பிரபா -நாகராஜன்
உறையாடல் தொடர்கிறது...
பிரபா: Build-up பண்ணியது
போதும் என்று நினைக்கிறேன்.
விஷயத்திற்கு வரலாமே?
நான்: கொஞ்சம் எனக்கு நானே
அட்சதை போட்டுக்கலாம்
என்று நினைத்தேன்.
அது உனக்குப் பொறுக்கவில்லை.
சரி,புராணத்தைத் தொடர்கிறேன்.
ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
நாய் கடவுள்களால் மனிதனுக்காகப் படைக்கப்பட்ட ஒரு ஜந்து.
ரொம்பரொம்பப் பழைமையான
ரிக் வேதத்திலேயே நாயைப்
பற்றிப் பேசப்பட்டிருக்கிறது.
‘சரமா’ என்ற பெண் நாயைப்
பற்றி ரிக் வேத ஸ்லோகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
‘சரமா’ தேவேந்திரனுக்குச்
சொந்தமான நாய்.
இதுதான் எல்லா நாய்களுக்கும்
தாயார். தேவ-ஷூனி (Shuni)
என்ற பெயரும் உண்டு.
ஒரு சமயம்,அரக்கர்கள்
தேவலோகப் பசுக்களைக்
களவாடிச் சென்றபோது,
சரமாதான் அந்தப் பசுக்களின்
இடத்தைக் கண்டுபிடித்து
அவற்றை மீட்டது.
பின்னால் எழுதப்பட்ட
தைத்ரேய பிராமணா,
ஆபத்ஸம்ப சூத்ரங்கள் -
சரமா, நாய் உருவத்தில் இருக்கும்
ஒரு பெண் தெய்வம்
என்று எழுதியிருக்கிறார்கள்.
இந்த நாய் தெய்வம்,
இந்திரனால் உலகத்தைச்
சுற்றிவர அனுப்பப்பட்டதாம்.
அச்சமயம் மக்கள் பசியால்
வாடுவதைப் பார்த்து,
சரமா தண்ணீரை உண்டுபண்ணி வயல்களில் பாய்ச்சி மக்களுக்கு
உணவு அளித்ததாம்.
மனிதர்களுக்குப் பால் கிடைக்கும்
வகையில் பசுக்களையும்
சிருஷ்டித்ததாம்.
வராஹ புராணத்தில் சரமாவைப்
பற்றி அவ்வளவு உயர்வாகச் சொல்லப்படவில்லை.
இந்திரன்,ஒரு சமயம் அசுரர்களிடம்
தோல்வி அடைந்து தேவ பதவியை
இழந்து விட்டான்.
அந்த பதவியை மீண்டும் அடைய
ஒரு பசு யாகம் பண்ண நினைத்தான்.
‘பானி’ என்ற அசுரர்கள் தேவலோகப் பசுக்களைக் கவர்ந்துவிட்டார்கள்.
சரமா, பசுக்களைத் தேடிச்
சென்றது.
அசுரர்கள் சரமாவுக்குப்
‘பால் கொடுத்து’ தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டார்கள்.
(இதுதான் first recorded
லஞ்சம் - அதுவும் after all milk
என்று நினைக்கிறேன்)
சரமாவும் வாங்கின லஞ்சத்திற்கு
நேர்மையாக இருக்க தேவேந்திரனிடம் சென்று தனக்கு ஒன்றும் தெரியாது
என்று "உண்மையை" பேசிவிட்டது.
ஆனால் சரமாவின் துரதிர்ஷடம்
சரமாவைக் கண்காணிக்க
(clever Indra) அனுப்பப்பட்ட
மருத்துக்கள் என்ற உபதேவர்கள்
உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார்கள்.
இந்திரன் சரமாவின் வயிற்றில்
ஓங்கி ஒரு உதை விட்டான்.
சரமா சாப்பிட்ட பாலைக்
கக்கியது. உண்மையைச்
(இது உண்மையான உண்மை)
சொல்லி, அசுரர்கள் ஒளித்து
வைத்திருந்த குகைக்குக்
கூட்டிச்சென்று பசுக்களை
மீட்க உதவி செய்தது.
இதற்குப் பிறகு அது
விசுவாசமாக இருந்ததாம்.
சரமாவின் குழந்தைகளில்
பிரபலமான குழந்தைகள்
இரண்டு.
நான்கு கண்களுடைய
யமதர்மனின் நாய்கள்.
ஷயாமா, சபலா
என்று பெயர்.
பின் எழுதப்பட்டப் புராணங்களில்
சரமாவைப் பற்றிப் பெரிய
குறிப்புகள் ஒன்றும் இல்லை.
மகாபாரதத்தில் பாண்டவர்கள்
மேல்உலகம் செல்லும் சமயத்தில்
ஒரு நாய் தொடர்ந்து சென்ற கதை எல்லோருக்கும் தெரியும்.
தேவலோகத்தையே வேண்டாம்
என்று சொல்லும் அளவுக்குத்
தர்மருக்கு அந்த நாய் மேல் பிரியம்
என்பதை நினைக்கும்போது
அந்த நாய், நிஜமாகவே
கொடுத்துவைத்த ஜென்மம்தான்.
அதுதான், தர்மரைச் சோதிக்க
வந்த யமதர்மராஜன்
என்பது வேறு கதை.
வேதங்களாலும் புராணங்களாலும் கொடுக்கப்படாத பெருமை,
கெளரவம் நாய்க்குக் கிடைக்க அருள்புரிந்தவர்,
சாக்ஷாத் சிவபெருமான்தான்.
பிரபா: அதென்ன கதை?
நான்: சிவபெருமான்,விஷ்ணுவைப்
போல் பல அவதாரங்கள்
எடுத்திருக்கிறார்.
அவற்றில் ஒன்றுதான்,
காலபைரவர் அவதாரம்.
காலபைரவரின் வாகனம்
ஒரு நாய்தான்.
பிரபா: காலபைரவர் அவதாரத்தைப்
பற்றிச் சொல்லுங்களேன்?
நான்:சிவபெருமானின் உக்கிரமான
தோற்றம் காலபைரவர்.
பைரவர் என்ற சமஸ்கிருதச்
சொல்லுக்கு ‘terrible, frightful’
என்று பொருள் .
இவருடைய காதோலைகள்,
கங்கணங்கள், பூணூல் எல்லாம்
வளைந்த பாம்புகளாகும்.
புலித் தோல் போர்த்திக்கொண்டு
காணப்படுகிறார்.
அதற்கு ஒரு கதை உண்டு.
ஒரு சமயம், விஷ்ணு, பிரம்மாவிடம்
"யார் இந்த உலகின் சிருஷ்டிகர்த்தா?"
என்று கேட்டார்.
பிரம்மாவும் மமதையில்
"நான்தான், அதனால் என்னை
எல்லோரும் பூஜை செய்யுங்கள்"
என்றார்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த
சிவபெருமான் காலபைரவர்
அவதாரம் எடுத்து பிரம்மாவின்
ஐந்து தலைகளில் ஒன்றை வெட்டி எடுத்துவிட்டார்.
(இன்னோரு தலை போன கதை,
ஞாபகம் இருக்கா? clue-முருகன்)
கோபத்தில் செய்த காரியத்தை
நினைத்து வருந்தி (பிரும்மாஹத்தி தோஷத்திலிருந்து விடுபட)
அந்தத் தலையை வைத்துக்கொண்டு சிவபெருமான் 12
ஆண்டுகள் பிக்ஷாண்டராகத் திரிநதாராம்.
இன்னொரு கதை, தக்ஷ யாகத்தில்
தனக்கு ஏற்பட்ட அவமதிப்பால்
சதி, தீக்குளிக்கப் போய்,
அந்தக் கோபத்தில் சிவபெருமான்
வீரபத்ரரைச் சிருஷ்டித்து தக்ஷன்
தலையை வெட்டச் சொன்னது.
காலபைரவர் ஒரு கால தேவதை.
இவரைத் துதிக்கும் பாடல்கள்
சொல்கின்றன:
"காலம் பொன்னானது.
போன காலம் போனதுதான்.
புத்திசாலிகள் ஒவ்வொரு
நேரத்தையும் பயனுள்ளதாகச் செய்துகொள்வார்கள்.
என்னுடைய காலம் நல்லதாக
இருக்கக் காலபைரவர்
அருள்புரிவாராக."
இவர் 8 விதமான உருவங்களில் வழிபடப்படுகிறார்.
நவகிரகங்களில் ஒருவரான
ராகுவுக்கு அதிபதி, காலபைரவர்.
காலபைரவாஷ்டகம், என்று
ஆதிசங்கரர் இயற்றிய நூல்
பாராயணத்திற்கு உகந்தது.
வாழ்க்கையின் வெற்றி,
ஒருவர் எப்படித்
தன் நேரத்தைச் செலவழிக்கிறார்
என்பதைப் பொறுத்தது.
காலத்தை மதித்தவர்கள்
வெற்றி அடைவார்கள்.
காலபைரவர் கோவில்கள்
நேபாளத்திலும், காசியிலும்,
சக்தி பீடங்களிலும்
இருக்கின்றன.
நாய்களுக்கு கிடைத்த
இன்னோரு பெருமை,தத்தாரேய சுவாமிகளினால்.
நான்கு வேதங்களையும் நாய்களாக
மாற்றி உலவி வரும் காட்சி
கண்கொள்ளா காட்சி.
புத்த மதத்தினரும் காலபைரவர்
வழிபாட்டைக் கடைபிடிக்கிறார்கள்.
பிரபா: இந்து மதத்தினரைத் தவிர
மற்ற மதத்தினர்கள் நாயைப் பற்றி
என்ன நினைக்கிறார்கள்?
நான்: Compassion - தயை -
என்பதற்கு எடுத்துக்காட்டாக
நாயை புத்த மதத்தினர்
சொல்லுகிறார்கள்.
புத்தர் ஒரு சிங்கத்தை நாய் மாதிரி வளர்த்ததாக சொல்வார்கள்.
புத்த மதம் சீன தேசத்திற்கு
வந்தபோது சீனர்களுக்குச்
சிங்கம் எப்படி இருக்கும் என்று தெரியாதாம்.
தங்களுக்குத் தெரிந்த நாயையே
சிங்கம் மாதிரி நினைத்தார்களாம்.
சீன சக்ரவர்த்தி MIng சிங்கம்
வளர்க்க ஆசைப்பட்டாராம்.
அதற்குப் பதில் ஒரு நாயை
வளர்த்தாராம். அதற்குப் பெயர்
Foo-dog என்று பெயர்.
திபெத், ஜப்பான் நாடுகளிலும்
Foo நாய்களுக்கு ராஜ மரியாதை
கிடைத்தது. Foo நாய்களைத்
திருடினால் மரண தண்டனை
கிடைக்கும்.
1800இல் வெள்ளைக்காரன்
சீனாவை தாக்கும்வரை
இந்த நாய்கள் தொடர்ந்து
சீன அரண்மனையில்தான் இருந்தன. யூத மதம்
யூதர்கள் நாய்கள் அசுத்தமானவை
என்றே நினைக்கிறார்கள்.
ஆனால் நாய்கள், விசுவாசமான
காவலர்கள் என்பதில் அவர்களுக்கு
எந்தச் சந்தேகமும் கிடையாது.
நாய்க்குச் சாப்பாடு
போட்டுவிட்டுத்தான்
சாப்பிட ஆரம்பிப்பார்கள்.
நாய்களைக் கொடுமைப்
படுத்துவதை யூதச் சட்டங்கள் அனுமதிப்பதில்லை. கொடுமையாளர்களுக்குக்
கடுந்தண்டனை உண்டு.
கிறிஸ்த்துவ மதம்
கத்தோலிக்க மதத்தில் அநேக
Saints நாய்கள் வைத்திருந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
St. Patrick, St. Margaret,
St. Giovanni Melchor,St.Roch
போன்ற மத குருமார்களைக்
கடவுளிடம் அழைத்துச் செல்வதற்கு
நாய்கள் உதவிசெய்தன.
பைபிளில், ஏறக்குறைய
40 இடங்களில் நாய்களைப்
பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.
கிறிஸ்துவர்களில் கணிசமாக
(40%) பேர்கள் தங்களுடைய
வளர்ப்பு மிருகங்கள் (pets)
தங்களுடன் சுவர்க்கத்திற்கு
வரும் என்று நம்புகிறார்கள்.
இஸ்லாம்
பொதுவாக, நாய்கள்
அசுத்தமானவை
என்று இஸ்லாம் கருதுகிறது.
நாய்கள் ஒரு நல்ல வேலைக்காரர்கள்
என்பதை இஸ்லாம் ஒத்துக்கொள்கிறது. நாய்களிடமும் மற்ற மிருகங்களிடமும்
மனிதன் தயை காட்ட வேண்டும்
என்பதை இஸ்லாம் அழுத்தமாகச் சொல்கிறது.
ஒரு பாவி ஒரு தாகமுள்ள
நாய்க்குக் தண்ணீர் கொடுத்ததால்
அவன் சுவர்க்கத்திற்கு சென்றான்
என்று ஒரு கதை உண்டு.
Zoroastrianism
இந்தப் பாரசீக மதத்தில் நாய்
ஒரு beneficent, clean and
righteous animal என்று
கருதப்படுகிறது.
அதனால் அதை நன்றாகப்
பராமரிக்க வேண்டும்.
வீட்டில் உள்ளவர்களுக்கு
அது செய்யும் சேவைகளைப்
பாராட்டி அதை நன்றாகப்
போஷாக்குடன் கவனித்துக்
கொள்வார்கள்.
நாய்களுக்கு விசேஷமான
spiritual values இருப்பதாக
நம்புகிறார்கள். ஒரு நாயின்
பார்வை புனிதத் தன்மையை ஏற்படுத்துமாம்.
அதே பார்வை அசுரர்களை
விரட்டியும் விடுமாம்.
சுவர்க்கத்திற்குப் போகும் பாதையில் சின்வாட் என்ற பாலம் இருக்கிறதாம்.
அதற்குக் காவல் நாய்கள்தான்.
ஒருவர் இறந்த சமயம் நாய்களுக்கு
நன்றாக சாப்பாடு போடுவது
ஒரு வழக்கம். நாய்களை எப்படி நடத்த வேண்டும் என்பதைப் பற்றின
விரிவான விளக்கங்கள்
அவர்களுடையப் புனிதமான
Vendidadஇல் சொல்லப்பட்டிருக்கின்றன. வீட்டு நாயைக் கொன்றவர்களுக்கு நரகம்தானாம்.
கர்ப்பமாக இருக்கும்
நாயை (உங்களுக்குச் சொந்தம் இல்லாவிட்டாலும்)
குட்டி பெறும்வரை
பராமரிக்க வேண்டும்.
Sag did என்ற ஒரு ஈமச் சடங்கில்
ஒரு நாயை இறந்தவர் உடல் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்று
அதைப் பார்க்க செய்வார்களாம்.
Sag did என்றால் Dog sight
என்று பெயர்.
அந்த நாய்க்கு 4 கண்கள்-
அதாவது,அதன் கண்களின் மேல்
2 புள்ளிகள் இருக்க வேண்டும்.
பிரபா:மற்ற நாகரீகங்களில் நாயைப்
பற்றி என்ன சொல்லியிருக்கிறது?
நான்: முதலில் மிஸோ அமெரிக்கன்
(Meso American) என்று சொல்லப்படும் நாகரீகத்தில் என்ன
சொல்லப்பட்டிருக்கிறது
என்பதைப் பார்க்கலாம்.
இது வேறு ஒன்றும் இல்லை.
மாயா, அச்டெக் என்று
சொல்லப்படுகிற நாகரீகம்தான்.
இந்தக் கலாச்சாரத்தில் நாய்களுக்கு
ஒரு தனி இடம் உண்டு.
இந்தப் பகுதியில் உள்ள
ஒரு நம்பிக்கை -
புதிதாக இறந்தவர்களின்
உடல்களைத் நீர்நிலைகளைத்
தாண்டி எடுத்துச் செல்லும்
ஒரே மிருகம் நாய்தான்—
என்பது.
சில இடங்களில் உடல்களோடு நாய்களையும் சேர்த்துப்
புதைப்பார்களாம்.
பாதாள உலகத்திற்கு வழிகாட்டிகள்
இந்த நாய்கள்தானாம்.
Meso American Calendar
ஒரு 20 day cycle.
10ஆவது நாள், நாய் இனத்தைக்
குறிப்பது.
Aztec புராணங்களில் ஒரு கதை:
4ஆவது சூரியன் வெள்ளத்தில் மூழ்கிவிட்டாராம்.
ஒரே ஒரு மனிதனும்
அவன் மனைவியும் தப்பிப் பிழைத்தார்களாம்.
அவர்கள் ஒரு மரக்கட்டையைப் பிடித்துகொண்டு
கரை சேர்ந்தார்களாம்.
கடற்கரையில் நெருப்பு மூட்டி
ஒரு மீனை வறுத்தார்களாம்.
நெருப்பின் புகை, 2
நட்சத்திரங்களை
மிகவும் பாதித்ததாம்.
Tezcatlipoca என்ற கடவுளுக்கு
ஒரே கோபம். அவர்களின் தலைகளை
வெட்டி அவர்கள் பின் பகுதியில்
வைத்து தைத்துவிட்டாராம்.
இதுதான் நாய்களின்
அவதாரக் கதை.
இன்னும் நிறைய கதைகள்
இருக்கின்றன...
பிரபா: மற்ற தேசங்களில் நாய்
எப்படி நடத்தப்படுகிறது?
நான்: மெசபடோமியாவில் நாய்க்கு
ஒரு கோவிலே இருக்கிறது.
முன்னாள் எகிப்தியர்கள் நாய்களை
Anubis என்ற கடவுளாகப் பார்க்கிறார்கள்.
சீன தேசத்தில் நாய்களுக்கு
ஒரு தனி மரியாதை.
சீன ஜோசியத்தில்
12 ராசிகளுக்கும்
12 மிருகங்களின்
பெயர்கள் உண்டு.
11ஆவது ராசி - நாய்:
1934, 1946, 1958, 1970,
1982, 1994, 2006, 2018,
2030, 2042
ஆகிய வருடங்கள் நாய்
வருடங்களாகும்.
இந்த வருடத்தில் பிறந்தவர்கள்,
தோழமை, நேரிடைப் போக்கு, மனிதாபிமானம் ஆகியவற்றைத்
தங்கள் குணங்களாகக் கொண்டவர்கள்.
சீனப் புது வருடத்தின் இரண்டாம் நாள் "நாய்களின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.
அன்றைக்கு நாய்களுக்கு
நன்றாகச்
சாப்பாடு போடுவார்கள்.
பிரபா: நாயின் குணங்கள் எவை?
நாயைப் பற்றின myths
ஏதாவது உண்டா?
விஞ்ஞான முறைப்படி
நாயின் Origin என்ன?
நாய்கள் ஓநாய்களிலிருந்து
வந்தனவா?
நான்:
கொஞ்சம் மூச்சு எடுத்துக்கோ...
பொறுமை....அவ்வயார் சொன்னபடி
"பொறுமை என்னும் நகை அணிந்து
பெருமை கொள்வீர்"
அடுத்த வாரம்வரை
பொறுத்திரு...
புராணம் தொடரும்....
உறையாடல் தொடர்கிறது...
பிரபா: Build-up பண்ணியது
போதும் என்று நினைக்கிறேன்.
விஷயத்திற்கு வரலாமே?
நான்: கொஞ்சம் எனக்கு நானே
அட்சதை போட்டுக்கலாம்
என்று நினைத்தேன்.
அது உனக்குப் பொறுக்கவில்லை.
சரி,புராணத்தைத் தொடர்கிறேன்.
ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
நாய் கடவுள்களால் மனிதனுக்காகப் படைக்கப்பட்ட ஒரு ஜந்து.
ரொம்பரொம்பப் பழைமையான
ரிக் வேதத்திலேயே நாயைப்
பற்றிப் பேசப்பட்டிருக்கிறது.
‘சரமா’ என்ற பெண் நாயைப்
பற்றி ரிக் வேத ஸ்லோகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
‘சரமா’ தேவேந்திரனுக்குச்
சொந்தமான நாய்.
இதுதான் எல்லா நாய்களுக்கும்
தாயார். தேவ-ஷூனி (Shuni)
என்ற பெயரும் உண்டு.
ஒரு சமயம்,அரக்கர்கள்
தேவலோகப் பசுக்களைக்
களவாடிச் சென்றபோது,
சரமாதான் அந்தப் பசுக்களின்
இடத்தைக் கண்டுபிடித்து
அவற்றை மீட்டது.
பின்னால் எழுதப்பட்ட
தைத்ரேய பிராமணா,
ஆபத்ஸம்ப சூத்ரங்கள் -
சரமா, நாய் உருவத்தில் இருக்கும்
ஒரு பெண் தெய்வம்
என்று எழுதியிருக்கிறார்கள்.
இந்த நாய் தெய்வம்,
இந்திரனால் உலகத்தைச்
சுற்றிவர அனுப்பப்பட்டதாம்.
அச்சமயம் மக்கள் பசியால்
வாடுவதைப் பார்த்து,
சரமா தண்ணீரை உண்டுபண்ணி வயல்களில் பாய்ச்சி மக்களுக்கு
உணவு அளித்ததாம்.
மனிதர்களுக்குப் பால் கிடைக்கும்
வகையில் பசுக்களையும்
சிருஷ்டித்ததாம்.
வராஹ புராணத்தில் சரமாவைப்
பற்றி அவ்வளவு உயர்வாகச் சொல்லப்படவில்லை.
இந்திரன்,ஒரு சமயம் அசுரர்களிடம்
தோல்வி அடைந்து தேவ பதவியை
இழந்து விட்டான்.
அந்த பதவியை மீண்டும் அடைய
ஒரு பசு யாகம் பண்ண நினைத்தான்.
‘பானி’ என்ற அசுரர்கள் தேவலோகப் பசுக்களைக் கவர்ந்துவிட்டார்கள்.
சரமா, பசுக்களைத் தேடிச்
சென்றது.
அசுரர்கள் சரமாவுக்குப்
‘பால் கொடுத்து’ தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டார்கள்.
(இதுதான் first recorded
லஞ்சம் - அதுவும் after all milk
என்று நினைக்கிறேன்)
சரமாவும் வாங்கின லஞ்சத்திற்கு
நேர்மையாக இருக்க தேவேந்திரனிடம் சென்று தனக்கு ஒன்றும் தெரியாது
என்று "உண்மையை" பேசிவிட்டது.
ஆனால் சரமாவின் துரதிர்ஷடம்
சரமாவைக் கண்காணிக்க
(clever Indra) அனுப்பப்பட்ட
மருத்துக்கள் என்ற உபதேவர்கள்
உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார்கள்.
இந்திரன் சரமாவின் வயிற்றில்
ஓங்கி ஒரு உதை விட்டான்.
சரமா சாப்பிட்ட பாலைக்
கக்கியது. உண்மையைச்
(இது உண்மையான உண்மை)
சொல்லி, அசுரர்கள் ஒளித்து
வைத்திருந்த குகைக்குக்
கூட்டிச்சென்று பசுக்களை
மீட்க உதவி செய்தது.
இதற்குப் பிறகு அது
விசுவாசமாக இருந்ததாம்.
சரமாவின் குழந்தைகளில்
பிரபலமான குழந்தைகள்
இரண்டு.
நான்கு கண்களுடைய
யமதர்மனின் நாய்கள்.
ஷயாமா, சபலா
என்று பெயர்.
பின் எழுதப்பட்டப் புராணங்களில்
சரமாவைப் பற்றிப் பெரிய
குறிப்புகள் ஒன்றும் இல்லை.
மகாபாரதத்தில் பாண்டவர்கள்
மேல்உலகம் செல்லும் சமயத்தில்
ஒரு நாய் தொடர்ந்து சென்ற கதை எல்லோருக்கும் தெரியும்.
தேவலோகத்தையே வேண்டாம்
என்று சொல்லும் அளவுக்குத்
தர்மருக்கு அந்த நாய் மேல் பிரியம்
என்பதை நினைக்கும்போது
அந்த நாய், நிஜமாகவே
கொடுத்துவைத்த ஜென்மம்தான்.
அதுதான், தர்மரைச் சோதிக்க
வந்த யமதர்மராஜன்
என்பது வேறு கதை.
வேதங்களாலும் புராணங்களாலும் கொடுக்கப்படாத பெருமை,
கெளரவம் நாய்க்குக் கிடைக்க அருள்புரிந்தவர்,
சாக்ஷாத் சிவபெருமான்தான்.
பிரபா: அதென்ன கதை?
நான்: சிவபெருமான்,விஷ்ணுவைப்
போல் பல அவதாரங்கள்
எடுத்திருக்கிறார்.
அவற்றில் ஒன்றுதான்,
காலபைரவர் அவதாரம்.
காலபைரவரின் வாகனம்
ஒரு நாய்தான்.
பிரபா: காலபைரவர் அவதாரத்தைப்
பற்றிச் சொல்லுங்களேன்?
நான்:சிவபெருமானின் உக்கிரமான
தோற்றம் காலபைரவர்.
பைரவர் என்ற சமஸ்கிருதச்
சொல்லுக்கு ‘terrible, frightful’
என்று பொருள் .
இவருடைய காதோலைகள்,
கங்கணங்கள், பூணூல் எல்லாம்
வளைந்த பாம்புகளாகும்.
புலித் தோல் போர்த்திக்கொண்டு
காணப்படுகிறார்.
அதற்கு ஒரு கதை உண்டு.
ஒரு சமயம், விஷ்ணு, பிரம்மாவிடம்
"யார் இந்த உலகின் சிருஷ்டிகர்த்தா?"
என்று கேட்டார்.
பிரம்மாவும் மமதையில்
"நான்தான், அதனால் என்னை
எல்லோரும் பூஜை செய்யுங்கள்"
என்றார்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த
சிவபெருமான் காலபைரவர்
அவதாரம் எடுத்து பிரம்மாவின்
ஐந்து தலைகளில் ஒன்றை வெட்டி எடுத்துவிட்டார்.
(இன்னோரு தலை போன கதை,
ஞாபகம் இருக்கா? clue-முருகன்)
கோபத்தில் செய்த காரியத்தை
நினைத்து வருந்தி (பிரும்மாஹத்தி தோஷத்திலிருந்து விடுபட)
இன்னொரு கதை, தக்ஷ யாகத்தில்
தனக்கு ஏற்பட்ட அவமதிப்பால்
சதி, தீக்குளிக்கப் போய்,
அந்தக் கோபத்தில் சிவபெருமான்
வீரபத்ரரைச் சிருஷ்டித்து தக்ஷன்
தலையை வெட்டச் சொன்னது.
காலபைரவர் ஒரு கால தேவதை.
இவரைத் துதிக்கும் பாடல்கள்
சொல்கின்றன:
"காலம் பொன்னானது.
போன காலம் போனதுதான்.
புத்திசாலிகள் ஒவ்வொரு
நேரத்தையும் பயனுள்ளதாகச் செய்துகொள்வார்கள்.
என்னுடைய காலம் நல்லதாக
இருக்கக் காலபைரவர்
அருள்புரிவாராக."
இவர் 8 விதமான உருவங்களில் வழிபடப்படுகிறார்.
நவகிரகங்களில் ஒருவரான
ராகுவுக்கு அதிபதி, காலபைரவர்.
காலபைரவாஷ்டகம், என்று
ஆதிசங்கரர் இயற்றிய நூல்
பாராயணத்திற்கு உகந்தது.
வாழ்க்கையின் வெற்றி,
ஒருவர் எப்படித்
தன் நேரத்தைச் செலவழிக்கிறார்
என்பதைப் பொறுத்தது.
காலத்தை மதித்தவர்கள்
வெற்றி அடைவார்கள்.
காலபைரவர் கோவில்கள்
நேபாளத்திலும், காசியிலும்,
சக்தி பீடங்களிலும்
இருக்கின்றன.
நாய்களுக்கு கிடைத்த
இன்னோரு பெருமை,தத்தாரேய சுவாமிகளினால்.
நான்கு வேதங்களையும் நாய்களாக
மாற்றி உலவி வரும் காட்சி
கண்கொள்ளா காட்சி.
புத்த மதத்தினரும் காலபைரவர்
வழிபாட்டைக் கடைபிடிக்கிறார்கள்.
பிரபா: இந்து மதத்தினரைத் தவிர
மற்ற மதத்தினர்கள் நாயைப் பற்றி
என்ன நினைக்கிறார்கள்?
நான்: Compassion - தயை -
என்பதற்கு எடுத்துக்காட்டாக
நாயை புத்த மதத்தினர்
சொல்லுகிறார்கள்.
புத்தர் ஒரு சிங்கத்தை நாய் மாதிரி வளர்த்ததாக சொல்வார்கள்.
புத்த மதம் சீன தேசத்திற்கு
வந்தபோது சீனர்களுக்குச்
சிங்கம் எப்படி இருக்கும் என்று தெரியாதாம்.
தங்களுக்குத் தெரிந்த நாயையே
சிங்கம் மாதிரி நினைத்தார்களாம்.
சீன சக்ரவர்த்தி MIng சிங்கம்
வளர்க்க ஆசைப்பட்டாராம்.
அதற்குப் பதில் ஒரு நாயை
வளர்த்தாராம். அதற்குப் பெயர்
Foo-dog என்று பெயர்.
திபெத், ஜப்பான் நாடுகளிலும்
Foo நாய்களுக்கு ராஜ மரியாதை
கிடைத்தது. Foo நாய்களைத்
திருடினால் மரண தண்டனை
கிடைக்கும்.
1800இல் வெள்ளைக்காரன்
சீனாவை தாக்கும்வரை
இந்த நாய்கள் தொடர்ந்து
சீன அரண்மனையில்தான் இருந்தன. யூத மதம்
யூதர்கள் நாய்கள் அசுத்தமானவை
என்றே நினைக்கிறார்கள்.
ஆனால் நாய்கள், விசுவாசமான
காவலர்கள் என்பதில் அவர்களுக்கு
எந்தச் சந்தேகமும் கிடையாது.
நாய்க்குச் சாப்பாடு
போட்டுவிட்டுத்தான்
சாப்பிட ஆரம்பிப்பார்கள்.
நாய்களைக் கொடுமைப்
படுத்துவதை யூதச் சட்டங்கள் அனுமதிப்பதில்லை. கொடுமையாளர்களுக்குக்
கடுந்தண்டனை உண்டு.
கிறிஸ்த்துவ மதம்
கத்தோலிக்க மதத்தில் அநேக
Saints நாய்கள் வைத்திருந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
St. Patrick, St. Margaret,
St. Giovanni Melchor,St.Roch
போன்ற மத குருமார்களைக்
கடவுளிடம் அழைத்துச் செல்வதற்கு
நாய்கள் உதவிசெய்தன.
பைபிளில், ஏறக்குறைய
40 இடங்களில் நாய்களைப்
பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.
கிறிஸ்துவர்களில் கணிசமாக
(40%) பேர்கள் தங்களுடைய
வளர்ப்பு மிருகங்கள் (pets)
தங்களுடன் சுவர்க்கத்திற்கு
வரும் என்று நம்புகிறார்கள்.
இஸ்லாம்
பொதுவாக, நாய்கள்
அசுத்தமானவை
என்று இஸ்லாம் கருதுகிறது.
நாய்கள் ஒரு நல்ல வேலைக்காரர்கள்
என்பதை இஸ்லாம் ஒத்துக்கொள்கிறது. நாய்களிடமும் மற்ற மிருகங்களிடமும்
மனிதன் தயை காட்ட வேண்டும்
என்பதை இஸ்லாம் அழுத்தமாகச் சொல்கிறது.
ஒரு பாவி ஒரு தாகமுள்ள
நாய்க்குக் தண்ணீர் கொடுத்ததால்
அவன் சுவர்க்கத்திற்கு சென்றான்
என்று ஒரு கதை உண்டு.
Zoroastrianism
இந்தப் பாரசீக மதத்தில் நாய்
ஒரு beneficent, clean and
righteous animal என்று
கருதப்படுகிறது.
அதனால் அதை நன்றாகப்
பராமரிக்க வேண்டும்.
வீட்டில் உள்ளவர்களுக்கு
அது செய்யும் சேவைகளைப்
பாராட்டி அதை நன்றாகப்
போஷாக்குடன் கவனித்துக்
கொள்வார்கள்.
நாய்களுக்கு விசேஷமான
spiritual values இருப்பதாக
நம்புகிறார்கள். ஒரு நாயின்
பார்வை புனிதத் தன்மையை ஏற்படுத்துமாம்.
அதே பார்வை அசுரர்களை
விரட்டியும் விடுமாம்.
சுவர்க்கத்திற்குப் போகும் பாதையில் சின்வாட் என்ற பாலம் இருக்கிறதாம்.
அதற்குக் காவல் நாய்கள்தான்.
ஒருவர் இறந்த சமயம் நாய்களுக்கு
நன்றாக சாப்பாடு போடுவது
ஒரு வழக்கம். நாய்களை எப்படி நடத்த வேண்டும் என்பதைப் பற்றின
விரிவான விளக்கங்கள்
அவர்களுடையப் புனிதமான
Vendidadஇல் சொல்லப்பட்டிருக்கின்றன. வீட்டு நாயைக் கொன்றவர்களுக்கு நரகம்தானாம்.
