கட்டுரைத் தாமதத்திற்குக் காரணம்,
என்னுடைய 4 வார இந்தியப் பயணம்.
14 மாத இடைவெளிக்குப் பிறகு
சென்னை விஜயம்.
First Impression என்ன என்று கேட்டால்
ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம். "முன்னேற்றம்" எதிலும் எல்லாவற்றிலும் முன்பைவிட அதிகப்படி முன்னேற்றம்.
இட்லி/காபி விலை, காய்கறி விலை,
பாதைகளில் நெரிசல், noise polution,
நவீன மருத்துவமனைகளின்
எண்ணிக்கை, இளைஞர்களின்
கேளிக்கை, கொண்டாட்டங்கள்,
கிரிக்கெட் மோகம்—இப்படிப் பற்பல
விஷயங்களில் நல்ல முன்னேற்றம்.
எதிலும் குறைபாடு இல்லையா?
இருக்கிறது.
குறைந்துகொண்டுவருவது "
மனிதாபிமானம்."
எங்கு திரும்பினாலும்
"நமக்கென்ன?"
நம்மால் என்ன செய்ய முடியும்,
எல்லாம் நம் தலைவிதி,
இந்த அரசியல்வாதிகளிடம்
மாட்டிக்கொண்டு சாக வேண்டிய நிலை
என்று புலம்பிக்கொண்டே வாழ்க்கையை
நடத்தும் சுபாவம்.
தன்னம்பிக்கை வெகுவாகக் குறைந்துகொண்டுவருகிறது.
வருத்தமாக இருந்தாலும், சொந்த
பந்தங்களுடன் இருக்க வாய்ப்புக்
கிடைத்ததற்கு சந்தோஷப்பட்டுத்தான்
ஆக வேண்டும்.
என்னுடைய 4 வார இந்தியப் பயணம்.
14 மாத இடைவெளிக்குப் பிறகு
சென்னை விஜயம்.
First Impression என்ன என்று கேட்டால்
ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம். "முன்னேற்றம்" எதிலும் எல்லாவற்றிலும் முன்பைவிட அதிகப்படி முன்னேற்றம்.
இட்லி/காபி விலை, காய்கறி விலை,
பாதைகளில் நெரிசல், noise polution,
நவீன மருத்துவமனைகளின்
எண்ணிக்கை, இளைஞர்களின்
கேளிக்கை, கொண்டாட்டங்கள்,
கிரிக்கெட் மோகம்—இப்படிப் பற்பல
விஷயங்களில் நல்ல முன்னேற்றம்.
எதிலும் குறைபாடு இல்லையா?
இருக்கிறது.
குறைந்துகொண்டுவருவது "
மனிதாபிமானம்."
எங்கு திரும்பினாலும்
"நமக்கென்ன?"
நம்மால் என்ன செய்ய முடியும்,
எல்லாம் நம் தலைவிதி,
இந்த அரசியல்வாதிகளிடம்
மாட்டிக்கொண்டு சாக வேண்டிய நிலை
என்று புலம்பிக்கொண்டே வாழ்க்கையை
நடத்தும் சுபாவம்.
தன்னம்பிக்கை வெகுவாகக் குறைந்துகொண்டுவருகிறது.
வருத்தமாக இருந்தாலும், சொந்த
பந்தங்களுடன் இருக்க வாய்ப்புக்
கிடைத்ததற்கு சந்தோஷப்பட்டுத்தான்
ஆக வேண்டும்.
இப்போது கட்டுரைத் தொகுப்பின்
கடைசிப் பகுதிக்கு வருவோம்.
கடைசிப் பகுதிக்கு வருவோம்.
சென்னை மற்றும் பெரிய நகரங்களில்
நிலவும் இன்றைய அவல நிலை
இளைஞர்களிடம் இருக்கும்
குடிப் பழக்கம்.
நல்ல வேளை, அந்தப் பழக்கம்,
இன்னும் "Social drink" என்ற
நிலையில்தான் இருக்கிறது.
அந்த நிலை மாறி addiction
என்ற நிலைக்கு மாற நேரம்,
காலம் தேவையில்லை.
social drink நிலையிலேயே
இளைஞர்கள் செய்யும் அட்டகாசங்கள்
சில சமயங்களில் அளவுக்கு மீறியிருக்கின்றன.
குறிப்பாக, குடித்துவிட்டு கார்,
இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டி
நிறைய விபத்துகளை உண்டாக்குகிறார்கள்
என்பதைப் பற்றி நிறையவே மீடியா வெளிப்படுத்திவருகின்றன.
ஒரு சில பணக்கார, நடுத்தர வர்க்கத்தினரும்
இந்த வேலையில் ஈடுபட்டுவருகிறார்கள்.
குடித்துவிட்டு கார் மற்றும் இதர
வாகனங்கள் ஓட்டுவது
சட்டப்படி குற்றம். அதற்கான தண்டனையும்
கடுமை. ஆனால், நடைமுறையில்,
இந்தச் சட்டம் பெரும்பான்மையான
நிகழ்வுகளில் "toothless" ஆகத்தான் செயல்பட்டுவருகிறது.
நிலவும் இன்றைய அவல நிலை
இளைஞர்களிடம் இருக்கும்
குடிப் பழக்கம்.
நல்ல வேளை, அந்தப் பழக்கம்,
இன்னும் "Social drink" என்ற
நிலையில்தான் இருக்கிறது.
அந்த நிலை மாறி addiction
என்ற நிலைக்கு மாற நேரம்,
காலம் தேவையில்லை.
social drink நிலையிலேயே
இளைஞர்கள் செய்யும் அட்டகாசங்கள்
சில சமயங்களில் அளவுக்கு மீறியிருக்கின்றன.
குறிப்பாக, குடித்துவிட்டு கார்,
இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டி
நிறைய விபத்துகளை உண்டாக்குகிறார்கள்
என்பதைப் பற்றி நிறையவே மீடியா வெளிப்படுத்திவருகின்றன.
ஒரு சில பணக்கார, நடுத்தர வர்க்கத்தினரும்
இந்த வேலையில் ஈடுபட்டுவருகிறார்கள்.
குடித்துவிட்டு கார் மற்றும் இதர
வாகனங்கள் ஓட்டுவது
சட்டப்படி குற்றம். அதற்கான தண்டனையும்
கடுமை. ஆனால், நடைமுறையில்,
இந்தச் சட்டம் பெரும்பான்மையான
நிகழ்வுகளில் "toothless" ஆகத்தான் செயல்பட்டுவருகிறது.
மேல்நாடுகளில், குறிப்பாக,
அமெரிக்காவில் குடித்துவிட்டு கார்
ஓட்டும் பழக்கம், விளம்பரதாரர்கள்
சொல்லுவதுபோல், 99 சதவீதம் இல்லை.
இது எப்படி சாத்தியம்?
ரொம்ப சிம்பிள்: ஓட்டுநர் உரிமத்தையும்
குடிபோதையில் கார் ஓட்டுவதையும் இணைத்துவிட்டார்கள்.
விளக்கமாகச் சொல்லுகிறேன்...
அமெரிக்காவில் குடித்துவிட்டு கார்
ஓட்டும் பழக்கம், விளம்பரதாரர்கள்
சொல்லுவதுபோல், 99 சதவீதம் இல்லை.
இது எப்படி சாத்தியம்?
ரொம்ப சிம்பிள்: ஓட்டுநர் உரிமத்தையும்
குடிபோதையில் கார் ஓட்டுவதையும் இணைத்துவிட்டார்கள்.
விளக்கமாகச் சொல்லுகிறேன்...
அமெரிக்காவில், கார் வைத்திருப்பது
ஒரு luxury இல்லை.
மிக அவசியமான ஒன்று.
அமெரிக்க நகரங்கள், பெரும்பான்மை
city of distances.
ஓரிடத்திலிருந்து இன்னொரு
இடத்திற்குச் செல்வது சிரமமான
காரியம்.
public transport அநேக நகரங்களில்
குறைவாகச் செயல்படுகிறது.
மாணவர்கூட second hand கார்
வைத்திருக்கிறார்கள்.
கார் இல்லாதவர்கள் கார்
வைத்திருப்பவர்களின் உதவியை
நாட வேண்டியிருக்கும்.
ஒரு luxury இல்லை.
மிக அவசியமான ஒன்று.
அமெரிக்க நகரங்கள், பெரும்பான்மை
city of distances.
ஓரிடத்திலிருந்து இன்னொரு
இடத்திற்குச் செல்வது சிரமமான
காரியம்.
public transport அநேக நகரங்களில்
குறைவாகச் செயல்படுகிறது.
மாணவர்கூட second hand கார்
வைத்திருக்கிறார்கள்.
கார் இல்லாதவர்கள் கார்
வைத்திருப்பவர்களின் உதவியை
நாட வேண்டியிருக்கும்.
கார் ஓட்ட, ஓட்டுநர் உரிமம் தேவை.
இதுவே அடையாள அட்டையும்கூட.
கடுமையான தேர்வுக்குப் பிறகுதான்—
எழுத்துத் தேர்வு, செயல்முறைத்
தேர்வுக்குப் பிறகே இந்த உரிமம்
வழங்கப்படுகிறது.
"Something" கொடுத்து
இதைப் பெற முடியாது.
இதுவே அடையாள அட்டையும்கூட.
கடுமையான தேர்வுக்குப் பிறகுதான்—
எழுத்துத் தேர்வு, செயல்முறைத்
தேர்வுக்குப் பிறகே இந்த உரிமம்
வழங்கப்படுகிறது.
"Something" கொடுத்து
இதைப் பெற முடியாது.
ஒவ்வொரு traffic
offenceக்கும்
தண்டனை.
no parking spotஇல் பார்க் செய்வது,
no entry பாதையில் செல்வது,
குடித்துவிட்டு காரை ஓட்டுவது என்று
பற்பல குற்றங்கள்.
ரோடுகளில் போலிஸ்காரர்கள் வலம்வந்துகொண்டிருப்பார்கள்.
சில இடங்களில் குறிப்பாக
ஜங்ஷன்களில் காமராக்கள்
பொருத்தப்பட்டிருக்கும்.
ரோந்து செய்யும் காவலருக்கு உங்கள்
காரின் மேல் சந்தேகம் வந்தால்,
உங்களைத் துரத்திப்பிடித்து ரோடு
ஓரத்தில் நிறுத்தச் சொல்வார்.
உங்கள் காருக்குப் பின்னால் தன் காரை
நிறுத்திக் கொஞ்சம் நேரம்
காக்க வைப்பார். உங்களுக்குள்
ஒரு பதட்ட நிலையிருக்கும்.
கொஞ்ச நேரத்திற்குப் பிறகு உங்கள்
காரை நோக்கி வருவார்.
உங்கள் இரண்டு 2 கைகளும் கார்
steering wheelல் இருக்க வேண்டும்.
ஏதாவது காரணம் சொன்னால்
அது உங்களைச் சங்கட நிலைக்கு
கொண்டு செல்லும். நீங்கள் ஏதோ
துப்பாக்கியை எடுக்க முயற்சி செய்வதாக
அவர் நினைத்தால் உங்களைச்
சுடக்கூடத் தயங்க மாட்டார்.
உங்கள் பூர்வோத்திரங்களை-
licence, insurance-பரிசீலித்த பின்,
நீங்கள் தவறு செய்தவர்தான் என்று
அவர் முடிவு எடுத்தால்,
உங்களுக்கு டிக்கட் கொடுப்பார்.
பெரும்பான்மையான வேளைகளில்
அது fine ஆகத்தான் இருக்கும்.
அவர் டிக்கட் கொடுத்துவிட்டால்
அதற்கு அப்பீலே கிடையாது.
fineஐக் கட்ட வேண்டும்.
அல்லது நீதிமன்றத்தில் முறையீடு
செய்யலாம். அவ்வளவு மதிப்பு.
அந்தச் சாதாரண traffic policeகளுக்கு
(கொஞ்சம் கற்பனைபண்ணிப் பாருங்கள்.)
இங்கே போலிஸ்காரரை something
கொடுத்து சரிபண்ண முயற்சிப்போம்.
அல்லது பெரிய மனுஷன் பெயரை
உபயோகிப்போம்.
அமெரிக்காவில் அது நடக்காது.
தண்டனை.
no parking spotஇல் பார்க் செய்வது,
no entry பாதையில் செல்வது,
குடித்துவிட்டு காரை ஓட்டுவது என்று
பற்பல குற்றங்கள்.
ரோடுகளில் போலிஸ்காரர்கள் வலம்வந்துகொண்டிருப்பார்கள்.
சில இடங்களில் குறிப்பாக
ஜங்ஷன்களில் காமராக்கள்
பொருத்தப்பட்டிருக்கும்.
ரோந்து செய்யும் காவலருக்கு உங்கள்
காரின் மேல் சந்தேகம் வந்தால்,
உங்களைத் துரத்திப்பிடித்து ரோடு
ஓரத்தில் நிறுத்தச் சொல்வார்.
உங்கள் காருக்குப் பின்னால் தன் காரை
நிறுத்திக் கொஞ்சம் நேரம்
காக்க வைப்பார். உங்களுக்குள்
ஒரு பதட்ட நிலையிருக்கும்.
கொஞ்ச நேரத்திற்குப் பிறகு உங்கள்
காரை நோக்கி வருவார்.
உங்கள் இரண்டு 2 கைகளும் கார்
steering wheelல் இருக்க வேண்டும்.
ஏதாவது காரணம் சொன்னால்
அது உங்களைச் சங்கட நிலைக்கு
கொண்டு செல்லும். நீங்கள் ஏதோ
துப்பாக்கியை எடுக்க முயற்சி செய்வதாக
அவர் நினைத்தால் உங்களைச்
சுடக்கூடத் தயங்க மாட்டார்.
உங்கள் பூர்வோத்திரங்களை-
licence, insurance-பரிசீலித்த பின்,
நீங்கள் தவறு செய்தவர்தான் என்று
அவர் முடிவு எடுத்தால்,
உங்களுக்கு டிக்கட் கொடுப்பார்.
பெரும்பான்மையான வேளைகளில்
அது fine ஆகத்தான் இருக்கும்.
அவர் டிக்கட் கொடுத்துவிட்டால்
அதற்கு அப்பீலே கிடையாது.
fineஐக் கட்ட வேண்டும்.
அல்லது நீதிமன்றத்தில் முறையீடு
செய்யலாம். அவ்வளவு மதிப்பு.
அந்தச் சாதாரண traffic policeகளுக்கு
(கொஞ்சம் கற்பனைபண்ணிப் பாருங்கள்.)
இங்கே போலிஸ்காரரை something
கொடுத்து சரிபண்ண முயற்சிப்போம்.
அல்லது பெரிய மனுஷன் பெயரை
உபயோகிப்போம்.
அமெரிக்காவில் அது நடக்காது.
இப்பொழுது நம் கட்டுரையின்
மூலக் கருத்துக்கு வருவோம்.
போலிஸ்காரர் உங்களைக் குடிபோதையில்
ஓட்டுவதாகச் சந்தேகப்பட்டால்
நீங்கள் breathing testக்கு
தயாராக வேண்டும்.
உங்களை ஒரு குழாயில் ஊதச் சொல்வார்.
உங்கள் மூச்சில் எவ்வளவு
alcohol content இருக்கிறது என்பதை
அது சொல்லிவிடும். குறிப்பிட்ட அளவுக்கு
மீறி இருந்தால் உங்களை சார்ஜ் பண்ணி
டிக்கட் கொடுப்பார்.
மூலக் கருத்துக்கு வருவோம்.
போலிஸ்காரர் உங்களைக் குடிபோதையில்
ஓட்டுவதாகச் சந்தேகப்பட்டால்
நீங்கள் breathing testக்கு
தயாராக வேண்டும்.
உங்களை ஒரு குழாயில் ஊதச் சொல்வார்.
உங்கள் மூச்சில் எவ்வளவு
alcohol content இருக்கிறது என்பதை
அது சொல்லிவிடும். குறிப்பிட்ட அளவுக்கு
மீறி இருந்தால் உங்களை சார்ஜ் பண்ணி
டிக்கட் கொடுப்பார்.
முதல் தடவை குற்றத்திற்கு fine
மட்டும்தான் இருக்கும்.
இரண்டாம் தடவை குற்றத்துக்கு
3 மாதம் கார் ஓட்டக் கூடாது
என்று தடை விதிப்பார்கள்.
மூன்றாம் தடவை, உங்கள் licence
ஒரு வருடத்திற்கு ரத்து செய்யப்படும்.
ஒவ்வொரு குற்றத்தின்போதும்,
நீங்கள் traffic department classக்குச்
சென்று கவனமாகப் பாடம்
கேட்க வேண்டும்.
இதை எல்லாம் மனதில் வைத்து
99% பேருக்கு
‘குடிக்கத்தான் வேண்டுமா?’
என்ற கேள்வி ஏற்படும்.
அதன் விளைவு,
அமிர்தத்திற்கு ஒப்பானது
என்று பார்ட்டியில் மதுவை கொடுத்தாலும் முகர்ந்துபார்க்கக்கூடத் தயங்குவார்கள்.
ஒரு drinks பார்ட்டிக்கு இரண்டு
நபர்களைக் கூப்பிட்டிருந்தால்,
முதலிலே யார் திரும்பிப்போகும்போது
கார் ஓட்டுவது என்று
தீர்மானித்துக்கொண்டுவிடுவார்கள்.
திரும்பி கார் ஓட்டப்போகிறவர்,
நிச்சயமாக, கண்டிப்பாக
மது அருந்த மாட்டார்.
மட்டும்தான் இருக்கும்.
இரண்டாம் தடவை குற்றத்துக்கு
3 மாதம் கார் ஓட்டக் கூடாது
என்று தடை விதிப்பார்கள்.
மூன்றாம் தடவை, உங்கள் licence
ஒரு வருடத்திற்கு ரத்து செய்யப்படும்.
ஒவ்வொரு குற்றத்தின்போதும்,
நீங்கள் traffic department classக்குச்
சென்று கவனமாகப் பாடம்
கேட்க வேண்டும்.
இதை எல்லாம் மனதில் வைத்து
99% பேருக்கு
‘குடிக்கத்தான் வேண்டுமா?’
என்ற கேள்வி ஏற்படும்.
அதன் விளைவு,
அமிர்தத்திற்கு ஒப்பானது
என்று பார்ட்டியில் மதுவை கொடுத்தாலும் முகர்ந்துபார்க்கக்கூடத் தயங்குவார்கள்.
ஒரு drinks பார்ட்டிக்கு இரண்டு
நபர்களைக் கூப்பிட்டிருந்தால்,
முதலிலே யார் திரும்பிப்போகும்போது
கார் ஓட்டுவது என்று
தீர்மானித்துக்கொண்டுவிடுவார்கள்.
திரும்பி கார் ஓட்டப்போகிறவர்,
நிச்சயமாக, கண்டிப்பாக
மது அருந்த மாட்டார்.
இந்த deterrent
punishment
அதாவது உங்கள் ஓட்டுநர் உரிமம்
பறிபோகும் என்ற பயம்தான்.
குடிபோதையில் கார் ஓட்டும்
பழக்கத்தைக் குறைத்திருக்கிறது.
Deterrent punishmentஐ பற்றி
எழுதும்போது ஒரு ஞாபகம் வருகிறது.
அதாவது உங்கள் ஓட்டுநர் உரிமம்
பறிபோகும் என்ற பயம்தான்.
குடிபோதையில் கார் ஓட்டும்
பழக்கத்தைக் குறைத்திருக்கிறது.
Deterrent punishmentஐ பற்றி
எழுதும்போது ஒரு ஞாபகம் வருகிறது.
30 ஆண்டுகளுக்கு முன் ஒரு சிங்கப்பூர்
டாக்டருக்கு lift கொடுத்தேன்.
லஸ் வழியாகச் சென்றுகொண்டிருந்தோம்.
வழியில் நிறை ய பேர் ரோட்டில்
துப்பினார்கள்.
"என்ன சார், இந்தப் பழக்கம்"
என்று கேட்டார்.
நான் பதிலுக்கு "உங்கள் நாட்டில் எப்படி?
என்று கேட்டேன்.
அவர் சொன்ன பதில் இதுதான்.
"சார், நான் ஒரு பிரபல டாக்டர்.
ஒரு நாள் வருமானம் கிட்டத்தட்ட
30,000 ரூபாய். ஒரு நாள் ரோட்டில்
துப்பிவிட்டேன்.
பின்னாலேயே வந்த போலீஸ்காரர்
500 ரூபாய் அபராதம் விதித்தார்.
கொசுக்கடி மாதிரி நினைத்து
அபராதத்தைச் செலுத்திவிட்டேன்.
மறு மாதம் அதே மாதிரி நடந்தது.
மறுபடி 500 ரூபாய் அபராதம்.
யோசிக்க ஆரம்பித்தேன்.
வசதி இருப்பதற்காக ஒவ்வொருதரம்
துப்பினதற்காக 500 ரூபாய்
கொடுப்பது worthஆ என்று கேள்வி
கேட்டுக்கொண்டேன்.
அடுத்த தடவை துப்ப எண்ணம்
வரும்போது அடக்கி கொண்டு
வீட்டுக்குச் சென்று துப்பினேன்.
இன்றுவரை நான் fine கட்டினதில்லை.
இப்பொழுது தெரிகிறதா?
ஏன், சிங்கப்பூர் ரோடுகளில் உட்கார்ந்து
சாப்பிடக்கூடச் செய்யலாம்" என்று.
இங்கேயும் சட்டம் இருக்கிறது.
கடுமையான சட்டம்கூட.
ஆனால் அது படிப்படியாகச்
செயல்படும்போது குற்றவாளிகளுக்கு
"பயம்" விட்டுவிடுகிறது.
டாக்டருக்கு lift கொடுத்தேன்.
லஸ் வழியாகச் சென்றுகொண்டிருந்தோம்.
வழியில் நிறை ய பேர் ரோட்டில்
துப்பினார்கள்.
"என்ன சார், இந்தப் பழக்கம்"
என்று கேட்டார்.
நான் பதிலுக்கு "உங்கள் நாட்டில் எப்படி?
என்று கேட்டேன்.
அவர் சொன்ன பதில் இதுதான்.
"சார், நான் ஒரு பிரபல டாக்டர்.
ஒரு நாள் வருமானம் கிட்டத்தட்ட
30,000 ரூபாய். ஒரு நாள் ரோட்டில்
துப்பிவிட்டேன்.
பின்னாலேயே வந்த போலீஸ்காரர்
500 ரூபாய் அபராதம் விதித்தார்.
கொசுக்கடி மாதிரி நினைத்து
அபராதத்தைச் செலுத்திவிட்டேன்.
மறு மாதம் அதே மாதிரி நடந்தது.
மறுபடி 500 ரூபாய் அபராதம்.
யோசிக்க ஆரம்பித்தேன்.
வசதி இருப்பதற்காக ஒவ்வொருதரம்
துப்பினதற்காக 500 ரூபாய்
கொடுப்பது worthஆ என்று கேள்வி
கேட்டுக்கொண்டேன்.
அடுத்த தடவை துப்ப எண்ணம்
வரும்போது அடக்கி கொண்டு
வீட்டுக்குச் சென்று துப்பினேன்.
இன்றுவரை நான் fine கட்டினதில்லை.
இப்பொழுது தெரிகிறதா?
ஏன், சிங்கப்பூர் ரோடுகளில் உட்கார்ந்து
சாப்பிடக்கூடச் செய்யலாம்" என்று.
இங்கேயும் சட்டம் இருக்கிறது.
கடுமையான சட்டம்கூட.
ஆனால் அது படிப்படியாகச்
செயல்படும்போது குற்றவாளிகளுக்கு
"பயம்" விட்டுவிடுகிறது.
நாமும் ஏன் இந்த முறையை
காப்பி அடிக்கக் கூடாது.
சட்டத்தை மீறி நாம் செயல்பட்டால்
அதற்கான தண்டனையை அளிக்கும்
போலிஸ்காரை மதித்து
அந்த அபராதத்தைச் செலுத்தக் கூடாது.
"silly offenceக்குக் கூட
ஏன் அரசியல் செல்வாக்கை
நாட வேண்டும்?
நல்ல விஷயங்களை காப்பி
அடிப்பதில் தவறில்லை.
வெட்கப்பட வேண்டியதும் இல்லை.
இன்னும் நிறைய விஷயங்கள் காப்பி
அடிக்கத் தகுதிபெற்றவை.
இப்போதைக்கு இந்தக் கட்டுரைத்
தொகுதியை நிறுத்திக்கொண்டு
அடுத்த வாரம் வேறு விஷயங்களைப்
பற்றி அலசுவோம்.
காப்பி அடிக்கக் கூடாது.
சட்டத்தை மீறி நாம் செயல்பட்டால்
அதற்கான தண்டனையை அளிக்கும்
போலிஸ்காரை மதித்து
அந்த அபராதத்தைச் செலுத்தக் கூடாது.
"silly offenceக்குக் கூட
ஏன் அரசியல் செல்வாக்கை
நாட வேண்டும்?
நல்ல விஷயங்களை காப்பி
அடிப்பதில் தவறில்லை.
வெட்கப்பட வேண்டியதும் இல்லை.
இன்னும் நிறைய விஷயங்கள் காப்பி
அடிக்கத் தகுதிபெற்றவை.
இப்போதைக்கு இந்தக் கட்டுரைத்
தொகுதியை நிறுத்திக்கொண்டு
அடுத்த வாரம் வேறு விஷயங்களைப்
பற்றி அலசுவோம்.
(கிளறல் தொடரும்...)
1 comment:
It is a practice among the people who are violating law.It is due to the failure of law enforcing authority
Post a Comment