Friday, January 11, 2013

பெரு நாட்டில் நவராத்திரி- பகுதி 1


நவராத்திரி என்பது நம்மூரில் கொண்டாடப்படும் தேவி பண்டிகையைக் குறிக்கும் சொல் அல்ல. 
‘ 9 நாட்கள்என்பதன் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு. 
போன வாரமே பெரு நாட்டில் 
என் குடும்பத்தோடு செலவழித்த 
9 நாட்கள் விடுமுறையைப் பற்றி எழுதப்போகிறேன் என்று எச்சரித்திருக்கிறேன்.












3 /4 பகுதிகளாக எழுதப்போகும் 
அந்தத் தொகுப்பின் முதற் பகுதி இதோ:
பயணக் கட்டுரை எழுதுவது இதுதான் என்னுடைய கன்னி (maiden attempt) முயற்சி.

இத்தனை ஆண்டுகளில் நான் படித்த பயணக் கட்டுரைகள் இரண்டுதான்அதுவும் தசரதர் ஆண்ட காலத்தில்”—அதாவது long long ago—ஒன்று, தேவன்  ஆனந்த விகடனில் எழுதிய “5 நாடுகளில் 50 நாள்கள்.இரண்டாவது, பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய வெங்கடம்முதல் குமரிவரை”. நானே படிக்காத பயணக் கட்டுரைகளை மற்றவர்களின் மேல் திணிப்பது மனதுக்கு ஒவ்வாத விஷயம்தான். 
இருந்தும், நான் எழுதத் துணிந்ததற்குக் காரணம் நான் விஜயம் செய்த 
தென் அமெரிக்கக் கண்டம் இந்திய மக்களுக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லாத கண்டம் என்று என்னுள் எழுந்த 
ஒரு கணிப்பு. 


ஐரோப்பா, வடஅமெரிக்கா கனடா, ஆஸ்திரேலியா, சீனா என்று பல நாடுகள் வெவ்வேறு காரணங்களுக்காக 
இந்திய மக்களிடம் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. 
ஆனால் தென்அமெரிக்கக் கண்டமோ, பெரும்பகுதி ஆப்பிரிக்கக் கண்டமோ (விதிவிலக்கு தென்ஆப்ரிக்கா-கிரிக்கெட் மூலம்) மீடியாமூலம் அவ்வளவாக பிரசித்தம் அடையவில்லை.
தென்அமெரிக்கக் கண்டத்தில் மிகப் பெரிய நாடுகளான பிரேஸில், அர்ஜென்டைனா football வீரர்களான பீலே, மரடோனா மூலம் இந்தியர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. 
3ஆவது பெரிய நாடான பெரு நாட்டைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? தெரியாவிட்டால் குடிமுழுகியா போய்விடும்? நியாயமான கேள்வி. 
ஆனால் எத்தனை நாள்தான் இன்னும் நாம் திரும்பத்திரும்ப "கல் தோன்றி மண் தோன்றாக் காலம் முதல்" இருக்கும் 
நம் நாட்டின் பெருமையைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கப்போகிறோம்?
அந்த "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில்" மற்ற நாகரிகங்களும் 
உலகத்தில் வெவ்வேறு பகுதிகளில் உலாவிவந்திருக்கின்றன. 
அதில் உலாவிவந்த பழைய நாகரிகத்திற்கு ஒரு உதாரணம் பெரு நாடு.
இன்றைக்குப் பெரு நாட்டைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அதிகம் உபயோகப்படும் சொல் 
"இன்கா நாகரிகம்"தான். 










நம்முடைய நாட்டில் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் இருந்தாலும் 
குப்தர்கள் ஆட்சியை "Golden Age"  
என்று சொல்வதுபோல் பெரு நாட்டிலும் இன்கா ராஜ்யத்தை Golden Ageஆகக் கருதுகிறார்கள். 
16ஆம் நூற்றாண்டில் ஸ்பானியர்களால் 
அது அழிக்கப்பட்டது என்பது வேறு விஷயம். 
இன்கா செழிப்பு, இன்கா architecture என்று எல்லோரும் புகழ்பாடியுள்ளார்கள்.
ஆனால், இப்பொழுதுதான், பெரு நாட்டு நாகரிகம் மிகவும் பழமையானது
3000 - 1800 B.C. "Cotton Preceramic" என்று சொல்லப்படும் காலத்திலேயே 
சீரும் சிறப்பாக வாழ்ந்து வந்திருக்கிற 
ஒரு சமுதாயம் என்று தெரியவந்திருக்கிறது.
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது 
ஒரு மக்கள் குடியிருக்கும் பகுதி. 
காலம் 2700 B.C. கண்டுபிடிக்கப்பட்ட 
இடம் Coral (114 miles from Lima-Capital of Peru) 










சரித்திரத்தில ஆர்வம் உள்ளவர்கள் 
internet மூலமாக நிறைய தெரிந்துகொள்ளுங்கள்.
பெரு நாடு பழைய பெருமையைப் பாடிக்கொண்டிருக்கவில்லை.
பெரு நாடு, இன்று ஒரு 
vibrant, democratic county. 
சுருக்கமாக, அதன் அரசியல் சரித்திரம்இன்கா சாம்ராஜ்யத்தை வெற்றிகொண்ட ஸ்பானியர்கள் 1542ஆம் ஆண்டு லீமாவை தலைநகராகக் கொண்டு தங்கள் ஆதிக்கத்தை வளர்த்துகொண்டார்கள்.
1821ஆம் ஆண்டு பெரு ஸ்பெயினிலிருந்து விடுபட்டுச் சுதந்திர நாடாயிற்று. 
இதை நடத்திக் கொடுத்தவர்கள் 
ஒரு ஆர்ஜென்டைனா நாட்டவரும், வெனிசுவேலா நாட்டவரும்.
1968ஆம் ஆண்டிலிருந்து 1980வரை ராணுவ ஆட்சி. அடுத்த 10 ஆண்டுகள் ஒரு பதட்டமான நிலை. 
உண்மை ஜனநாயகம். 
1990இல் Alberto Fujimori ஜனாதிபதியானார். 2000வரை இருந்தார். நன்மைகள் சில செய்தாலும் 
கடைசியில் லஞ்ச ஊழலில் சிக்கி 
இன்று ஜெயிலில் வாசம் செய்துவருகிறார்.
2011இல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இன்றைய ஜனாதிபதி - 
ஓலன்டா ஹயூமாலா (Ollanta Humala). 









இன்றைக்கு பெரு ஒரு வளரும் நாடாக உலாவிக்கொண்டிருக்கிறது. 
நாங்கள் விஜயம் செய்த இடங்களில் எல்லாம் நிறையவே சுற்றுலாப் பிரயாணிகளைக் கண்டோம். 
அதனால் நாங்களாகவே எடுத்த முடிவு "பெரு ஒரு சுற்றுலா நாடு. அதுதான் அதனுடைய முக்கியமான வருமானம்" என்று. அது தப்பு என்று எங்கள் கைடு கொடுத்த விளக்கம் சொல்லிற்று.
ஆச்சரியம், ஆனால் உண்மை.
பெரு நாட்டின் முக்கிய வருமானம் தங்கத்திலிருந்து. U.S. Geological Surveyயின்படி தங்கம், வெள்ளி, தாமிரம் படிவங்களில் பெரு 3ஆவது இடத்தை வகிக்கிறது. தங்கச் சுரங்கங்களிலிருந்து முறைப்படி எடுக்கும் தங்கம் தவிர, ஆற்றோரங்களிலும் ஏரிக்கரைகளிலும் சாதாரண மக்கள் தண்ணீரை அலசி எடுக்கும் தங்கம் பொருளாதாரத்தை மிகவே உயர்த்தி இருக்கிறது. 








2ஆவது வருமானம்-காட்டில் இருக்கும் மரங்களிலிருந்து. 
3ஆவதுதான் சுற்றுலா வருமானம்.
சுற்றுலா இடம் என்றாலே
நம் கவனத்திற்கு வருவது, பிச்சைக்காரர்களின் தொந்தரவும் வியாபாரிகளின் நச்சரிப்பும்.
10 நாட்களில் நாங்கள் பார்த்த பிச்சைக்காரர்கள் மூன்று பேர் - 
புது வருஷ விழாவின்போது சர்ச்சுக்கு ரொம்ப தூரம் தள்ளி மெளனமாக உட்கார்ந்துகொண்டிருந்தார்கள்.
எப்படி இதைச் சமாளிக்கிறார்கள் என்பது தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம்.
நம்முடைய கோவில் நிர்வாகிகளுக்கு நன்றாகவே பயன்படும்.
கைடு சொன்ன பதில், பிரமிப்பை உண்டாக்கியது.
"பெரு நாட்டினர் தன்மானம் உள்ளவர்கள். பிச்சை எடுக்க வெட்கப்படுபவர்கள்" என்று. உண்மையா? கற்பனையா
further study தேவை.
நாணய மதிப்பு பொருளாதார மேன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 2.5 Soles (ஸோல்ஸ்). அதுதான் அந்த நாட்டு நாணயம். நம்முடைய நாட்டில் ஒரு டாலருக்குக் கிடைப்பது 55 ரூபாய். 
நீங்களே சிந்தியுங்கள்.
பெருவைப் பற்றிய முகவுரை போதும் 
என்று நினைக்கிறேன்.
இப்பொழுது எங்கள் பயண விவரத்திற்கு வருவோம்.
டிசம்பர் 24ஆம் தேதி, மதியம் United Airways விமானத்தில் New Jersey, லிபர்டி ஏர்போர்டில் இருந்து புறப்பட்டோம்.
 7 1/2 மணி நேர விமான பயணம்.
பாஸ்போர்ட், அது இது என்று 
வெளிநாட்டு பிரயாணத்திற்குத் 
தேவையான எல்லா விஷயங்களையும் கேட்டார்கள். உண்மையிலேயே 
இது வேறு ஒரு நாட்டுப் பயணம். 
ஆனால், பிசிநாரி விமானக்காரர்கள் 
இதை உள்நாட்டுப் பயணம்என்று அவர்களாகவே தீர்மானித்துக்கொண்டார்கள். 
விளைவு, வெஜிடேரியனுக்குப் பட்டிணி. காசுகொடுத்து வாங்கினாலும் கிடைக்காது. ஜூஸ் கேட்டால் முன்னெல்லாம் அந்த canஐ கொடுப்பார்கள். இப்பொழுது ஒரு கிளாஸில்தான் கொடுக்கிறார்கள். தப்பித்தவறி with ice என்று சொல்லிவிட்டால் போதும்
airlinesக்கு எக்கச்சக்க மிச்சம். 
முக்கால்வாசி ice கிளாஸில் கொஞ்சம் தொண்டை நனைய ஜூஸ் கிடைக்கும். இந்த மாதிரி மிச்சம் பிடித்து விமானம் 
ஒரு மில்லியன் டாலர்கள் soft drinksலியே மிச்சம் பண்ணினார்கள். 
வாழ்க விமான பொருளாதாரம்.
பிரயாணம் பரபரப்பு ஒன்றும் இல்லாமல் லீமா (தலைநகர்) விமான நிலையத்தை அடைந்தது. அரை மணி நேரத்தில் குடியேறல் கஸ்டம்ஸ் சடங்குகளை முடித்துவிட்டு வெளியே வந்துவிட்டோம். அமெரிக்கக் குடிமக்களுக்கு விசா கிடையாது. 
ஒரு ஸ்டாம்ப் பேப்பரைத் தந்து 
பத்திரமாக வைத்துக்கொண்டு 
திரும்பிப் போகும்போது கொடுக்கச் சொன்னார்கள்.
கிறிஸ்துமஸ் Eve ஆனதால், ஒரே விளக்குகள் மயம். 
லீமா மற்றைய அமெரிக்க நகரங்கள் போல்தான் இருந்தது. 
6 lane traffic, lane discipline, 
horn அடிப்பதில்லை. 
வழிநெடுக நியான் விளக்குகளால் 
ஆன கடைகளின் போர்டுகளைப் பார்த்துக்கொண்டு வந்தோம். 
ஆச்சரியம், முதன்முதல் பார்த்த போர்டு TVSஐச் சேர்ந்தது. 
அப்புறம் Bajaj. Bajaj autoக்களும் ஸ்கூட்டர்களும் ரொம்ப popularஆம்.
இரவு 11 மணிக்கு ஹோட்டல் (3 Star) 
வந்து சேர்ந்தோம்.
பிறகு டின்னர். நாங்கள் கொண்டுவந்த 
மேதி பரோட்டாவும் சட்னியும். 
சுகமான தூக்கம்.
இதுவரை நீங்கள் படித்தது பெருவைப் பற்றியும் எங்கள் முதல்நாள் பயணத்தையும் பற்றி. 
இனி வரப்போவது. 
2ஆம் நாள் - லீமாவைச் சுற்றி வருதல். 
3,4,5ஆம் நாள்கள்
அமேசான் காடுகளில் "ஜாலியான" உலாவல்.
6,7,8ஆம் நாள் - மாச்சு பிச்சு விஜயம்.
9ஆம் நாள் இரவு - வீடு திரும்பல்
10ஆம் நாள் காலை - சொந்த வீட்டில் 
back home.

நிறைய விஷயங்களைத் திரட்டியிருக்கிறேன். 
நிறைய photoக்கள் எடுத்திருக்கிறேன். 
ஒரு sampleக்கு.
Brazil nut சாப்பிட்டு இருக்கிறீர்களா? walking treeஐ பார்த்து இருக்கிறீர்களா? Termites - கறையான் உண்மையிலேயே ஒரு வில்லனா
Coca Tea சாப்பிட்டிருக்கிறீர்களா? எறும்புகள் கடித்துத் தண்டனை 
கொடுக்கும் மரங்களைப் பார்த்திருக்கிறீர்களா?
விடைகளைத் தெரிந்துகொள்ள 
அடுத்த வாரம்வரை காத்திருங்கள்.


                                                                 ...கிளறல் தொடரும்






1 comment:

Unknown said...

Can't believe this your maiden attempt. Very interesting. You are just transporting us to Peru
Best Regards
V Viswanathan Dubai