கர்ப்பமாக இருக்கும்
நாயை (உங்களுக்குச் சொந்தம் இல்லாவிட்டாலும்)
குட்டி பெறும்வரை
பராமரிக்க வேண்டும்.
Sag did என்ற ஒரு ஈமச் சடங்கில்
ஒரு நாயை இறந்தவர் உடல் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்று
அதைப் பார்க்க செய்வார்களாம்.
Sag did என்றால் Dog sight
என்று பெயர்.
அந்த நாய்க்கு 4 கண்கள்-
அதாவது,அதன் கண்களின் மேல்
2 புள்ளிகள் இருக்க வேண்டும்.
பிரபா:மற்ற நாகரீகங்களில் நாயைப்
பற்றி என்ன சொல்லியிருக்கிறது?
நான்: முதலில் மிஸோ அமெரிக்கன்
(Meso American) என்று சொல்லப்படும் நாகரீகத்தில் என்ன
சொல்லப்பட்டிருக்கிறது
என்பதைப் பார்க்கலாம்.
இது வேறு ஒன்றும் இல்லை.
மாயா, அச்டெக் என்று
சொல்லப்படுகிற நாகரீகம்தான்.
இந்தக் கலாச்சாரத்தில் நாய்களுக்கு
ஒரு தனி இடம் உண்டு.
இந்தப் பகுதியில் உள்ள
ஒரு நம்பிக்கை -
புதிதாக இறந்தவர்களின்
உடல்களைத் நீர்நிலைகளைத்
தாண்டி எடுத்துச் செல்லும்
ஒரே மிருகம் நாய்தான்—
என்பது.
சில இடங்களில் உடல்களோடு நாய்களையும் சேர்த்துப்
புதைப்பார்களாம்.
பாதாள உலகத்திற்கு வழிகாட்டிகள்
இந்த நாய்கள்தானாம்.
Meso American Calendar
ஒரு 20 day cycle.
10ஆவது நாள், நாய் இனத்தைக்
குறிப்பது.
Aztec புராணங்களில் ஒரு கதை:
4ஆவது சூரியன் வெள்ளத்தில் மூழ்கிவிட்டாராம்.
ஒரே ஒரு மனிதனும்
அவன் மனைவியும் தப்பிப் பிழைத்தார்களாம்.
அவர்கள் ஒரு மரக்கட்டையைப் பிடித்துகொண்டு
கரை சேர்ந்தார்களாம்.
கடற்கரையில் நெருப்பு மூட்டி
ஒரு மீனை வறுத்தார்களாம்.
நெருப்பின் புகை, 2
நட்சத்திரங்களை
மிகவும் பாதித்ததாம்.
Tezcatlipoca என்ற கடவுளுக்கு
ஒரே கோபம். அவர்களின் தலைகளை
வெட்டி அவர்கள் பின் பகுதியில்
வைத்து தைத்துவிட்டாராம்.
இதுதான் நாய்களின்
அவதாரக் கதை.
இன்னும் நிறைய கதைகள்
இருக்கின்றன...
பிரபா: மற்ற தேசங்களில் நாய்
எப்படி நடத்தப்படுகிறது?
நான்: மெசபடோமியாவில் நாய்க்கு
ஒரு கோவிலே இருக்கிறது.
முன்னாள் எகிப்தியர்கள் நாய்களை
Anubis என்ற கடவுளாகப் பார்க்கிறார்கள்.
சீன தேசத்தில் நாய்களுக்கு
ஒரு தனி மரியாதை.
சீன ஜோசியத்தில்
12 ராசிகளுக்கும்
12 மிருகங்களின்
பெயர்கள் உண்டு.
11ஆவது ராசி - நாய்:
1934, 1946, 1958, 1970,
1982, 1994, 2006, 2018,
2030, 2042
ஆகிய வருடங்கள் நாய்
வருடங்களாகும்.
இந்த வருடத்தில் பிறந்தவர்கள்,
தோழமை, நேரிடைப் போக்கு, மனிதாபிமானம் ஆகியவற்றைத்
தங்கள் குணங்களாகக் கொண்டவர்கள்.
சீனப் புது வருடத்தின் இரண்டாம் நாள் "நாய்களின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.
அன்றைக்கு நாய்களுக்கு
நன்றாகச்
சாப்பாடு போடுவார்கள்.
பிரபா: நாயின் குணங்கள் எவை?
நாயைப் பற்றின myths
ஏதாவது உண்டா?
விஞ்ஞான முறைப்படி
நாயின் Origin என்ன?
நாய்கள் ஓநாய்களிலிருந்து
வந்தனவா?
நான்:
கொஞ்சம் மூச்சு எடுத்துக்கோ...
பொறுமை....அவ்வயார் சொன்னபடி
"பொறுமை என்னும் நகை அணிந்து
பெருமை கொள்வீர்"
அடுத்த வாரம்வரை
பொறுத்திரு...
புராணம் தொடரும்....
No comments:
Post a Comment