Tuesday, September 18, 2012

உங்களை வேலையிலிருந்து தூக்கப்போவதற்கான அறிகுறிகள்


"Hire and Fire"  
வேலை கொடுப்போம் - 
வேலையிலிருந்து நீக்குவோம் - 
என்ற கொள்கையைப் பின்பற்றும் 
அமெரிக்கா மற்றும் 
ஐரோப்பிய நாடுகளில் வேலைபார்க்கும் 
நபர்களுக்காக எழுதப்படுகிற 
கட்டுரை இது. 
இந்தியாவிற்குப் பொருந்தாதா?
என்ற கேள்வி எழலாம். 
ஆனால் இந்தியா 
ஒரு "Hire only" நாடாச்சே
"Fire"  பண்ணுவது என்பது 
எப்போதாவது நடக்கும் 
அதிசய நிகழ்ச்சி அல்லவா?

எப்படியோ"அவரைப் பிடிச்சு
இவரைப் பிடிச்சு 
வேலையை வாங்கிவிட்டால் 
(குறிப்பாகசர்க்காரிலோ,
தொழிற்சாலையிலோ) 
ரிடயர் ஆகும்வரை நிம்மதியாகக் 
காலத்தைக் கடத்திவிடலாம். 
வேலையை விட்டுத் தூக்கிவிடுவார்கள் 
என்ற பயமே இல்லாமல்
அவரவர்கள் தொழில் தர்மத்தை 
நடத்திக்கொள்ளலாம். 
ஏதாவது தப்பு-தண்டா 
பண்ணி மாட்டிக்கொண்டால் 
(operative word -மாட்டிக்கொண்டால்) 
மிஞ்சிமிஞ்சி ஒரு 
தண்ணி இல்லாத காட்டிற்கு  
மாற்றப்படுவார்கள். 
இந்தக் காலத்தில் அது ஒரு 
தண்டனையாகவே கருதப்படுவதில்லை. 
ஏனெனில்எல்லா இடங்களுமே 
தண்ணி இல்லாதக் காடாகத்தானே 
இருக்கிறது! 
புது மொழியில் சொல்ல வேண்டுமானால் 
வசூல் வராத,பண்ண முடியாத 
இலாகாவுக்கு மாற்றல் செய்யலாம்.
தொழிற்சாலைகளைப் பற்றிக் 
கேட்கவே வேண்டாம். 
முதலாளிக்குத் தொழிற்சாலையை 
ஆரம்பித்து நடத்துவதுதான் வேலை. 
நஷ்டம் அடைந்து தொழிலை மூடலாம் 
என்று அவர் நினைத்தால் அது 
மகா பெரிய தேசத் துரோகமாகக் 
கருதப்படும்.
இப்படி  Hire only -No Firing 
என்ற கொள்கையைத் 
தொடர்ந்து ஆதரிக்கும் நாட்டில் 
யாரைஎப்படி வேலையை 
விட்டுத் தள்ளுவது
வேலை போய்விடும் என்ற 
பயமில்லையானால்
accountability - கடமை உணர்ச்சி 
எப்படி வளரும்?
மேல் நாடுகளில் நிலைமை வேறு.


கையில் காசுவாயில் தோசை 
என்பதுபோல் 
வேலை செய்தால் காசு
வேலையில் சுணக்கம் காட்டினாலோ
ஒருவருடைய வேலை தேவையற்றதாக 
கம்பெனி கருதினாலோ
முடிவு — pink slip -
அதாவது வேலையிலிருந்து 
கல்தாதான்.
ஐயோ பாவம் என்ற சொல்லுக்கு 
சான்ஸே இல்லை.
தப்புப் பண்ணியவர்களுக்கு உடனே 
சீட்டு கிழிக்கப்படும் என்ற நிலை 
இருந்தாலும்
மற்றவர்களுக்கு வேலை நீக்கம் 
வரப்போகிறது 
என்பதை நேர்முகமாகவோ
சில குறிப்புகளினாலோ 
அறிவிக்க முயற்சிகள் எடுப்பார்கள். 
புத்திசாலி ஊழியர்கள் அந்த அறிகுறிகளைப் 
புரிந்துகொண்டு வேறு வேலை 
தேட ஆரம்பிப்பார்கள்.

அந்த அறிகுறிகள் என்ன?

பல கம்பெனிகளிலிருந்து திரட்டப்பட்ட 
சில அறிகுறிகளைக் கீழே காணலாம்.

1.உங்கள் ஸ்தாபனத்தை 
இன்னொரு ஸ்தாபனம் 
take over செய்தாலோ
இன்னொரு கம்பெனியுடன் 
mergerஆனாலோ
அதை ஒரு எச்சரிக்கையாக 
எடுத்துக்கொண்டு வேறு வேலை 
தேட முயற்சி செய்யலாம். 
புது முதலாளி(boss)க்கு உங்கள் சேவை 
தேவைப்படும் என்ற அவசியமில்லை.

2.உங்கள் ஸ்தாபனம் நஷ்டத்தில் 
ஓடிக்கொண்டிருக்கிறது. 
மற்ற பகுதிகளில் ஆள் குறைப்பு 
நடந்துகொண்டிருக்கிறது. 
எச்சரிக்கை.

3.உங்கள் "Boss"ன் நடத்தையில் 
ஒரு மாற்றம் தெரிகிறது. 
இதுவரை நீங்கள் விடுமுறைக்குப் போவதைத் 
தடுத்து வந்தவர், திடீரென்று கூப்பிட்டு 
"நீங்கள் ஏன் விடுமுறையில் செல்லக் கூடாது? 
என்று கேட்டால் கொஞ்சம் எச்சரிக்கையாக 
இருக்க வேண்டும். 
"You are indispensable"
(உங்கள் சேவை தவிர்க்கமுடியாதது)  
என்று சொன்ன வாய்,
"I can manage without you" 
(நீங்கள் இல்லாமலேயே 
சமாளித்து கொள்கிறேன்)
என்று சொன்னால் - 
அர்த்தம் புரியவில்லையா?

4.உங்களுக்குக் கொடுத்துவந்த 
சில விசேஷ சலுகைகள் நிறுத்தப்படும். 
நீங்கள் இதுவரை அனுபவித்து வந்த 
"car parking" facility 
வாபஸ் பெறபடுவது 
ஒரு signal.

5.வழக்கமாக உங்களுக்குக் 
கொடுக்கப்படும் 
பரிசுகள் பல காரணங்களுக்காக 
நிறுத்தப்படும்.

6.முக்கியமான மீட்டிங்குகளுக்கு 
உங்களுக்கு அழைப்பில்லை. 
உங்களுக்குப் பதிலாக 
உங்களுக்குக் கீழே வேலைப் பார்க்கும் 
ஊழியர்கள் பங்கு எடுத்துகொள்வார்கள்.

7.நீங்கள் loop‘ ல் வெளியே 
இருப்பீர்கள். 
அதாவது கம்பெனியின் முக்கிய 
நிகழ்வுகளிலும் மற்ற முடிவுகளிலும் 
உங்கள் பங்கு இருக்காது. 
சில சமயங்களில் உங்களுக்குத் 
தெரியாமலேயே அநேக முடிவுகள் 
எடுக்கப்படும்.

8.திடீரென்று முக்கியம் இல்லாத 
பணிகளைச் செய்ய உத்தரவுகள் வரும்.

9.உங்களுடைய அன்றாட வேலை 
அட்டவணையை (work flow) 
மேலிடம் கேட்டால்
உங்கள் மேல் உள்ள 
நம்பிக்கைக் குறைந்துவிட்டது 
என்று புரிந்துகொள்ளுங்கள்.

10.நீங்கள் கஷ்டப்பட்டு 
உருவாக்கிய team 
கொஞ்சம் கொஞ்சமாக 
உடைக்கப்படும்.

11.உங்களை மாதிரி தகுதியுள்ள 
புதியவர்களை வேலைக்கு 
அமர்த்தி அவர்களுக்குப் பயிற்சி அளிக்க 
உங்களை வேண்டிக்கொள்வார்கள்.

12.இதுவரைநண்பர்களாகப் பழகி வந்த 
உங்கள் சக ஊழியர்கள் உங்களைத் 
தவிர்க்க முயற்சித்தால் 
அது ஒரு நல்ல அறிகுறியில்லை. 
உங்களைப்பற்றி உங்களுக்கு
தெரியாமலேயே ஏதோ ஒரு விஷயம்
அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

வருமுன் காப்போம் என்பது 
எக்காலத்திற்கும் எல்லோருக்கும் 
பொருந்தும்.

பி.கு. மேற்சொன்ன அறிகுறிகள் 
தனியார் துறையில் வேலை பார்க்கும் 
இந்திய ஊழியர்களுக்கும் 
பொருந்தும்.


... கிளறல் தொடரும்.


No comments: