Monday, September 24, 2012

மூத்த குடிமக்கள்(Senior Citizens) யார் குழந்தைகள்?


பகுதி 1:

வயதிலும்அறிவிலும்அனுபவத்திலும் 
பழுத்த வயதினரை யார் தினசரி 
வணங்கிச் சேவை செய்கின்றார்களோ
அவர்கள் நீண்ட ஆயுள்ஞானம்புகழ்பலம் 
என்ற நான்கு விதமான சித்திகளை 
அடைவார்கள்.
சமஸ்கிருதப் பழமொழி. 
                                                                              "ஒரு குழந்தையின் கஷ்டம்
தாயாருக்குப் புரியும்:  
ஒரு யுவனின் கஷ்டம்
ஒரு யுவதிக்குப் புரியும்:  
ஒரு வயோதிகனின் கஷ்டம்
யாருக்குமே புரியாது.
விக்டர் ஹ்யூகோ

1982ஆம் ஆண்டு - ஜூலை:
ஆஸ்த்ரியா நாட்டில்,ஒரு உலக மகாநாடு. 
வயோதிகத்தையும் (aging),
வயோதிகர்களையும் (aged) பற்றி 
விவாதிக்கும் மேடை.
இந்திய அரசு  சார்பில்வாசிக்கப்பட்ட 
அறிக்கையிலிருந்து ஒரு பகுதி:
இந்தியாவைப் பொறுத்தமட்டில்
வயோதிகம் என்ற பிரச்சினைக்கு 
இடமே இல்லை. 
அது ஒரு கவலை தரும் 
விஷயமே இல்லை. 
வயோதிகர்கள்” என்று ஒரு 
தனிப்பட்ட பிரிவினராக 
அவர்களைக் கருதி அவர்களுக்காக 
பிரத்தியேகமான வழிமுறைகளைக் 
கொண்டுவர வேண்டிய 
அவசியமே இல்லை.

மேலும் சொல்கிறது அந்த அறிக்கை: -
குடும்பமும் சமூகமும், 
வயோதிகர்களை எப்படி நடத்த 
வேண்டும் என்பதைக் காலம்காலமாக 
எங்கள் மதகலாச்சாரசமூகக் கோட்பாடுகள்
விரிவாகச் சொல்லிவந்திருக்கின்றன.
வயோதிகர்கள் பிரச்சினையில் 
அரசு  நேரடியாகக் குறுக்கிடாமல்
ஒரு ஆதரவான போக்கைத்தான் 
(supporting role)
கடைப்பிடித்துவருகிறது. 
இதுவரை குழப்பம் ஒன்றும்  இல்லாமல் 
எல்லாமே சுமுகமாகத்தான் 
போய்க் கொண்டிருக்கிறது.

ஆஹாஎன்ன அழகான வர்ணனை!

நாம் இப்பொழுது இருப்பது 2012.

“Non issue” - (பிரச்சினையே இல்லை) 
என்று கருதப்பட்ட ஒரு விஷயம்
கடந்த 30 ஆண்டுகளில் கவலையைத் 
தரும் விஷயமாக மாறிஇன்று  ஒரு பூதாகரப் 
பிரச்சினையாக உருவாகியிருக்கிறது.

Tuesday, September 18, 2012

உங்களை வேலையிலிருந்து தூக்கப்போவதற்கான அறிகுறிகள்


"Hire and Fire"  
வேலை கொடுப்போம் - 
வேலையிலிருந்து நீக்குவோம் - 
என்ற கொள்கையைப் பின்பற்றும் 
அமெரிக்கா மற்றும் 
ஐரோப்பிய நாடுகளில் வேலைபார்க்கும் 
நபர்களுக்காக எழுதப்படுகிற 
கட்டுரை இது. 
இந்தியாவிற்குப் பொருந்தாதா?
என்ற கேள்வி எழலாம். 
ஆனால் இந்தியா 
ஒரு "Hire only" நாடாச்சே
"Fire"  பண்ணுவது என்பது 
எப்போதாவது நடக்கும் 
அதிசய நிகழ்ச்சி அல்லவா?

எப்படியோ"அவரைப் பிடிச்சு
இவரைப் பிடிச்சு 
வேலையை வாங்கிவிட்டால் 
(குறிப்பாகசர்க்காரிலோ,
தொழிற்சாலையிலோ) 
ரிடயர் ஆகும்வரை நிம்மதியாகக் 
காலத்தைக் கடத்திவிடலாம். 
வேலையை விட்டுத் தூக்கிவிடுவார்கள் 
என்ற பயமே இல்லாமல்
அவரவர்கள் தொழில் தர்மத்தை 
நடத்திக்கொள்ளலாம். 
ஏதாவது தப்பு-தண்டா 
பண்ணி மாட்டிக்கொண்டால் 
(operative word -மாட்டிக்கொண்டால்) 
மிஞ்சிமிஞ்சி ஒரு 
தண்ணி இல்லாத காட்டிற்கு  
மாற்றப்படுவார்கள். 
இந்தக் காலத்தில் அது ஒரு 
தண்டனையாகவே கருதப்படுவதில்லை. 
ஏனெனில்எல்லா இடங்களுமே 
தண்ணி இல்லாதக் காடாகத்தானே 
இருக்கிறது! 
புது மொழியில் சொல்ல வேண்டுமானால் 
வசூல் வராத,பண்ண முடியாத 
இலாகாவுக்கு மாற்றல் செய்யலாம்.
தொழிற்சாலைகளைப் பற்றிக் 
கேட்கவே வேண்டாம். 
முதலாளிக்குத் தொழிற்சாலையை 
ஆரம்பித்து நடத்துவதுதான் வேலை. 
நஷ்டம் அடைந்து தொழிலை மூடலாம் 
என்று அவர் நினைத்தால் அது 
மகா பெரிய தேசத் துரோகமாகக் 
கருதப்படும்.
இப்படி  Hire only -No Firing 
என்ற கொள்கையைத் 
தொடர்ந்து ஆதரிக்கும் நாட்டில் 
யாரைஎப்படி வேலையை 
விட்டுத் தள்ளுவது
வேலை போய்விடும் என்ற 
பயமில்லையானால்
accountability - கடமை உணர்ச்சி 
எப்படி வளரும்?
மேல் நாடுகளில் நிலைமை வேறு.

Tuesday, September 11, 2012

10 "முடியாதது”கள் (Cannots)


முடியாததுஎன்ற வார்த்தையையே 
அகராதியிலிருந்து எடுத்துவிட வேண்டும் 
என்பது சுய ஊக்கம் தரும் (Self Motivation) 
பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் அடிக்கடி 
வற்புறுத்தும் வாக்கியம்.

உன்னால் முடியும்என்ற நம்பிக்கையை 
வளர்க்க வேண்டியது அவசியம்தான். 
ஆனால், “எல்லாமே முடியும்என்ற 
வாதத்தை ஒத்துக்கொள்ள முடியாது. 
ஒரு விளையாட்டான உதாரணம். 
ஒரு நாடகத்தில் நாகேசுக்கும் 
மேஜர் சுந்தர்ராஜனுக்கும் வாதம். 
மேஜர் சொல்லுவார்,  
என்னால் எது வேணுமானாலும் 
செய்ய முடியும்” என்று சவால் விடுவார்.

நாகேஷ் பதிலுக்கு சார், தோற்றுவிடுவீர்கள். 
எங்கே, டூத்பேஸ்ட் டியூபிலிருந்து வெளிவரும் 
பேஸ்டை மறுபடி டியூபுக்குள் வையுங்கள்
பார்க்கலாம்.என்பார். 
ஜோக்தான்! ஆனால் சிந்திக்க வேண்டிய 
விஷயம்தானே. 
இதே மாதிரி-, நிறைய முடியாததுகளை 
நம்முடைய வாழ்க்கையில் சந்திக்கிறோம். 
சில முடியாததுகளை நாம் கட்டாயம் 
ஆராய்ந்து செயல்பட வேண்டும். 
அப்படிபட்ட 10 ‘முடியாததுகளைப் 
பற்றி இப்பொழுது பார்ப்போம்.

இவை சமீப காலத்தில் 
எழுதப்பட்டவை அல்ல. 
100 ஆண்டுகளுக்கு முன்னால் 
ஒரு பாதிரியாரால் எழுதப்பட்டவை. 
அப்பப்போ,இதை ஞாபகப்படுத்திக்கொண்டு 
அரசியல்வாதிகளில் சிலர் இதைப் 
பயன்படுத்திக்கொள்வார்கள்.

யார் இந்தப் பாதிரி
இதோ, அவருடைய Bio-data.

Tuesday, September 04, 2012

தர்மத்திற்கும் தர்மத்திற்கும் யுத்தம் நடந்தால்! வெற்றி யார் பக்கம்?


தலைப்பில் எழுத்துப்  பிழை இருக்கிறதோ 
என்று நினைக்கத் தோன்றும்
ஏனெனில் காலகாலமாக எல்லா 
கலாச்சாரங்களிலும்  எல்லா மொழிகளிலும் 
சொல்லப்பட்ட, எழுதப்பட்ட நீதிக் கதைகள் 
எல்லாமே தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் 
நடந்த மோதல்களைப் பற்றித்தான் 
விளக்கிஇருக்கின்றன. 
எல்லாக் கதைகளின் மையக் கருத்தும் 
ஒரே மாதிரிதான். 
ஒரு கதாநாயகன் (ஹீரோ) - 
தர்மத்தின் மொத்த உருவம். 
ஒரு வில்லன் - 
அதர்மத்தின் மறு அவதாரம். 
இரண்டு பேருக்கும் மோதல். 
முடிவு, தர்மம்தான் வெற்றி அடையும். 
அதர்மம் தோல்வி அடையும்.

குறும்புதனத்திற்காக, முடிவை மாற்றி 
அமைக்க யோசித்தால் - 
வில்லன் வெற்றி பெறுவதாக - 
வாசகர்கள், "முடிவு நன்றாக இல்லை" 
என்று தூக்கி எறிந்துவிடுவார்கள்.

"நமக்கேன் வம்பு" என்று 
கதை எழுதுபவர்களும் 
"Beaten Track " ஐப்   பின்பற்றித்  
தங்கள் தொழிலைத்  
தொடர்ந்து நடத்துகிறார்கள்.

ஆனால், எல்லாக் கதாசிரியர்களும், 
"அரைத்த மாவையே அரைப்பார்கள்" 
என்று சொல்ல முடியாது. 
இந்தக் கதாசிரியர் தலைப்பில் சொன்ன 
வித்தியாசமான கேள்வியைக் கேட்டு, 
விடை என்ன என்று ஒரு கதை மூலம் 
விளக்குகிறார்.
யார் இந்த ஆசிரியர்?
மகாபாரத இதிகாசத்தையும் பத்ம, விஷ்ணு, 
கருட முதலிய 18 புராணங்களையும் எழுதிய 
வேத வியாசர்தான். 
இந்தக் கதையின் சொந்தக்காரர். 
வேத வியாசர் எழுதிய 18 புராணங்களில் 
மார்க்கண்டேயப் புராணம் ஒரு அருமையான 
காவியம். 
அதில்தான் இந்தக் கதை வருகிறது. 
இப்பொழுது கதையைப் பற்றித் 
தெரிந்துகொள்ளலாமா?

Monday, August 27, 2012

மின்னல் செய்தி - நடந்து கொண்டிருக்கிறது "போர்"- அமெரிக்காவில்


இது என்ன புருடாசெய்தி
ஏப்ரல் முதல் தேதி கூட இல்லையே?
ஆனால் இது உண்மை. 
இந்தப் போர் நீங்கள் நினைக்கிற 
மாதிரி ஆயுதங்களோடுப் போராடும் 
உலக யுத்தம் இல்லை.
இது ஒரு பனிப்போர்.
நடப்பது எங்கே
அமெரிக்காவில் சில பல வீடுகளில், 
குறிப்பாகசமையல் அறை மேஜையில்: 
சார், குழப்பாதீர்கள்! 
தலையைப் பிய்த்துக்கொண்டு 
தெருவில் ஓடுவதற்குமுன் தயவுசெய்து 
புரியும்படி சொல்லுங்கள்என்று 
நீங்கள் அலறுவது கேட்கிறது. 
இதோ, அந்தப் போரின்விளக்கம்.

Monday, August 20, 2012

மனித நேயத்தோடு வாழ உதவும் மூன்று மந்திரங்கள் (தங்க விழா கிளறல்)


இந்தக் கட்டுரை "திருநெல்வேலிக் குப்பை"யின் 
"தங்க விழா"க் கிளறல்.
பொழுது போக்குக்காக இரண்டு பேர் 
தூண்டுதலின் பேரில் விளையாட்டாக 
எழுத ஆரம்பித்த என் "எழுத்துப் பணி" 
ஐம்பது வாரங்களாகத் தடை 
இல்லாமல் தொடர்ந்திருக்கிறது 
என்று என்னால் நம்பவே முடியவில்லை. 
ஆச்சரியமாக இருக்கிறது. 
ஆனால் உண்மையாகவே நடந்திருக்கிறது.
ஜனகராஜ்  காமெடியன் போல், 
"நாகராஜா, சும்மா சொல்லக் கூடாது, 
எப்படிடா இந்த ஐடியாவெல்லாம் 
உனக்குத் தோன்றுகிறது?" 
என்று பீத்திக்கொள்ள ஆசைதான். 
இருந்தாலும் உண்மை அது இல்லை. 
இதற்கு  முழுப் பொறுப்பு இரண்டே பேர். 
ஒன்று, என் மனைவி; 
இரண்டாவது என் நண்பன் 
க்ரியா ராமகிருஷ்ணன்.

Monday, August 13, 2012

மாயக் கண்ணனின் மாஸ்டர் பிளான் (Master Plan)



மகாபாரதக் கதையின் Hero யார் 
என்று கேட்டால், விதவிதமான பதில்கள் 
கிடைக்கும் பீஷ்மர், அர்சுனன், பீமன்
கர்ணன் என்று ஆளுக்கு ஒரு பெயரைச் 
சொல்வார்கள்.

ஆனால் காவியத்தை நன்றாகப் படித்து
ரசித்து, அதைப் பற்றிச் சிந்தித்தவர்களுக்கு 
ஒரே ஒரு Heroதான் மனதில் தோன்றுவார். 
யார் அவர்?

சாக்ஷாத் கிருஷ்ண பரமாத்மாதான். 
செல்லமாக, மாயக் கண்ணன் 
என்றும் அவரை அழைப்பதுண்டு.

மகாபாரதக் கதையின் முடிவில் வருவது 
பாரதப் போர். 18 நாள் யுத்தம். 
வெற்றி பாண்டவர்களுக்கு என்பது 
தெரிந்த விஷயம்.

எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள்
கெளரவர்கள் பக்கத்தில் — 
பீஷ்மர், துரோணர்கர்ணன், துரியோதனன்
ஜயத்ரதன் என்று மிகப் பெரிய பட்டியல். 
இவர்களை எப்படிப் பாண்டவர்கள் 
வென்றார்கள்
ஒவ்வொருவருடைய வீழ்ச்சிக்குப் பின்னாலும் 
கண்ணனின் வேலைஇருந்திருக்கிறது.
கண்ணன் இல்லாவிட்டால் பாண்டவர்கள் 
வெற்றி பெற்றிருக்க முடியாது.

இதோ ஒரு கேள்வி:

கீழ்க்கண்ட வீரர்களில், யாருடைய 
வீழ்ச்சிக்காகக் கண்ணன் தீட்டிய திட்டம்
நெத்தியடி பிளான் என்ற பாராட்டைப் பெறும்?

1) பீஷ்மர் 2) துரோணர் 3) கர்ணன் 
4) ஜயத்ரதன் 5) துரியோதனன் 6) விதுரர்

Monday, August 06, 2012

தெரிந்த அனுமார்-தெரிந்திருக்க வாய்ப்பில்லாத கதை

எங்கேயும்,எப்போதும்,
எல்லா இந்துக்களாலும்
(சைவ,வைஷ்ணவ,சாக்த
வேறு பாடு இல்லாமல்)
துதிக்கப்படும்  ஒரே
Super Star,Super Man,
Super Hero,Ultimate Star
நம்முடைய அனுமார் தான் 
என்பதில், யாருக்கும் கருத்து
வேறு பாடு இருக்காது என்று
அடித்து சொல்லலாம்.













குழந்தை பருவத்தில் சூரியனைப்
பிடிக்க முயற்சி செய்தது,
இந்திரனினால் அடிக்கப்பட்டு,
மயங்கி கிடந்தது,
வாயு கோபம் அடைந்து உலகோரை
மூச்சு விடாமல் திணர செய்தது,
மும்மூர்த்திகளும் ,மற்ற தேவர்களும் 
தோன்றி அவருக்கு எல்லா வரங்களையும்
அளித்த கதை சிறுவர் முதல் பெரியவர் 
வரை எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

மேலும்,அவர் பெரியவரான போது,
சுக்ரீவருக்கு மந்திரியானது,
ராம,லக்ஷ்மணரை சந்தித்தது,
ராமருக்காக சீதையை தேட
ஆகாயத்தை கடந்தது,
சீதையிடம் மோதிரத்தை கொடுத்து
சூடாமணியை வாங்கியது,
ராவணனை சந்தித்து அறிவுரை
வழங்கியது,இலங்கையை எரித்தது-
என்ற நிகழ்ச்சிகள் தெரியாதவர்கள்
இருக்க வாய்ப்பில்லை.
ராம-ராவண யுத்ததில், அவருடைய பங்கு ,
ராமாயண கதை படித்தவர்களுக்கு
நன்றாகவே தெரியும்.

அனுமார் இல்லாமல் ராமரால் இவ்வளவு
சாதனைகள் செய்திருக்க முடிந்திருக்குமா,
என்று நினைக்க தோன்றும்.

ஆனால்,அனுமாருக்கு அந்த மாதிரி 
எண்ணம் வந்ததே இல்லை.வரவும் வராது.
அதனால் தான், அவருடைய நல்ல
பண்புகளையும் குணங்களையும்
நினைத்து, அவரை, இன்றும் என்றும்
வணங்கி வருகிறோம்.

எப்படி இவரால்,அதுவும் 
ஒரு குரங்காக இருந்து
கொண்டு, இவ்வளவு சாதனைகள் 
செய்ய முடிந்தது?

அதற்கு ஒரே காரணம் தான் 
இருக்க முடியும்.
அவர் தேவாம்சம் பெற்றவராக
இருந்திருக்க வேண்டும்.
சாதரண தேவருடைய அம்சமாக
இருக்க வாய்ப்பில்லை.

பின் யாருடைய அம்சம் இவர்?

சாஷாத் பரமேஸ்வரனுடைய 
அம்சம்.

அது என்ன கதை?

Monday, July 30, 2012

உருப்படியாகப் புகார்செய்தல் (Creative Complaining)


நீங்கள் அடிக்கடி எதற்கெடுத்தாலும் 
புகார் செய்பவரா?
அவசரப்பட்டு இல்லைஎன்று 
சொல்லிவிடாதீர்கள். 
நீங்கள் நிச்சயமாக ஒரு புகார் பேர்வழிதான். 
அது ஒரு தப்பான, வெட்கப்பட வேண்டிய
வேதனைப்பட வேண்டிய 
(விசு சார், மன்னிக்கவும்) விஷயமே இல்லை. 
இதை நான் சொல்லவில்லை. 
ஒரு பிரபல மனோதத்துவ விஞ்ஞானி
Robin M. Kowlaski சொல்லியிருக்கிறார்.

அவர் சொல்லுகிறார்: 
“Complaining has value. 
We would't do it otherwise. 
புகார் செய்வதில் ஒரு மதிப்பு 
இருக்கிறது. இல்லையென்றால் 
நாம் அதை செய்ய மாட்டோம்.