Tuesday, September 11, 2012

10 "முடியாதது”கள் (Cannots)


முடியாததுஎன்ற வார்த்தையையே 
அகராதியிலிருந்து எடுத்துவிட வேண்டும் 
என்பது சுய ஊக்கம் தரும் (Self Motivation) 
பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் அடிக்கடி 
வற்புறுத்தும் வாக்கியம்.

உன்னால் முடியும்என்ற நம்பிக்கையை 
வளர்க்க வேண்டியது அவசியம்தான். 
ஆனால், “எல்லாமே முடியும்என்ற 
வாதத்தை ஒத்துக்கொள்ள முடியாது. 
ஒரு விளையாட்டான உதாரணம். 
ஒரு நாடகத்தில் நாகேசுக்கும் 
மேஜர் சுந்தர்ராஜனுக்கும் வாதம். 
மேஜர் சொல்லுவார்,  
என்னால் எது வேணுமானாலும் 
செய்ய முடியும்” என்று சவால் விடுவார்.

நாகேஷ் பதிலுக்கு சார், தோற்றுவிடுவீர்கள். 
எங்கே, டூத்பேஸ்ட் டியூபிலிருந்து வெளிவரும் 
பேஸ்டை மறுபடி டியூபுக்குள் வையுங்கள்
பார்க்கலாம்.என்பார். 
ஜோக்தான்! ஆனால் சிந்திக்க வேண்டிய 
விஷயம்தானே. 
இதே மாதிரி-, நிறைய முடியாததுகளை 
நம்முடைய வாழ்க்கையில் சந்திக்கிறோம். 
சில முடியாததுகளை நாம் கட்டாயம் 
ஆராய்ந்து செயல்பட வேண்டும். 
அப்படிபட்ட 10 ‘முடியாததுகளைப் 
பற்றி இப்பொழுது பார்ப்போம்.

இவை சமீப காலத்தில் 
எழுதப்பட்டவை அல்ல. 
100 ஆண்டுகளுக்கு முன்னால் 
ஒரு பாதிரியாரால் எழுதப்பட்டவை. 
அப்பப்போ,இதை ஞாபகப்படுத்திக்கொண்டு 
அரசியல்வாதிகளில் சிலர் இதைப் 
பயன்படுத்திக்கொள்வார்கள்.

யார் இந்தப் பாதிரி
இதோ, அவருடைய Bio-data.


William J. H. Boetcker (1873 - 1962) 
பிறந்தது ஹாம்பர்க், ஜெர்மனி நாட்டில். 
சிறு வயதிலேயே அமெரிக்காவிற்குக் 
குடிபெயர்ந்தார். நியூயார்க் நகரில் 
பிரஸ்பெடேரியன் (Presbyterian) 
என்ற கிறிஸ்துவ ஸ்தாபனத்தின் 
Minister (பாதிரி). 
நல்ல பேச்சாளி. மக்களை ஊக்குவித்து 
நல்லவர்களாகச் செயல்படப் 
பாடுபட்டவர். இவரைப் பற்றி 
வேறு எந்தக் குறிப்பும் கிடையாது.

ஆனால் இவரை, இன்னும் 
ஞாபகப்படுத்திக்கொண்டிருப்பது
1914இல் இவர் எழுதிய ஒரு சிறு 
துண்டுப் பிரசுரம். 
"Ten Cannots" - by the 
Rev. William J. H. Boetcker.
துரதிருஷ்டவசமாக இவர் எழுதிய 
பிரசுரத்தைப் பிற்காலத்தில் தவறுதலாக 
ஆபிரகாம் லிங்கன் எழுதியதாகப் 
பிரசாரம் செய்தார்கள். 
அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனும்
லிங்கன் பெயரையே உபயோகித்தார். 
தற்போது, இது தவறு என்று தெரிந்து 
Boetckerக்கு உண்டான மரியாதை 
தரப்படுகிறது.

இவர் எதற்காக எழுதினார்
தனிப்பட்ட ஒரு நபர், சமுதாயத்தில் 
எப்படிப் பொறுப்பாக இருக்க வேண்டும் 
என்பதைச் சில முடியாததுகள் 
மூலம் விளக்கினார். 
இந்த முடியாததுகளைத் தவிர்த்தால்தான் 
உண்மையான சுதந்திரம் வரும் 
என்று நம்பினார். 
அவர் எழுதிய 10 “முடியாததுகளின் 
தமிழாக்கமும், ஆங்கில மூலமும் 
கொடுக்கப்பட்டிருக்கின்றன.
1.சிக்கனத்தைத் தவிர்த்து, சுபிட்சத்தைக் 
கொண்டுவர முடியாது.

