இந்தக் கேள்வியைக் கேட்டவர்கள்:
D'Ancona & Pflaum என்ற,
சிக்காகோ நகரில்
உள்ள நிறுவனம்.
கேட்கப்பட்ட வருஷம் 1995.
கேள்வி
கேட்கப்பட்டவர்கள்
6 இலிருந்து 12
வயதுவரை
உள்ள சிறுவர் / சிறுமியர்கள்.
இதை ஒரு கட்டுரைப் போட்டியாக நடத்தினார்கள்.
குழந்தைகள் தங்கள் “கற்பனைக்குத் தோன்றிய எந்த விஷயத்தைப்
பற்றியும் விவாதிக்கலாம்.
ஒரு நிபந்தனையும் கிடையாது”
என்று
சொல்லப்பட்டது.
ஒரு தமாஷுக்காக ஆரம்பிக்கப்பட்ட
இந்தக் கட்டுரைப் போட்டி
தமாஷான
பதில்களைத்தான் குழந்தைகளிடமிருந்து எதிர்பார்த்தது. உதாரணத்திற்கு,
“தெருவில் அசுத்தம் செய்தவர்களைத் தண்டிக்கச் சட்டம் வரவேண்டும்”
என்பது போன்ற பதில்களை எதிர்பார்த்தார்கள்.
கட்டுரைகளைப் பரிசீலித்தபோது
பெரிய ஆச்சரியம்
காத்துக்கொண்டிருந்தது. ஒரு குழந்தையும் இந்தப் போட்டியைத் தமாஷாக
எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் பெரிய அதிர்ச்சி. குழந்தைகளின் பதில்களிலிருந்து
அவர்களுடைய உணர்வுகள் எப்படி சூழ்நிலையினால் பாதித்திருக்கிறது
என்பது
திட்டவட்டமாகத் தெரிந்தது. அவர்கள் சொன்ன கருத்துகள் ஆக்கபூர்வமாக இருந்தன.
உதாரணத்திற்கு சில:
Darius Mass (6- 9 groups)
“துப்பாக்கிகள் ஒழிக்கப்பட வேண்டும்.
என்னுடைய cousin, ஒருவனால் சுடப்பட்டான். என்னையும் யாரும்
சுடக் கூடாது. No Guns.
Jerrel Legett (8 Yrs)
“போதை மருந்துகளை ஒழிக்கச் சட்டம்
வர
வேண்டும். சண்டை கூடாது.
கெட்ட வார்த்தைகள் பேசக் கூடாது. மற்றவர்களைக் கொல்லாதே.
நீ ஜெயிலுக்குப் போவாய்.”
Tawancia Adams (6- 9 Yrs)
“போதை மருந்துகள் கூடாது.
யாரும் அதனால்
சாவதை நான் விரும்பவில்லை.”
Ola (6 to 9 Yrs)
Guns ஒழிய வேண்டும்.
இதை
தடுக்கவில்லையானால்
நாம் எல்லோரும் இறந்து விடுவோம்.
Stop the killing
Stay
Drug Free
Stop the Violence.
Dellilah (10 Yrs)
“போதை மருந்துகள் கொல்கின்றன.
நான் போதை
மருந்துகள் விற்பவர்களை அடிக்கடி பார்க்கிறேன்.
அவர்களிடம் அவர்கள் செய்வது தப்பு
என்று சொல்லத் துடிக்கிறேன்.
ஆனால் என்னால் முடியவில்லை.
ஏனெனில் நான் ஒரு
சிறுமி தானே!”
Terrence (10 Yrs)
“ஒருவரை ஒருவர் கொல்வதைத்
தடுக்க ஒரு
சட்டம் போடுவேன்.
குழந்தைகள் தெருவில் குழந்தைகளாக விளையாட தடையான போதை
மருந்துகள்
விற்பனையைத் தடுப்பேன்.
No Guns No
Drugs.”
Jennifer Baggett ( 12 Yrs)
குடித்துவிட்டுச் சண்டை போடும்
மக்களைத் தண்டிக்க ஒரு
சட்டம்
வேண்டும். ஒருத்தருக்கு ஒருத்தர்
சண்டை போடுவதையும் போதை
மருந்து
விற்பதையும் தண்டிக்கச் சட்டம் வேண்டும்.
Andrea Chinnaswamy (10 Yrs)
ஜனத்தொகை பெருகி வருகிறது.
இதைத் தடுக்கச் சட்டம் தேவை.
ஒருத்தருக்கு எவ்வளவு குழந்தைகள் என்பதைச் சட்டம் சொல்ல வேண்டும். இந்தச் சட்டம்
எதற்கு வர
வேண்டும் என்றால்
பெரும்பான்மையான பெற்றோர்கள்
குழந்தைகளைக் கவனிக்காமல்
அலட்சியப்படுத்துகிறார்கள்.
Child Abuse நிறையவே
இருக்கிறது.
இந்தக் குழந்தைகளா பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்?
எதற்காக அவர்கள் கஷ்டப்படவேண்டும்”
மேற்சொன்ன கருத்துக்கள்
சொல்லப்பட்ட வருஷம்
1995.
அன்றைய சூழ்நிலையில் இருந்த
பெரிய சவால்கள் Guns,
Drugs,
Gang War and Child Abuse.
இந்தச் சவால்களின் முழுப் பரிமாணத்தையும் உணர்ந்த
குழந்தைகளின் கருத்துக்கள்தான்
இந்த கட்டுரைகள் மூலம் வெளியாகின.
இதே போட்டி, 2013இல்
நடந்தப்பட்டால் பதில்கள் வேறு
மாதிரியாக இருக்காது.
ஏனெனில் பிரச்சினைகள்
அப்படியேதான் இருக்கின்றன.
இன்றைய அமெரிக்க அரசு
Gun Controlக்கும்
Drug
Preventionக்கும்
முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. இருந்தாலும்
இது ஒரு Social Problem.
இந்தக் கட்டுரையைப் படிக்கும் வாசகர்களுக்கு “எதற்கு இந்தக் கட்டுரை? இந்தியாவில் “Guns,
Drugs” ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமாக
இல்லையே? என்ற கேள்வி எழலாம்.
Guns, Drugs இந்தியாவில் எவ்வளவு
தூரம் பரவியிருக்கிறது என்பதற்கான கட்டுரை இல்லை இது.
இந்தக் கட்டுரையின் முக்கிய
நோக்கம்,
அமெரிக்க குழந்தைகளின்
‘involvement’ஐப்
பற்றியது.
இந்தியக் குழந்தைகளின்
நிலைமை என்ன?
இங்குள்ள பிரச்சினைகள்
வேறாக இருக்கலாம்.
ஆனால் கேள்வி, அவைகளைப்
பற்றின அறிவு எவ்வளவு தூரம்
அவர்களைப் பாதித்திருக்கிறது?
அதற்கான எந்த ஆராய்ச்சியும் இல்லை.
எந்த மேடையும் அதற்கான சூழ்நிலையை
உருவாக்க முயலவில்லை.
T.V.களில் ரொம்ப பாப்புலரான
நிகழ்ச்சி
பட்டிமன்றங்கள். விவாதிக்கப்படுகிற விஷயங்கள்
எல்லாம் நகைச்சுவைக்காகத்தான்
நடைபெறுகின்றன.
அறைத்த மாவையை அறைத்து
கொண்டிருக்கிறார்கள்.
ஏன், ஏதாவது T.V. Channel
சில இளைஞர்களைக் கூப்பிட்டு மேற்சொன்ன தலைப்பைப் பற்றி விவாதிக்கக்
கூடாது?
அப்போது தெரியும்-
இளைஞர்களின்
விழுப்புணர்ச்சி.
நாட்டின் நடப்பை அறிந்த இளைஞர்கள்தான் எதிர்கால
ஆட்சியாளர்களாக முடியும். பிரச்சினைகளை
அறிந்தவர்கள்தான்
பிரச்சினைகளுக்கு
விடை
கொடுக்க முடியும்.
source:
Bob Greene's column
chicago tribune
... கிளறல் தொடரும்.
No comments:
Post a Comment