாதன தர்மம்)

புத்தியுள்ள நல்ல மனம் படைத்த மனிதர்கள் 
தங்களை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் 
என்று நினைக்கிறார்களோ அதே மாதிரி 
மற்றவர்களிடம் நடந்துகொள்வார்கள். 
(மஹாபாரதம் 5 : 1517).

புத்த மதம்

உமக்கு எந்த வலி உண்டாகுமோ அதை 
மற்றவர்களுக்குத் தராதீர் (உதானவர்க 5 : 18). 
ஐந்து தன்மைகளுடன் மற்றவர்களிடம் 
நடந்துகொள்ள வேண்டும்: 
கொடை மனபான்மை, பணிவு, தயாள குணம்
வார்த்தை தவறாமை, தன்னைப் போல் 
மற்றவரையும் கருதும் மனப்பான்மை.

கிறிஸ்தவ மதம்

மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் 
என்று நினைக்கிறீர்களோ 
அதே மாதிரி நீங்களும் மற்றவர்களிடம் 
நடந்துகொள்ளுங்கள். 
இதுதான் சட்டம் (மாத்யூ 7:12).

இஸ்லாம் மதம்

உமக்கு எது பிடிக்குமோ
அதையே உம்முடைய சகோதரருக்கும் 
கிடைக்க வேண்டும் என்று நினைப்பு வராதவரை 
நீர் எம்மை நம்பாதவர்களில் ஒருவர்.

பார்ஸி மதம் (Zoroastrianism)

உனக்குக் கசப்பானதை மற்றவர்களுக்கு 
நீ செய்யாமல் இருப்பதுதான் நன்மையான செயல். 
அதுதான் இயற்கை (டாடிஸ்தான் – 1 – dinik 94:5).

யூத மதம்

உம்மை எப்படி நீர் நேசிப்பீரோ
அதே மாதிரி நீரும் மற்றவரை நேசியும். 
உமக்கு எது விரோதச் செயலோ
தை மற்றவருக்குச் செய்யாதேயும். 
இதுதான் சட்டம். 
மற்றது எல்லாம் அதற்கு விளக்கம் 
(டால்மண்ட் ஷாபாத் 3/9).

கன்பூஸியஸ் மதம்

மற்றவர்கள் உங்களுக்கு எது செய்யக் கூடாது 
என்று நினைக்கிறீர்களோ
அதை மற்றவர்களுக்குச் செய்யாதீர்கள். 
இதுதான் உண்மையான அன்புக்கு அடையாளம் 
(அனாலெக்ட்ஸ் 15:23).

தாவோ மதம்

உம்முடைய அண்டை வீட்டுக்காரரின் 
லாபத்தை உம்முடையதாகக் கருதிச் சந்தோஷப்படும்
அதே மாதிரி அவருடைய நஷ்டத்தை 
உம்முடைய நஷ்டமாக பாவித்து 
அவர் துக்கத்தில் பங்குகொள்ளும் 
(டாய ஷான்ங்).

சீக்கிய மதம்

உமக்கு எது நல்லதோ அதையே 
மற்றவருக்கும் செய்யும்.

சமண மதம்

மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் 
என்று நினைக்கிறீர்களோ அதே மாதிரி 
இந்த உலகத்தில் உள்ள எல்லா ஜீவராசிகளையும் 
அன்போடு நடத்துங்கள்.

பஹாய் மதம்

நியாயத்தைத் தேடிச் செல்வீர்களானால்
உங்களுக்கு எந்த நியாயம் கிடைக்க வேண்டும் 
என்று நினைக்கிறீர்களோ, அதையே 
மற்றவர்களுக்குக் கிடைக்க வழி செய்யுங்கள்.


கொசுறு:

இதோ ஒரு சிறு விளையாட்டு
(courtesy;BibleWise)
Break the Code


Use the following Grid to break the code.


Letter "H" would be 32 and "P" would be 14



#S
1
2
3
4
5
6
1
A
F
K
P
U
Z
2
B
G
L
Q
V

3
C
H
M
R
W

4
D
I
N
S
X

5
E
J
O
T
Y







  41 53               15  43  54  53                53  54  32  51  34  44        11  44

55 53 15       35  53 15  23  41               32 11 25 51             54  32  51  33

 41 53                15  43  54  53                         55   53   15



...கிளறல் தொடரும்.











No comments: