Monday, June 25, 2012

பலிக்காமல் போன ‘ஆரூடங்கள்’


சான்றோர், அறிஞர், நிபுணர் - 
இவர்கள் வாக்கு ஒருபோதும் பொய்யாகாது” 
என்பது உலக வழக்கு. 
அதே மூச்சில் யானைக்கும் அடி சறுக்கும்” 
என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

கீழே கொடுத்திருக்கும் ஆரூடங்களையும் 
அவற்றின் தற்கால நிலையையும் 
ஒப்பிட்டுப் பார்க்கும்போது 
எத்தனை யானைகளுக்கு 
அடி சறுக்கியிருக்கிறது 
என்பது புரியும்.

ஒவ்வொரு நூற்றாண்டு ஆரம்பத்திலும் 
பெரியபெரிய அறிஞர்களையும் 
விஞ்ஞானிகளையும் அவர்களுடைய
பொன்னான அபிப்பிராயங்களைக் கேட்க 
பேட்டி எடுப்பது பத்திரிகைகளுக்கு 
ஒரு விளையாட்டான பொழுதுபோக்கு. 
அப்படிப் பேட்டி எடுத்துப் பத்திரிகைகளில் 
பிரசுரமான சில பெரியவர்களின் கருத்துகளை 
இங்கே படியுங்கள். 
அவர்கள் சொன்ன கருத்துகள் 
பல விஷயங்களைப் பற்றியது. 
அவற்றில் சிலவற்றை இங்கே 
கொடுத்திருக்கிறேன்.

நீர்மூழ்கிக் கப்பல் - Submarine

நீர்மூழ்கிக் கப்பல் என்று ஒன்று வருவது 
சாத்தியம் என்பதை என்னால் 
கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியவில்லை. 
மிஞ்சி வந்தாலும் அது அதன் மாலுமிகளை 
மூச்சுமுட்டச் செய்து, நடுக்கடலில் 
தவிக்கவிடும் சாதனமாகத்தான் இருக்கும்.” 
இது H.G. Wellsஇன் ஆரூடம். 
H.G. Wells, British, Sci. fic. author, 1901

நடந்தது என்ன?

20ஆம் நூற்றாண்டில் நீர்மூழ்கிக் கப்பல்கள் 
வேகமாகத் தயார்செய்யப்பட்டு முதலாம் 
உலகப் போரிலும் 2ஆவது உலகப் போரிலும் 
நீர்மூழ்கிக் கப்பல்கள் இல்லாத கடற்படையே 
இல்லை என்ற நிலை ஏற்பட்டது. 
Strategic weapons என்று சொல்வார்களே
அதற்குச் சரியான உதாரணம் 
நீர்மூழ்கிக் கப்பல்கள்தான்.

விமானங்கள் (Aircraft)

ஆகாயத்தில் பறப்பது என்பது மனிதனால் 
முடியாத காரியங்களில் ஒன்று. 
ஆகாயத்தில் பறக்க ஒரு புதிய 
உலோகத்தையோ
ஒரு புதிய சக்தியையோ 
கண்டுபிடிக்க வேண்டும். 
அப்படிக் கண்டுபிடித்தாலும் 
ஒரே ஒரு ஆள்தான் - 
அதன் உரிமையாளர் அதில் 
பிரயாணம் செய்ய முடியும்.
சொன்ன பெரியவர். - Simon Newcomb, 
U.S. Astronomer, 1903.
Boeing 747, காற்றைவிட அதிவேகத்தில் 
செல்லும் போர் விமானங்களைப் 
இப்பொழுது அவர் பார்த்தால்?..........
அவர் முகத்தில் அசடு வழியாதா?

கணிப்பொறி (Computer)
கணிப்பொறிக்கு மார்கெட் இருப்பதாகத் 
தெரியவில்லை. ஒருவேளை, 
5 கணிப்பொறிகளே விற்றாலும் விற்லாம்.
- Thomas Watson, Chairman, IBM, 1943.
கணிப்பொறி தேவை என்று யாரும் 
சொல்ல மாட்டார்கள்.  
Ken Olson,    President, DEC, 
Makers of Mainframe Computers, 1977.

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க 
வேண்டாம்” இது பழமொழி
கம்யூட்டர் இல்லாத வீடு
ஒரு வீடா?” இது புதுமொழி.

அணுகுண்டு (Atom Bomb)

நம்முடைய முட்டாள்தனமானக் 
கண்டுபிடிப்பு 
இந்த அணுகுண்டுதான். 
இது வெடிக்கவே வெடிக்காது. 
வெடிபொருள் நிபுணனான 
நான் சொல்கிறேன்.
- Adm. William Leahy, U.S. Navy, 
speaking to President Truman, 1945

இந்தப் பெரியவர் யாரிடம் சொன்னாரோ
அவரேதான் (ஜனாதிபதி ட்ரூமன்) 
உலகத்தில் முதல் இரண்டு அணுகுண்டுகளைப் 
போட உத்தரவுபோட்டவர். 
இந்த இரண்டு குண்டுகள் — 
இப்போதைய கணிப்பில் சுண்டைக்காய் 
என்று சொல்கிறார்கள் — 
செய்த நாசத்தைப் பார்க்கிறபோது 
இந்தப் பெரியவரின் ஆரூடம் பலித்திருக்கக் 
கூடாதா என்று ஏங்குகிறோம்.

தொலைபேசி (Telephone)

தொலைபேசி என்கிற சாதனத்தில் நிறைய 
குறைபாடுகள் உள்ளன. 
அது ஒருவொருக்கொருவர் பேசிக்கொள்ள 
உதவும் சாதனமாக இருக்கவே முடியாது.
அமெரிக்கர்களுக்கு வேண்டுமானால் 
தொலைபேசி தேவையாக இருக்கலாம். 
பிரிட்டிஷ்காரர்களான நமக்கு 
இது தேவையில்லை. 
செய்திகளை எடுத்துச்செல்ல நமக்கு 
நிறைய எடுபிடி ஆட்கள் இருக்கிறார்கள்.
Sir William Freece, Chief Engineer, 
British Post Office 1876.

இந்த ஆரூடத்தைப் பற்றி என்ன சொல்ல
உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.

தொலைக்காட்சி (Television)
தொலைக்காட்சி என்பது 
தொழில்நுட்பரீதியில் சாத்தியமாக 
இருக்கலாம்
ஆனால் வர்த்தக ரீதியாகவும்
வருமான ரீதியாகவும் 
இது ஒரு தோல்வியாகத்தான் 
இருக்கும். 
இதில் நேரத்தைச் செலவழிப்பது வீண்.
- Lic De Frost, US Inventor, 
‘Father of the Radio’ 1926.
T.V. என்பது 6 மாத மோகம். 
மக்கள் ஒரு பெட்டியையே 
பார்த்துப்பார்த்து அலுத்துவிடுவார்கள்.
Darryl F Zanuck, Head of 20th Century Fox - 
1946


குறி தப்புவது ஒரு வழக்கமாக நடக்கிற 
விஷயம்தான். 
ஆனால், இந்த மாதிரியா....

கோடி கணக்கான மக்கள், "விரும்பி"
பார்த்துக் கொண்டிருக்கும் 
மெஹா சீரியலையும் 
IPL மாட்ச் களையயும் பார்க்க 
அவர்கள்  இருந்திருந்தால்......?

நீங்களே எழுதிகொள்ளுங்கள்.

மோட்டார் கார் (Automobile)

ஹென்றி ஃபோர்டு வக்கீல் 
மிச்சிகன் வங்கியின் தலைவரைப் 
பார்க்கச் சென்றபோது வங்கியின் 
தலைவர் சொல்கிறார்: 
குதிரைச் சவாரிதான் நிரந்தரம்
மோட்டார் கார் என்பது ஒரு தற்காலிக 
மோகம். அதனால் தயவுசெய்து 
ஃபோர்டு கம்பெனியில் 
உங்கள் பணத்தைப் போடாதீர்கள்.
President of Michigan Savings Bank  
advice to Henry Ford’s Lawyer asking him 
not to invest in Ford Motor Co, 1903.

அன்றைக்கு அந்த வக்கீல் 100 டாலர்கள் 
முதலீடு செய்திருந்தால்...

இந்த மாதிரி எத்தனையோ தப்பான 
ஆரூடங்கள் இருக்கின்றன. 
சொல்லிக்கொண்டே போகலாம். 
கொசுறுக்கு இரண்டு மட்டும்.

முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி ரீகன்
முன்னாள் ஹாலிவுட் சினிமா நடிகர். 
1964இல் வெளிவந்த The Best Man 
என்ற படத்திற்கு நடிகர்களைத் 
தேர்வுசெய்தவர்
ரீகனுக்கு ஜனாதிபதியாக நடிக்கச் 
சரியான முகவெட்டு இல்லை” 
என்று நிராகரித்துவிட்டார்.
United Artists Executive rejecting Reegan 
as a lead in 1964 film, The Best Man.

அவர் ஏன் ஜனாதிபதியாக நடிக்க வேண்டும்?

அடுத்தது ஹிட்லர்.

R.H. Naylor, லண்டன் ஸன்டே பேப்பரின் 
ஆஸ்தான ஜோஸியர், சொல்கிறார்
நான் அநேகம் தடவை ஹிட்லர் ஜாதகத்தைப் 
படித்து ஆராய்ந்து கட்டுரைகள் 
எழுதியிருக்கிறேன். அடித்துச்சொல்கிறேன் — 
ஹிட்லர் ஒரு யுத்தப் பிரியர் இல்லை. 
யுத்தம் என்று ஒன்று வருவதாக இருந்தால்
நிச்சயமாக முதல் அடி ஹிட்லருடையதாக 
இருக்காது.” (1939)

கடைசியாக வந்த செய்தி..

இவரையும் இவர் சந்ததிகளையும், இஸரேல்
அரசாங்கம்(யூதர்கள்) தேடி கொண்டிருப்பதாக 
கேள்வி...

நான் மேலே கொடுத்தது
ஒரு சின்ன சாம்பிள்தான். நூற்றுக்கணக்கான 
ஆரூடங்கள் பொய்யாகியிருக்கின்றன. 
பெரும்பாலும், பொய்யான ஆருடங்கள் 
உலக நன்மைக்காகத்தான்.

இத்தனை பேர் மண்ணைக் கவ்வினாலும்
ஆரூடங்கள் சொல்வது குறையவே இல்லை.
யாரும் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை

The Guardian - என்ற பிரிட்டிஷ் பத்திரிகை 
தன்னுடைய ஜனவரி 2011 இதழில் 
அடுத்த 25 வருடங்களுக்கான 
20 ஆரூடங்களை வெளியிட்டிருக்கிறது.

அதில் முக்கியமானவை.

எய்ட்ஸ் வியாதிக்கான தடுப்பு மருந்து 
கண்டுபிடிக்கப்படும். 
(அவசியம் இந்த ஆரூடம் பலிக்க வேண்டும் 
என்று பிரார்த்திக்கொள்ளுங்கள்.)

Quantum computing is the future. 
We'll play games to solve problems. 
We'll know what dark matter is. 
We'll feel less healthy. 
Secularists will flatter to deceive... 
இன்னும் பல... 
படிக்க விரும்பியவர்கள் கீழே உள்ள 
URLஐத் தட்டவும்.
இவற்றில் எவ்வளவு பலிக்கும்
எவ்வளவு இலக்கு நோக்கி 
வராமலேயே போகும்
பொறுத்திருந்து பாருங்கள்...


இதன் மத்தியில், ஹேஷ்யங்கள்
ஆரூடங்கள், ஜோசியங்கள் தொடர்ந்து 
வரும்.... வர வேண்டும்.

அவைகள் இல்லாவிட்டால்,வாழ்க்கை
போரடிக்கும்.
அவைகள், போரடிக்கும் வாழ்க்கைக்கு 
ஒரு டானிக்.

... கிளறல் தொடரும்.

1 comment:

RVRajan-Celebrating Life said...

Well researched articles. I admire your proficiency in Tamil. Congrats and keep it up.

R.V.Rajan