2. வாழ்க்கையில் உயர்ந்த அந்தஸ்தில் 
உள்ள பெரிய மனிதர்களைக் கவிழ்த்து 
அடிமட்டத்திலிருக்கும் மனிதர்களை 
உயர்த்த முடியாது.

3.பலசாலிகளை பலவீனமாக்கி
பலவீனர்களை பலவான்களாக 
ஆக்க முடியாது.

4.சம்பளம் கொடுக்கும் முதலாளியைக் 
கீழே தள்ளித் தொழிலாளியைத் 
தூக்கிவிட முடியாது.

5.பணக்காரனை அழித்து ஏழைக்கு 
உதவ முடியாது.

6.வருமானத்திற்கு மேல் செலவுசெய்து 
பிரச்சினைகளிலிருந்து தப்ப முடியாது.

7.ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு
சகோதர பாசத்தை வளர்க்க முடியாது.

8.கடன் வாங்கிப் பாதுகாப்பை 
அடைய முடியாது.

9.மனிதனின் ஊக்க உணர்ச்சியையும் 
சுதந்திரத்தையும் நசுக்கிவிட்டு 
தைரியத்தையும் நன்னடத்தையையும் 
வளர்க்க முடியாது.

10.தனிமனிதன் தன் சொந்தக் கால்களில் 
நின்று செய்ய வேண்டிய காரியங்களைச் 
செய்ய விடாமல் சதாகாலம் 
அவனுக்கு உதவிசெய்துகொண்டு 
இருக்க முடியாது.

Ten cannots by the 
Rev.William J.H.Boetcker

1.You cannot bring about prosperity 
by discouraging thrift.
2. You cannot help small men 
by tearing down 
big men.
3. You cannot strengthen the weak 
by weakening the strong.
4. You cannot lift the wage earner 
by pulling down the wage payer.
5. You cannot help the poor man 
by destroying the rich.
6. You cannot keep out of trouble 
by spending more than your income.
7. You cannot further the brotherhood 
of man by inciting class hatred.
8. You cannot establish security on 
borrowed money.
9. You cannot build character and 
courage by taking away men's 
initiative and independence.
10. You cannot help men permanently 
by doing for them what they could 
and should do for themselves.

எவ்வளவு உண்மையான வாக்கியங்கள். 
100 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட 
வாக்கியங்கள். 
இன்றைய நிலைக்கும், 
பொருந்தியனவாக இருக்கிறதென்றால்
மனிதன் மாறவே இல்லை என்பதுதான் 
அர்த்தம். 
History repeats itself
சரித்திரம் திரும்ப வரும், 
என்ற வாக்கியம் உண்மையாக இருக்கலாம். 
காரணம், மனிதன் சரித்திரப் பாடத்தை, 
மறந்து செயல்படுவதனால். 
இன்றைய இந்தியப் பொருளாதாரத்தைக் 
குறிப்பாக, தமிழ் நாடு பொருளாதாரத்தைப் 
பார்த்தால், அது ஒரு
"Freebie" society (எல்லாம் இலவசமயம்)
ஆகத்தானே இருக்கிறது. 
யாரோ ஒரு பெரியவர் சொல்லியிருக்கிறார் 
மனிதனுக்கு தினம் ஒரு மீனைப் பரிசாகக் 
கொடுப்பதற்குப் பதில், அவனுக்கு 
மீன்பிடிக்கக் கற்றுக்கொடுஎன்று. 
எந்தச் சமுதாயம், தன் சொந்தக் காலில் 
நிற்க முயற்சிக்கிறதோ
அந்தச் சமுதாயம்தான் செழிப்புடன் 
இருக்கும்.

ஏழு தேசியக் குற்றங்கள்என்று 
இவர் பேசிய கருத்துக்கள் 
சிந்திக்க வேண்டியவை.     
I don't think- 
நான் சிந்திப்பது இல்லை                        -    
I don't know -
எனக்குத் தெரியாது 
I don't care -
எனக்கு அக்கறையில்ல
I am too busy-
நான் ரொம்ப பிஸி     
I leave well enough alone-
ஆளை விடு
I have no time to read 
and find out   -      
எனக்குப் படித்துத் 
தெரிந்துகொள்ள நேரமில்லை
I am not interested-
எனக்கு ஆர்வம் இல்லை


 ... கிளறல் தொடரும்



                                                        





No comments: