Tuesday, July 03, 2012

முதலாளித்துவத்திற்கு மாறிய சில பிரபல சோஷியலிஸ்ட்டுகள்.



சார்லஸ் ஆலிவர் (Charles Oliver) என்ற 
பத்திரிகையாளர்ஒரு பத்திரிகையில் 
(Investor's Business Daily) 
எழுதுகிறார்: 
முதலாளித்துவக் கொள்கைகளை 
எதிர்த்துப் பேசும் ஒரு இடதுசாரி 
இளைஞனைப் பார்த்தால்
அவனுடைய முகத்தை உங்கள் 
உள்மனதில் ஆழமாகப் பதித்து
வைத்துக்கொள்ளுங்கள். 
அநேகமாக, இன்னும்10,20 ஆண்டுகளில் 
அவன் நிச்சயமாக முதலாளித்துவத்தின் 
பெருமையைப் புகழ் பாடிக்கொண்டிருப்பான்.” 

இது விளையாட்டுக்காக எழுதிய 
வாசகம் இல்லை. 

இப்பொழுது உலகத்தில் பிரபலமாக 
இருக்கும் சில முதலாளிகள்
தங்கள் வாழ்க்கையின் 
ஆரம்பத்தில் தீவிர 
சோஷியலிஸ்ட்டுகளாகவோ
கம்யூனிஸ்ட்டுகளாகவோ 
இருந்திருக்கிறார்கள்.

அவர்களில் சிலரைப் பற்றித் தெரிந்து
கொள்வோமா?


நிறைய பேர், இடதுசாரி கொள்கைகளை 
விட்டுவிட்டு, முதலாளித்துவத்தைத் 
தழுவுகிறார்கள் என்றால் 
மார்க்கெட் பொருளாதாரம்
(Free Market Economy) எவ்வளவு 
சக்தி வாய்ந்தது என்று புரிந்துகொள்ளலாம்.
                   
அமெரிக்க ஜனாதிபதி 
ரோனால்ட் ரீகன், 
 போன்றவர்கள் 
 இடதுசாரிகளாகத்தான் 
 தங்கள் வாழ்க்கையை
 ஆரம்பித்தார்கள். 



இவர்களில் சில பேருக்கு இந்தக் 
கொள்கை மாற்றம்தங்கள் 
வாழ்க்கையில் அவர்கள் பெற்ற
முதிர்ச்சியின் காரணமாக இருக்கலாம்.

முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்
வின்ஸ்டன் சர்ச்சில்
சொல்கிறார்:






“20 வயதில் சோஷியலிஸ்டாக 
இல்லாதவனுக்கு இதயமே கிடையாது. 

40 வயதில்அவன் கன்ஸர்வேட்டிவாக 
மாறவில்லையானால்
அவனுக்கு மூளையே கிடையாது.

ரூபர்ட் முர்டாக்

வின்ஸ்டன் சர்ச்சில் சொன்ன கூற்றை 
அப்படியே நிரூபித்தவர்களில் 
முதலிடம் வகிப்பவர் 
ரூபர்ட் முர்டாக் (Rupert Murdoch). 







இவர் ஒரு பத்திரிகை சாம்ராஜ்யத்தின் 
அதிபதி - 
பல பத்திரிகைகளுக்கும் பல மீடியாக்களுக்கும் 
சொந்தமானவர். 
இவர் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர். 
இவர்,50களில்,ஆக்ஸ்போர்ட்
பல்கலைக்கழகத்தில் 
படித்துக்கொண்டிருக்கும்போது 
இவருக்கு பெயர் - “Red Rupert”, 
“Rupert the Red.” 
சோஷியலிசக் கொள்கைகளில் 
அவ்வளவு தீவிரம்.. 
அவருக்கு 21 வயது இருக்கும்போது 
அவருடைய தகப்பனார் காலமானர். 
க்ஷீண தசையில் ஓடிக்கொண்டிருந்த 
2 பத்திரிகைகளை இவருக்குச் சொத்தாக 
வைத்துவிட்டுப் போய்விட்டார். 
இதற்கு பின், முர்டாக் தன்னுடைய மீடியா 
சாம்ராஜ்யத்தை விரிவாக்கச் செயல்பட்டார். 
இந்த அனுபவம், அவருடைய 
சின்ன வயதுக் கொள்கைகளிலிருந்து 
வேறுபட ஒரு தூண்டுகோலாக அமைந்தது.
70 களில் வலதுசாரி தலைவர்களான ரீகன்
மார்கெரட் தாட்சர் இவர்களுடன் தொடர்பு 
ஏற்பட்டது. அவருடைய பத்திரிகைகளில் 
இவர்களை ஆதரித்து, முதலாளித்துவக் 
கொள்கைகளைப் பரப்ப உதவிசெய்தார்.

முர்டாக் மாதிரி எல்லோருக்கும் 
முதலாளித்துவக் கொள்கை மேல் 
படிப்படியாகப் பிடிப்பு ஏற்படவில்லை.

சில பேருக்கு, அவர்கள் வாழ்க்கையில் 
ஏற்பட்ட ஒரு சில சம்பவங்கள்
அவர்கள் கொள்கை மாற்றத்திற்கு 
வித்தாக அமைந்திருக்கின்றன. 
உதாரணத்திற்கு
டேவிட் ஹாரோவிட்ஜ் 
என்ற முன்னாள் கம்யூனிஸ்ட் 
ஆதரவாளரை எடுத்துக்கொள்வோம்.







இவருடைய கம்யூனிஸப் 
பெற்றோர்கள் இவரை ஒரு 
“Red Diaper Baby”யாக 
கம்யூனிஸக் கொள்கைகளை 
ஊட்டி வளர்த்துவந்திருக்கிறார்கள்.

இவரே, 60களில் New Left Politicsல் 
ஈடுபட்டிருக்கிறார். 
ஆனால், இவருக்கு 
ஆரம்ப காலத்திலிருந்தே 
New Leftஇன் 
anti-intellectualism கொள்கையில் 
ஈடுபாடு கிடையாது. 
இவரை முற்றிலும் மாற்றியது 
Black Panther குழு செய்த கொலை. 
Betty Van Patter என்ற இவருடைய 
கணக்காளரைNew Leftஇன் அங்கமான 
Black Van Pantherகள் கொலை செய்தது 
இவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தன்னுடைய கொள்கைகளை 
மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்தார்.
“If you destroy civil society, 
you'll wind up with a 
totalitarian state” 
இவர் இப்பொழுது President of the Center 
for the Study of Popular Culture. 

இவருக்கு மானஸ குரு
இன்னொரு மாஜி இடதுசாரி
F.A. Hayek.

F.A.Hayek, 
1974இல் பொருளாதாரத்திற்காக 
நோபல் பரிசு பெற்றவர்.



1922இல், இவர் வீயன்னாவில் 
படித்துக் கொண்டிருந்தபோது
ஒரு தீவிர சோஷியலிஸ்ட்.

பிற்காலத்தில் இந்தப் பொருளாதார மேதை. 
Free Market Economyஐப் பற்றி நிறைய 
பேசிஎழுத ஆரம்பித்தார். 
இவருடைய தாக்கம் 
பலருக்கு சோஷியலிஸத்தைப் 
பற்றிச் சரியாகத் தெரிந்துகொள்ளப் 
பயன்பட்டது. 

Hessen என்ற இன்னொரு பெரிய படிப்பாளி 








ஜனாதிபதி ஐசன்ஹோவருக்கு 
எதிராகக் கறுப்பு கொடி பிடித்தவர். 
ஐசன்ஹோவர் ஜெயித்தால் அமெரிக்கா 
பாசிச நாடாக மாறிவிடும் என்று 
பிரசாரம் பண்ணியவர். 
இவர் சொல்கிறார்: 
தொழிற்புரட்சி தொழிலாளிகளை 
நசுக்கும் ஒரு புரட்சி என்று நம்பிவந்தேன். 
Hayek போன்றவரின் புத்தகங்களைப் 
படித்த பிறகுதான், என்னுடைய கொள்கைகள் 
தப்பானவை என்று தெரிந்துகொண்டேன். 
என்னையும் மாற்றிக்கொண்டேன்.

இந்த லிஸ்ட், ஒரு மெகா T.V. ஸீரியல் மாதிரி. 
எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டிக்கொண்டு 
போகலாம்.

ஒரு ideaவைத் தெரிந்துகொள்ள 
இது போதும் என்று நினைக்கிறேன்.

எல்லா “isms”ல் நன்மை, தீமை இருக்கிறது. 
ஆனால், முதலாளித்துவ கொள்கையில் 
மற்ற கொள்கைகளைவிட கொஞ்சமாக 
(Negatives) எதிர் மறைகள் இருக்கின்றது.

படிக்க ஆர்வம் உள்ளவர்கள்
கீழ்கண்ட புத்தகங்களைப் படிக்கலாம்.

Hayek's “The Road to Serfdom”
Ayn Rand's “Capitalism, the unknown ideal”
“Mises” “Socialism”
Frederic Bastiat's “The Law”

கொசுறு:

If you have 2 cows
Socialism :     :   
you give one to your neighbour
Communism :    
you give them to your govt and 
the govt gives  you some milk.
Facism :            
You keep the cow ,give the milk 
to the Govt, then the govt. 
sells you some milk.           
New Dealism :   
You shoot one & milk the other, 
then you pour the milk down the drain.
Nazism  :          
The Govt. shoots you 
and keeps the cows.
Capitalism:        
You sell one and buy a bull.

...கிளறல் தொடரும்.

No comments: