Tuesday, May 07, 2013

அதிகம் தெரிந்திராத மாமணிகளில் ஒருவர்



உலகத்தில் உள்ள ஒவ்வொரு 
நாட்டிலும் வெவ்வேறு 
துறைகளில் மேதைகளும்
அறிவாளிகளும்,படைப்பாளிகளும் இருக்கிறார்கள்- 
இருந்துகொண்டும் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலரைத்தான் 
மக்கள் celebritiesஆக ஆக்கி
பேசி, எழுதி வருகிறார்கள். 
அந்த celebrities statusஐ 
விரும்பாமல்
"தான் உண்டு 
தன் வேலை உண்டு" 
என்று இருந்துகொண்டு 
அதே சமயத்தில் 
தாங்கள் தேர்தெடுத்துக்கொண்ட துறைக்காகப் பாடுபட்டு 
வாழும் மாமணிகள் 
நிறைய பேர் இருந்தார்கள்
இன்னும் இருக்கிறார்கள். 

அந்த மாமணிகளில் 
ஒருவர்தான் சமீபத்தில் 
வைகுண்ட பிராப்தி அடைந்த 
நல்லூர் அரசாணிபாலை 
ஸ்ரீ.உ.வே.
கோபாலதேசிகாசார்யர் 
ஸ்வாமிகள் 
(மீமாஸ சிரோமணி) 
(1914-2013). 














அவர் நிச்சயம் வைகுண்டத்திற்குத்
தான் சென்றிருப்பார். 
மகா பாபியான அஜாமேளன் 
கடைசி காலத்தில் 
"நாராயண" 
என்று சொன்னதனால் 
அவனுக்கு வைகுண்ட பிராப்தி 
கிடைத்தது என்று புராணிகர்கள் 
சொல்லிவருகிறார்கள். 
அப்படியிருக்க, வாழ்ந்த 
100 ஆண்டுகளிலும் 
கடைசி மூச்சு இருக்கும்வரை 
"ராமா, கிருஷ்ணாபெருமாளே" 
என்று சொல்லிவந்த 
பெரியவர் வேறு எங்கு 
சென்றிருப்பார்?

யார் இவர்? இவர் எதில் 
பாண்டித்தியம் அடைந்திருக்கிறார்
இவர் என்ன சாதித்திருக்கிறார்? 


நீங்கள் நினைக்கிற மாதிரியான அடாவடித்தனமான,
கர்வமான
ஆணவமான 
media celebrity 
இல்லை. 
ஒல்லியான, ஆறடி உயரமுள்ள,
தீட்சண்யமான 
கண்களுடைய 
ஒரு soft spoken பண்டிதர்
உபய வேதாந்தி. அதாவது 
தமிழ், சமஸ்கிருத 
மொழிகளில் குறிப்பாக 
வைணவத்தைப் பற்றின 
சாஸ்திரப் புராணங்களில்
பண்டித மேதை.
1914ஆம் ஆண்டு நல்லூரில் 
(வந்தவாசி பக்கம்) பிறந்தார். 
மதுராந்தகம் சமஸ்கிருதக் 
கல்லூரியில் ஆரம்பப் படிப்பு. 
பிறகு சென்னை சமஸ்கிருதக் 
கல்லூரியில் 
மீமாஸ சிரோமணி 
படித்தார். 
1942இல் ஸ்ரீ வல்லபாய் 
பட்டேல் கையினால் 
தங்கப் பதக்கம். 
பிறகு,மிகப் பெரிய சம்பளத்தில்   
45+24(பஞ்சபடி) =69 
புரசைவாக்கம் MCT M 
முத்தைய்யா செட்டியார் 
உயர்நிலைப் பள்ளியில் 
சமஸ்கிருத ஆசிரியராக 
இருந்தார். பணியிலிருந்து 
ஓய்வுபெற்ற 
பிறகு சென்னை பல்கலைக்கழக 
Oriental libraryஇல் உள்ள 
ஓலைச் சுவடிகளை 
(குறிப்பாக கிரந்த 
எழுத்தில் உள்ள சுவடிகள்) 
குறிப்பெடுத்து தமிழில் எழுதிக்கொடுத்திருக்கிறார். 
இந்தச் சேவை 10 ஆண்டுகள் 
நடந்தது
இவர் ஒரு பெரிய 
ஜோதிட மேதையும் கூட. 
சுதேசமித்திரன் பத்திரிகையில் 
ஜோசியப் பகுதியைத் 
தினசரி எழுதி வந்திருக்கிறார். 
85 வயதுவரை சிரஸாசனம் செய்துவந்திருக்கிறார். 
கடைசி காலம்வரை 
ஆசனங்கள் பண்ணுவதை 
விடவில்லை.
இவருடைய முதல் மனைவி 
ஒரு ஆண் குழந்தையைப் 
பெற்றுத் தந்துவிட்டு 
காலமாகிவிட்டார்கள். 
இரண்டாவதாக மணம்செய்து
கொண்ட பெண்மணி - 
ஒரு gem of a woman. 
மூத்தாளுடைய ஆண் 
குழந்தையோடு தனக்குப் பிறந்த 
மூன்று பையன்கள், இரண்டு 
பெண்களையும் 
நன்றாக வளர்த்து 
ஆளாக்கிவிட்டு 
10 வருஷங்களுக்கு முன் 
சுமங்கலியாகச் சென்றுவிட்டாள். 
வாத்தியாருக்கு
(அப்படித்தான் எல்லோரும் 
அவரை, சார், வாத்தியார்) 
என்று கூப்பிடுவார்கள். 
வாழ்க்கை முழுவதும் நிதி 
நெருக்கடி இருந்துகொண்டே 
இருக்கும். 
மனம் கோணாமல் 
குடித்தனத்தைச் செவ்வனே 
நடத்தி வந்தார்கள். 
சார், நினைத்திருந்தால் 
கார்பங்களா என்று 
ஒரு ஆடம்பர வாழ்க்கையைத் தேர்தெடுத்திருக்கலாம். 
எப்படி என்றால் அவரிடம்
ஒரு Magic Wand - 
மந்திரக்கோல் இருந்தது.
அது என்ன
அன்றும், இன்றும்
என்றும் எல்லோராலும் 
விருப்பத்தோடு நாடும் 
கலையில்- 
ஜோதிடக் கலையில் — 
அவர் ஒரு மேதை. 
அவர் ஒருக்காலும்
அந்த ஜோதிடத்தை 
விற்றுச் சம்பாதிக்க 
நினைத்ததில்லை. 
நினைத்திருந்தால் 
நான் மேலே சொன்னபடி 
வாழ்க்கை கிடைத்திருக்கும். 
அவர் அதை வியாபாரமாக 
ஆக்கிப் பலனடைய விரும்பவில்லை. முக்கியமாக, அவர்கள் 
மனைவியும் அவரை நச்சரித்துத் 
தொந்தரவு செய்யவில்லை.
"பெருமாள் பார்த்துப்பார்"- 
இதுதான் அவருடைய தாரக மந்திரம். அந்தப் பெருமாளும் அவரைக் கைவிடவில்லை. 
"ஓகோ" என்று இல்லாவிட்டாலும் 
அவர் தேவைகளை, அவருடைய 
சிஷ்யர்கள் மூலம் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார்.
அவர் நிறைய மாணவ
மாணவிகளுக்கு வேதாந்தம்
ஜோதிடம், உபநிஷத்துகள்
கீதை, பிரம்ம சூத்திரம்,
பாகவதம் என்று வெவ்வேறு 
பாடங்களைக் கற்றுகொடுத்து, விசுவாசமுள்ள சிஷ்யப் 
பரம்பரையை உருவாக்கியிருக்கிறார்.
காயத்திரி மந்திரத்தின் மேல் 
அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். 
வேதாந்த விஷயங்களைத் 
தெரிந்துகொள்ள விரும்பும் 
எந்த மாணவனும் 
24 லட்சம் காயத்திரி செய்த 
பிறகுதான் வேதாந்த ஆராய்ச்சியில் 
ஈடுபட வேண்டும் 
என்று சொல்லுவார். 
நிறைய பேருக்கு 
"மந்திர தீட்கைஷ" 
எடுத்துக்கொடுத்து 
அவர்களைத் 
தியானப் பயிற்சியில் ஈடுபடுத்தியிருக்கிறார். 
இவருடைய Literary 
சாதனைகள் நிறையவே 
இருக்கின்றன.
குறிப்பாகச் சொல்ல வேண்டியது.
1. ஸ்ரீ. ந்ருஸிம்ஹப்ரியாவில் - தொடர்ச்சியாக 
ஸ்ரீ.விஷ்ணு சகஸ்ர நாம 
பாஷ்யத்திற்கு விளக்க உரை 
எழுதிவந்தது 
(முதல் பாதி வேறு ஒருவர் எழுதியிருக்கிறார்.)
2. ராமாயண காவியத்திற்குப் 
பல வியாக்கியானங்கள் 
இருக்கின்றன. 
அவற்றில் சிறந்தது 
கோவிந்தராஜர் என்பவர் 
இயற்றிய "கோவிந்தராஜீயம்" 
பிரசித்தி பெற்றது. 
அது சமஸ்கிருதத்தில் உள்ளது. 
அதில் அபூர்வ விஷயங்கள் 
பற்பல உள்ளன.
அதை, ‘சார்எளிய தமிழில் எழுதியிருக்கிறார். 
பால காண்டம்
அயோத்தியா காண்டம்
சுந்தர காண்டம்
ஆரண்ய காண்டம் 
ஆகிய பகுதிகள் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. 
யுத்த காண்டமும்,கிஷ்கிந்தா 
காண்டமும் அவரால் முடிக்க 
முடியவில்லை.
3. அவருடைய மாணவி
பிரபா நாகராஜனுக்காக 
பரதமுனியுடைய நாட்டிய 
சாஸ்திரத்தில் உள்ள 
7000 செய்யுள்களையும் சமஸ்கிருதத்திலிருந்து 
தமிழில் மொழிபெயர்க்க 
உதவியுள்ளார். 
இதே மாதிரி தன் மாணவ 
மாணவிகளுக்குத் தேவையான 
அறிவையும் ஆலோசனைகளையும் அளித்துவந்திருக்கிறார்.

எல்லோருக்கும் 
ஆசானாகவும்,நண்பனாகவும், வழிகாட்டியாகவும்
நலம் விரும்பியாகவும் இருந்துவந்திருக்கிறார்.

மனதில் கல்மிஷம் இல்லாத 
ஒரு பெரிய மனுஷர்.
கோபப்பட்டுப் பார்த்ததில்லை.
எல்லோரும் நன்றாக இருக்க 
வேண்டும் என்று நினைத்தவர்.
குழந்தை சுபாவம்.
குங்குமப் பூ பிடிக்கும்
அதை மட்டும்தான் 
அமெரிக்காவிலிருந்து
கொண்டுவரக் கேட்பார்.
தான் பாலில் போட்டு 
சாப்பிட இல்லை
பெருமாளுக்குக் கொடுக்க.
விளம்பரத்தைத் தேடி 
ஒருபோதும் அலைந்ததில்லை.
தன் மேதாவிலாசத்தைத் 
தம்பட்டம் அடித்துக்கொள்ளாதவர்.
பணத்தைப் பெரிதாக 
எப்பொழுதும்
நினைத்ததில்லை.
பெருமாள் பார்த்துப்பார்’ 
என்று அசைக்க முடியாத 
நம்பிக்கை அவருக்கு.
நாமும் அப்படி நம்ப 
வேண்டும் என்று
ஆசைப்படுபவர்.
பெருமாள் பக்தர் — 
ஆனால் மற்ற
கடவுள்களின் விரோதி 
இல்லை.

இப்படி ஒரு எளிமையான 
மாமணியோடு 40 
ஆண்டுகளுக்கு மேல் ஒட்டி 
உறவாட சந்தர்ப்பம் கிடைத்ததை 
நானும் என் மனைவியும் 
பெரும் பாக்கியமாகக் 
கருதுகிறோம்.














வாழ்க குரு நாமம் -  
வாழ்க பெருமாள் நாமம்.
இவர் குரலை கேட்க,
கீழே உள்ள linkக்கு 
போகவும்




... கிளறல் தொடரும்.

1 comment:

seshadri said...

இவரால் மொழிபெயர்க்கப்பட்ட கோவிந்தராஜ்ஜியத்தின் தமிழ் மொழிபெயர்ப்புகள் எங்கு கிடைக்கும்? நன்றி