Tuesday, November 20, 2012

முதியோர்களை வெறுத்து ஒதுக்குவது சரியா?


தவறு-என்கிறது, 
எல்லா நாடுகளிலும் சொல்லப்படும்
கர்ண பரம்பறை கதைகள்.

அதற்கான ஒரு திருஷ்டாந்த கதை……..

ஒரு ஊரில்,ஒரு ராஜா இருந்தார்.
அவருக்கு நல்ல ஆலோசனை சொல்ல,
எப்போதும், அவருடன் நிறைய
முதிய அறிவாளிகள் இருந்தனர்.
ராஜ்யம் செழிப்பாக இருந்தது. 
மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். 
அந்த ராஜாவுக்கு ஒரு மகன்.
அவனுக்கு அவன் அப்பாவுடன் 
இருக்கும் முதியோர்களை 
கண்டாலே பிடிக்கவில்லை.
"இந்த கிழங்கள் எல்லாம் 
பழைய கொள்கைகளை 
கடைப்பிடித்து நாட்டை 
கெடுக்கின்றனர்.
நான் பதவிக்கு வந்தவுடன் 
இவர்களுக்கு ஒரு வழி பண்ணுகிறேன் "
என்று கருவிக் கொண்டிருந்தான்.

ராஜா காலமானார்.
பையன் ராஜாவானான்.
முதல் வேலையாக,
எல்லா முதியோர்களும்
நாட்டை விட்டு வெளியேற வேண்டும் 
என்று உத்தரவு போட்டான்.
எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள்.
"முதுமை கெட்டது-இளமை நல்லது" 
என்ற மன நிலையில் இருந்த 
ராஜா தன் முடிவை மாற்றிக் 
கொள்ளவில்லை. 
எல்லா முதியோர்களும் நாட்டை 
விட்டு  வெளியேறினார்கள்.
ராஜா தன்னைச் சுற்றி ஒரு இளைஞர் 
கூட்டத்தை சேர்த்துக் கொண்டான்.

எங்கும்,அழுகை குரல்-
ஒரு வீட்டைத் தவிர..


அந்த வீட்டில் இருந்த இளைஞனுக்கு 
தன் வயதான அப்பாவை காட்டுக்கு 
அனுப்ப மனதில்லை.
எப்படியாவது அவரை காக்க 
வேண்டும் என்று எண்ணி அவரை 
தன் வீட்டு ரகசிய அறையில் 
ஒளித்து வைத்தான்.

சிறிது நாளைக்குப் பிறகு,
அந்த ராஜா நாட்டுக்கு ,
அதிக பலம் உள்ள பக்கத்து 
நாட்டு அரசனிடமிருந்து 
ஒரு தூதுவன் வந்து,
"அரசே,எங்கள் மாமன்னர் 
உங்களுக்கு ஒரு புதிர் 
அனுப்பியிருக்கிறார்.
இந்த புதிருக்கான விடையை 
7 நாள்களுக்குள் 
நீங்கள் சொல்ல வேண்டும்.
விடை சரியாக இருந்தால்,
மாமன்னர், உங்கள் நாட்டை 
ஒன்றும் செய்ய மாட்டார்.
விடை தப்பானால்,
உங்கள் நாட்டின் மேல்
படை எடுத்து,ஜயித்து,
உங்கள் நாட்டு மக்களை 
அடிமையாக்கி கொள்வார்." 
என்று சொன்னான்.
"புதிர் என்ன?"
என்று ராஜா கேட்டான்.
தூதுவன், 
"இதோ என் கையில் இருக்கும் 
கட்டை ஒரு இள மரத்துக்கு 
சொந்தமானது.இதில் எந்த பகுதி 
மேல் மரத்திலிருந்து வந்தது, 
என்று கண்டு பிடித்து 
சொல்லவேண்டும்"
என்று சொன்னான்.

தூதுவன் சென்ற பிறகு 
ராஜாவுக்கு ஒரே கவலை.
அவனுக்கு போரில் விருப்பமில்லை.
ஏனெனில்,தோல்வி நிச்சயம்.
தன்னுடைய இளம் வயது
ஆலோசகர்களுக்கு 
புதிருக்கு விடை தேட 
உத்தரவு போட்டான்.

ஒருத்தருக்கும் விடை தெரியவில்லை. 
6 நாள்கள், ஆகிவிட்டது.

நாட்டு மக்களுக்கு, 
ஒரே சோகம்.

நம் கதாநாயகனுக்கும் 
கவலை.
ஒளிந்திருந்த தந்தை கேட்டார்,
"மகனே ஏன் முகத்தில் சோகம்"என்று.
மகன் தந்தையிடம் புதிரைப் பற்றி 
சொன்னான்.
"பூ!இவ்வளவு தானா?
கவலையை விடு.
நாம் அடிமைகளாக போவதில்லை.
இதோ புதிருக்கான விடை "
என்று மகனுக்கு விளக்கினார்.

மறு நாள்.நம் கதாநாயகன்,
அரச சபைக்குச் சென்று
ராஜாவிடம் சொன்னான்.
"அரசே.தயவு செய்து தண்ணீர் 
நிரம்பிய ஒருவாளியை கொண்டு வர 
உத்திரவு போடுங்கள்."என்றான்.

அப்படியே ஒரு தண்ணீர் உள்ள 
வாளி கொண்டுவரப்பட்டது.
நம்முடைய கதாநாயகன் 
அந்த வாளித் தண்ணீரில் 
கட்டையை மிதக்கவிட்டான்.
கட்டையின் ஒரு பகுதி 
தண்ணீரில் மூழ்கியது.
மற்ற பகுதி தண்ணீருக்கு 
வெளியே தெரிந்தது.
"அரசே,எந்த பகுதி வெளியே 
தெரிகிறதோ,அது தான் 
மேல் மரத்தை சேர்ந்தது"
என்று கதாநாயகன் சொன்னான்.
தூதுவன் "சரியான விடை' என்று 
அங்கிருந்து வெளியேறினான்.

ராஜாவுக்கு ரொம்பவே மகிழ்ச்சி.
கதாநாயகனைப் பார்த்து,
"எப்படி உனக்கு விடை தெரிந்தது"
என்று கேட்டான். கதாநாயகனும்,
"அரசே,என்னை மன்னித்து விடுங்கள்.
நான் பொய் சொல்லப் 
போவதில்லை.
உங்கள் கட்டளைப்படி, 
நான் என் வயதான தகப்பனாரை  
காட்டுக்கு அனுப்பவில்லை.
இத்தனை நாள்கள், என் வீட்டில்
ஒளித்து வைத்திருந்தேன்.
அவர் தான், இந்த புதிருக்கு 
விடைசொல்லி நம் நாட்டை 
காப்பாற்றிருக்கிறார்."என்றான்.
ராஜாவுக்கு வெட்கமாக இருந்தது.
"ஆஹா,எவ்வளவு பெரிய தப்பு 
பண்ணி விட்டேன்.
ஒரு முதியோரின் அனுபவமும் 
புத்திசாலித்தனமும் அல்லவா 
இந்த நாட்டை காப்பாற்றியிருக்கு.
இப்போது எனக்கு புரிகிறது.
அறிவு,வயதினால் பெற்ற 
அனுபவத்தினால் தான் 
உண்டாகிறது.
Old is gold-
என்பதை புரிந்து கொண்டேன்"
என்று சொல்லி, காட்டுக்கு 
அனுப்பிய எல்லா முதியோறையும் 
உடனே நாட்டுக்கு திரும்ப 
கட்டளையிட்டான்.

இந்த கதை, கிழக்கு ஐரோப்பிய 
நாடுகளில் சொல்லப்படும்
நாடோடி கதைகளில் ஒன்று.

இதே கதை,
அனேகமாக எல்லா நாட்டு 
Folkloreலும் இருக்கிறது.
கதையின் உருவகத்தில்(Structure) 
ஒரு மாறுதலும் இல்லை.
புதிர்களிலும் புதிர்களின் 
எண்ணிக்கையிலும் 
தான் மாற்றம் உண்டு.

உதாரணத்திருக்கு:

ருமேனிய நாட்டுக் கதை:

ஒரு டிராகனிடமிருந்து (பூதம்) 
ஒரு நாட்டுக்கு ஆபத்து.
அது ஒரு குகையில் இருந்தது.
அந்த குகைக்குள் நிறைய வளைவுகள்.
உள்ளே போனால் திரும்பி 
வருவது கடினம்.
ராஜா எல்லா யுவர்களுக்கும் 
கட்டளை இட்டார்-
பூதத்தை கொல்ல-
நம் கதாநாயகனின் வயதான 
தந்தை அவனிடம் சொன்னார்.
"மகனே,நீயும் உன் நண்பர்களும் 
நிச்சயமாக பூதத்தை கொல்லுவீர்கள்.
ஆனால்,குகையிலிருந்து திரும்பி 
வருவது கஷ்டம்.
இதோ அதற்கு ஒரு உபாயம்.
இந்த போருக்கு, ஒரு கறுப்பு பெண் 
குதிரை அதன் குட்டி இரண்டையும் 
எடுத்துக் கொண்டு போ.
குகை வாசலில் குட்டியை 
கொன்று விடு.
பிறகு குகைக்குள் போ"என்றார்.
அதே மாதிரி அவன் செய்தான்.
ஆனால்,யாரிடமும்  குட்டியை
கொன்றதற்கான காரணத்தை 
சொல்லவில்லை.
குகைக்குள் சென்று பூதத்தை 
கொன்ற பிறகு,யாருக்கும் 
எப்படி வெளியே வருவது 
என்று தெரியவில்லை.
நம் கதாநாயகன்,உடனே 
குதிரையை தட்டி விட்டான்.
அதுவும் குட்டியிருக்கும் இடத்தை 
மோப்பம் பிடித்து எல்லோரையும் 
குகை வாசலுக்கு கொண்டு 
சேர்த்தது. 
ராஜாவுக்கும்,எல்லோருக்கும் 
மகிழ்ச்சி.
கதையின் மற்ற பகுதி 
முந்தய மாதிரி.

உங்களுக்கு தெரிந்த புதிர்களை 
சேர்த்து புதுக் கதை சொல்லலாம்.

இதன் உட்கருத்து தெரிந்து கொள்ள 
ரொம்ப சிரமப் பட வேண்டாம்.

முதியோரை அலட்சியப்படுத்துவது 
என்பது ஒரு பழக்கமாகி வருகிறது.
இது ஒரு வருந்த தக்க சூழ்நிலை.
காரணங்களை அலசிப் பார்க்காமால்.
முதியோருக்குண்டான மதிப்பை 
நாம் தந்து தான் ஆகவேண்டும்.

இன்றைய இளசுகள்
கவனத்திற்கு:
"முதியோர்" என்ற நிலை
உங்களுக்கும் ஒரு நாள்
வரும்.

இன்றைய இளசு,
நாளைய பழசு

கிளறல் தொடரும்.......









2 comments:

பாலாஜி said...

Good one. பெரியவர்கள் பெரும்பாலும் அலட்சியப்படுத்தப்படுகிறார்கள். வெறுத்து ஒதுக்கப்படுவதில்லை. இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் உங்கள் கட்டுரையின் சாராம்சம் கண்டுகொள்ளப் படவேண்டியதே.
அன்புடன்
பாலாஜி

ஜுபைர் சிராஜி said...

எழுத்துகளின் அளவுகளில் கவனம் செலுத்தவும் படிப்பதற்கு சிரமமாக உள்ளது பெரிய எழுத்தும் சில சமயம் சடைவை ஏற்படுத்தும்