Monday, April 15, 2013

ஞமலி (நாய்) புராணம் தொகுத்தவர்: வேதவியாச தாசன் தி.சு. பாம்பரசனார் பகுதி - 2


குருமார்களுக்கு வணக்கம்
விநாயகருக்கு வணக்கம்
   எல்லா தெய்வங்களுக்கும் 
வணக்கம்.
காலபைரவரை மனதில் நினைத்து
தி.சு. பாம்பரசன் என்ற 
திருநெல்வேலி 
சுப்ரமணிய நாகராஜன் 
இந்தநாய்புராணத் தொகுப்பைச் சமர்பிக்கிறேன். 








(என் முழுப் பெயரைக் 

கொடுத்ததன் காரணம் 
பிற்காலத்தில் ஒருவேளை
இது பிரபலமான 
காவியமாக ஆகும் பட்சத்தில் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் 
மண்டையைப் போட்டுக் 
குழப்பிக்கொள்ளக் கூடாது 
என்ற நல்ல எண்ணம்.)
இந்தப் புராணத் தொகுப்பில் 
பங்கேற்கப் போகும் 
இன்னொரு நபர் 
என் மனைவி - 
பிரபா நாகராஜன். 
பிரபா -அவர்கள் பெற்றோர்கள் 
இட்ட பெயர். 
என்னைத் திருமணம் செய்தபின் 
எங்கள் வழக்கப்படி என் பெயரைச் 
சேர்த்துக்கொண்டார்கள். 
இந்த இணைப்பின்படி பெரும்பாலான இந்தியப் பெண்மணிகள் தங்கள் 
சுய அடையாளத்தை இழந்து
 "கணவனே கண் கண்ட தெய்வம்" 
என்ற தாரக மந்திரத்தில் ஊறிப்போய் வாழ்கிறார்கள் என்பது கண்கூடு.
என் மனைவி கல்யாணமாகியும் 
தனக்கு என்று ஒரு தனிஅடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டாள். 
சங்கீதம், தத்துவம், சமஸ்கிருதம்
நாட்டியம் என்று பல துறைகளில் 
பட்டம் பெற்றவர்கள். 
பார்வதி-பரவேஸ்வரர்
ராதா-கிருஷ்ணன்
வள்ளுவர்-வாசுகி
இந்த லட்சிய தம்பதிகளுக்குப் பிறகு 
பிரபா-நாகராஜன் தம்பதிகள்தான் 
(என்று யாரும் சொல்லவில்லை) 
நாங்களே சொல்லிவருகிறோம் - 
51 ஆண்டுகளாக.
என் மனைவிதான் என் 
முதல் விசிறி. 
என் கட்டுரைகள் மனதில் 
தோன்றியவுடன் அவளுடன்தான் விவாதிப்பேன். 
இதுவரை - "one sided"தான்.
ஏனோ தெரியவில்லை - 
இந்த "நாயை"ப் பற்றி 
எழுதப்போகிறேன் என்று 
சொன்ன மாத்திரம் அவளிடமிருந்து ஏகப்பட்ட ஆட்சேபணைங்கள்
எங்கள் உரையாடலின் 
ஒரு பகுதி இங்கே:

பிரபா: வேற சப்ஜக்டே 
கிடைக்கலையா
போயும்போயும் எல்லாராலும் 
திட்டப்படும் ஒரு கடை 
ஜென்மத்தைப் பற்றியா எழுதப்போகிறீர்கள்
உங்களுக்குத்தான் நாயைக் 
கண்டாலே பயமாச்சே
எத்தனை தரம் அந்த நிகழ்ச்சியைப் 
பற்றிப் புலம்பியிருக்கிறீர்கள்.
நான்: ஓ, அதைச் சொல்கிறாயா

எனக்குச் சின்ன வயதிலிருந்து 
நாயைக் கண்டால் பயம். 
திருநெல்வேலி தெப்பக்குளத் 
தெருவில் தெரு நாய்கள் அதிகம். 
சைக்கிள் ஓட்டிக்கொண்டுவந்தால் பின்னாலேயே குரைத்துக்கொண்டு 
ஓடி வரும். எங்கே காலைக் 
கடித்துவிடுமோ என்ற பயத்தில் 
வேகமாக ஓட்டுவேன். 
வாடகை சைக்கிள்ஸ்பீட் கம்மி. கஷ்டம்தான். (பிற்காலத்தில் இந்தச் சென்னை நாய்கள் ஸ்கூட்டர் 
ஓட்டிகளையும் (நான் உட்பட) விடவில்லை). 











அப்படி என்ன பயம்
சின்ன வயதில் என் நண்பன் 
சொன்னான். நாய் கடித்தால் 
வயிற்றைச் சுற்றி 21 ஊசிகள் போடுவார்களாம். 
போடவில்லையானால்
நாய் மாதிரி குலைப்போமாம். 
அது இந்த வயதுவரை நெஞ்சில் 
ஆழமாகப் பதிந்துகிடக்கிறது. 
நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 
நாள், முனிஸிபாலிடியின் 
"நாய் வண்டியின் விஜயம்". 
லாவகமாகத் தெரு நாய்களைக் 
கொக்கிப் போட்டுப் பிடித்து 
வண்டியில் அடைக்கும் காட்சி. கண்கொள்ளாக் காட்சி.












ஒரே ஒரு உறுத்தல் - அதே நண்பன் சொன்னான். இந்த நாய்களை 
ஒரு இடத்திற்குக் கொண்டுபோய் 
இதன் எலும்புகளைப் பொடி பண்ணி, சர்க்கரை (சீனி- எங்கள் ஊர்பெயர்) 
தயார் செய்வார்களாம். 
ஒரு மாதத்திற்குச் சீனி 
பக்கமே போகவில்லை. 
இப்போது தோன்றுகிறது - 
இந்த மாதிரியான கதைகளைப் பரவவிட்டால் சர்க்கரை 
சாப்பிடுபவர்கள் அதைக் 
குறைத்துக் கொள்வார்கள் 
அல்லது அதை அறவே 
நீக்கிவிடுவார்கள். 
செலவும் மிச்சம். 
சர்க்கரை வியாதியும் வராது.

இந்த நாய் பயம் தொடர்ந்தது. 
ஒரு நபரை அவர் வீட்டில் சந்திக்கச் சென்றேன். அப்பொழுதுதான் 
மார்க்கட்டில் வந்திருந்த 
டெரின் ஷர்ட்டைப் போட்டிருந்தேன். 
2 ஷர்ட்டுகள் இருந்தால் போதும். 
அந்த வீட்டின் மணியை அடித்தேன். 
ஒரு அல்சேஷன் நாய் தன் 
இரண்டு முன்னங்கால்களையும் 
என் மார்பில் வைத்து உறுமியது. 
அது தன் கால்களை சர் என்று 
கீழ்ப்பக்கமாக இழுத்தால் என்னுடைய 
80 ரூபாய் ஷர்ட் அம்பேல். 
வீட்டுக்குச் சொந்தக்காரர் 
வெளியே வந்து 
"யார் நீங்க, என்ன வேண்டும் 
உங்களுக்கு?" என்றார். 
நான் சொன்னேன் 
"சார், முதலில் 
உங்கள் நாயை உள்ளே இழுத்துக்கொள்ளுங்கள்" 
என்றேன். 
அவர் "அது ஒன்றும் செய்யாது. உங்களுக்குத் தெரியாதா
குறைக்கிற நாய் கடிக்காது" 
என்று. 
நான் சொன்னேன் 
"சார், அது எனக்குத் தெரியும் 
ஆனால், நாய்க்கு அது தெரிந்திருக்கும் என்று. ஒரு விஷப் பரிட்சை பண்ணத் 
தயாராக இல்லை. Please..." 
என்று கெஞ்சினேன். 
நாய், வாபஸ் பெறப்பட்டது. 
டெரின் ஷர்ட் தப்பிய 
சந்தோஷத்தில் 
அந்த நபரை interview 
பண்ணாமல் நகர்ந்தேன். 
பிரபா: கேட்கத் தமாஷாகத்தான் 
இருக்கு. உங்கள் பயம் போக
3 நாய்களை வளர்த்தோமே
இன்னும் அப்படியேத்தான் 
இருக்கு
அது சரி உங்க வாத்யார் ஒருவர்
நாய்க் கதையைச் சொல்லித் 
திட்டுவாரே
அதைச் கொஞ்சம் சொல்லுங்களேன்?
நான்: 
என்னுடைய எட்டாம் கிளாஸ் 
சரித்திர ஆசிரியர் பெயர் 
துரைசுவாமிப் பிள்ளை. 
இவர் பாடம் எடுக்கும் 
முறை அலாதி. 
அவர் ஒரு பாடத்தை 
எடுத்துக்கொண்டு அதை வாசிப்பார். 
மாணக்கர்கள் ஒரு பென்சிலோ
பேனாவோ எடுத்துக்கொண்டு 
வரிவரியாக, அவர் படிக்கபடிக்க 
underline பண்ண வேண்டும். 
அவருடைய theory இப்படிச் 
செய்தால்தான் கவனம் 
வேறு பக்கம் போகாமல் 
பாடத்திலேயே 
இருக்குமாம்! தப்பித் தவறி 
யாராவது புத்தகத்திலிருந்து 
அவர் முகத்தைப் பார்த்தால் போதும்
சட்டென்று வாசிப்பதை நிறுத்திவிடுவார். டயலாக் ஆரம்பமாகிவிடும்.
"டே, பசங்களா, நான் இப்பொழுது 
ஒரு கதை சொல்லப்போகிறேன். 
ஒரு பணக்காரர் ஒரு நாயை 
வாங்கி வளர்த்துவந்தார். 
தினசரி அதை பன்னீரில் 
குளிப்பாட்டி, வாசனை திரவியங்கள் 
காட்டிதங்கத் தட்டில் நல்ல 
உணவுகளைப் போட்டுச் 
சாப்பிட சொல்வாராம். 
அது சாப்பிடத் தொடங்கும் 
சமயம், வாசலிலிருந்து "டக்" 
என்று ஒரு சத்தம் வருமாம். 
அது வேறொன்றும் இல்லை. 
பக்கத்து வீட்டுக்காரி
சாப்பிட்ட எச்சிலையைத் 
தெருவில் போடுகிறாளாம் 
(நடப்பது 1945 - தெருவில் 
போடுவது சகஜமான நிகழ்ச்சி. 
யாரோ சொல்வது கேட்கிறது
 "இப்ப மாத்திரம் என்ன?") 
நாய்க்கு அந்தச் சத்தம்தான் 
ழைப்பு. எதற்கு
எச்சிலையில் போட்ட 
சாப்பாட்டைச் சாப்பிட 
அவசரம். 
அதன் குணம் அப்படி. 
அதைக் கொண்டு நடுக்கூடத்தில் 
வைத்து உபசாரம் பண்ணினால் இப்படித்தான் நடக்கும். 
இது எதற்கு சொல்கிறேன் 
என்றால் - இங்கேயும் சில 
ஜென்மங்கள் இருக்கின்றன. 
தெரியாமல் என் வகுப்பில் 
உட்கார வைத்துவிட்டேன்."
இந்தக் கதைக்குப் பிறகு 
எவனாவது வாத்தியார் 
முகத்தைப் பார்ப்பானா?









இப்பொழுது நினைத்துப்பார்த்தால்
"ஆசை முகம் மறந்துபோச்சே
துரைசுவாமிப் பிள்ளை முகத்தை 
எப்படி நினைவு கொள்வது" என்று.
பிரபா: இவ்வளவு தூரம் நாயால் பாதிக்கப்பட்ட நீங்கள் ஏன் 
எழுத வேண்டும்?
நான்: அதுதான் - நாகராஜன். பிடிக்காதவர்களிடம் இருக்கும் 
நல்ல குணங்களைப் பற்றிச் 
சொல்லித்தான் ஆகணும். 
அதனால் தான் எழுதப்போகிறேன்.
பிரபா: உங்களைத் திருத்தவே 
முடியாது. 
ஏதோ வசனம் சொல்வார்களே! 
நாய் வாலை நிமிர்த்த முடியுமா
அதுபோல், 80 வயதிலேயா திருந்தப்போகிறீர்கள்
உங்கள் இஷ்டம்.
நான்: 
உத்தரவு கொடுத்ததற்கு 
நன்றி. இது கேள்வி - பதில் 
பாணியில் எழுத உத்தேசம். 
நீ கேட்கிறாய? நான் கேட்கவா?
பிரபா: எனக்குக் கேள்வி 
கேட்கத்தான் தெரியும்
(திருவிளையாடல் படம் 
பார்த்திருக்கிறாள்).
நான்: சரி, கேள்விகளை ஆரம்பி.
பிரபா: கடவுள் ஏன் நாயை 
படைத்தார்? 
உலக மதங்கள் நாயைப் பற்றி 
என்ன சொல்கின்றன? 
நாய்களின் சிறப்பு குணங்கள் என்ன? 
இன்னும்...

நான்: இப்போதைக்கு 
இது போதும்.
முதலில் இதற்கான விளக்கங்களை
தருகிறேன்.
"நாய் ஜன்மம்",நாய் பிழைப்பு"  
என்று இழிவாக பேசப்படும்,
இந்த நாய்.மனிதனின் 
உயிர்த் தோழன்.
தன்னுள் எல்லா மிருக 
குணங்களையும்
வைத்துக் கொண்டிருக்கிற, 
மனிதன் தான் நாயை இழிவாக 
பேசுகிறான்.
இதோ ஒரு கதை:
உலக சிருஷ்டியின் முதல் நாள்
கடவுள் நாயை படைத்தார்.
அதை கூப்பிட்டு,"நாள் பூரா
வீட்டு வாசலில் உட்கார்.
உன்பக்கம் யார் வந்தாலும் குலை.
உனக்கு 20 ஆண்டுகள் வாழ
ஆசிர்வதிக்கிறேன்"என்றார்.
நாய் சொல்லிற்று.
"20 ஆண்டுகள்
ரொம்ப ஜாஸ்தி.
எனக்கு 10 ஆண்டுகள்
போதும்.மீதியை நீங்களே 
வைத்துக் கொள்ளுங்கள்."
என்றது.
கடவுளும் சம்மதித்தார்.
2ஆம் நாள், கடவுள் 
குரங்கைப் படைத்தார்.

"மக்களை உன்னுடைய 
சேஷ்டைகளினால் 
சந்தோஷப்படுத்து. 
அவர்களைச் சிரிக்க வை. 
உனக்கு 20 வருஷ 
வாழ்க்கையைத் தருகிறேன்" 
என்று சொன்னார்.

"20 வருஷங்கள் குரங்கு 
சேஷ்டைகள் பண்ணுவது கஷ்டம். 
அதனால், நாய் மாதிரி 
எனக்கும் 10 வருஷம் போதும்" 
என்றது. 
கடவுளும் சரி என்றார்.

3ஆம் நாள், கடவுள் பசுவைப் 
படைத்தார். பசுவைப் பார்த்து
 "நீ விவசாயியோடு தினசரி 
வயலுக்குச் செல்ல வேண்டும். 
நாள் முழுவதும் வெயிலில் 
கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். 
கன்றுக் குட்டிகளைப் பெற்றெடுத்து விவசாயிக்குப் பால் கொடு. 
நீ 60 ஆண்டுகள் வாழ 
ஆசிர்வதிக்கிறேன்" 
என்று சொன்னார்.

பசு சொல்லிற்று "சுவாமி
நீர் சொல்லும் வாழ்க்கை 
மிகக் கடினமானது. 
எனக்கு 20 வருஷங்களே 
போதும். 
மீதி 40 ஆண்டுகளை 
நீரே வைத்துக்கொள்ளும்" 
என்றது. 
கடவுளும் சரி என்றார்.

4ஆம் நாள் கடவுள் 
மனிதனைப் படைத்தார். 
மனிதனைப் பார்த்து கடவுள்
 "சாப்பிடு, தூங்கு, விளையாடு
கல்யாணம் பண்ணிக்கொள்
வாழ்க்கையை நன்றாக அனுபவி
உனக்கு 20 ஆண்டுகள் வாழ்க்கை தருகிறேன்" என்றார்.

மனிதன் சொன்னான்
 "சுவாமி, 20 ஆண்டுகள்தானா
போதவே போதாது. 
எனக்குக் கொடுத்த 20 
ஆண்டுகளை எடுத்துக்கொள்கிறேன். 
பசு, திரும்பிக் கொடுத்த 
40 ஆண்டுகளையும் 
குரங்கு வேண்டாம் என்று 
சொன்ன பத்து ஆண்டுகளையும்,
நாய் வேண்டாம் என்று சொன்ன 
10 ஆண்டுகளையும் எனக்குக் 
கொடுத்து என் வாழ்க்கை 
80 ஆண்டுகளாகக் 
கொடும்" என்று கேட்டான்.

கடவுளும் சரி என்று சொல்லிவிட்டார். மனிதன் ஒரு நல்ல deal கிடைத்த சந்தோஷத்தில் வாழ ஆரம்பித்தான்.

முதல் 20 ஆண்டுகள்
சாப்பிட்டுதூங்கி, விளையாடி வாழ்க்கையை அனுபவிக்கிறான். 
அடுத்த 40 ஆண்டுகள்,பசு மாதிரி 
ஒரு அடிமை வாழ்க்கையை 
வாழ்ந்து தன்னுடைய 
குடும்பத்துக்காக உழைக்கிறான். 
அடுத்த 10 ஆண்டுகள் பேரக் குழந்தைகளுக்கு குரங்கு 
சேஷ்டைகள் செய்து 
விளையாட்டுக் காட்டுகிறான். 
கடைசி 10 ஆண்டுகள் வாசலில் உட்கார்ந்துகொண்டு 
போகிறவர் வருபவரைப் பார்த்துக் 
குரைத்துகொண்டு வாழ்கிறான். 
இதுதான் மனித வாழ்க்கை - 
எப்படியிருக்கு கதை?

பிரபா: இது நன்றாக இருக்கு. 
இது உண்மைக் கதையா?

நான்: தத்துவக் கதைகளையும் தத்துவங்களையும் ரசித்து 
அனுபவிக்க வேண்டும். 
ஆராய்ச்சி பண்ணக் கூடாது.
பிரபா: இது கிரேஸி மோகன் 
டையலாக் மாதிரி இருக்கே?
நான்: சினிமா ரொம்பவே 
பார்க்கிறாய்.
பிரபா: சரி
புராணத்தைத்  தொடரும்.

நான்: இந்தப் புராணத்தை 
முடிக்கும் போது உனக்கு நாயைப் 
பற்றிய கெட்ட அபிப்பிராயங்கள் 
எல்லாம் மாறும் 
என்ற நம்பிக்கை இருக்கு. 
அதற்கு முன்
இதோ ஒரு ஆங்கிலப் 
பாட்டு.  
நாய், எப்படி கடவுளுக்குப் 
பாத்திரமான மிருகம் என்பதை 
இந்தப் பாட்டு விளக்குகிறது. 
இதைத் தமிழில் சொல்வது கஷ்டம். உனக்குத் தெரியும்
நாய்க்கு ஆங்கிலத்தில் DOG 
என்று பெயர். 
அதைத் திரும்பி போட்டு 
எழுதினால் 
அது GOD என்று வருகிறதா
இதோ அந்த poem.













GOD - Spelled Backwards

When God made the earth and sky,
The flowers and the trees.
He then made all the animals
The fish, the birds and the bees
And when at last He'd finished
Not one was quite the same
He said, "I'll walk this world of mine"
And give each one a name."
And so He travelled far and wide
And everywhere He went
A little creature followed Him
Until its strength was spent.
When all were named upon the earth
And in the sky and sea
The little creature said "Dear Lord,
There's not one left for me"
Kindly the father said to Him
"I've left you to the end
've turned my own name back to front
And called you dog, my friend."
                                                          Author - Unknown

இன்றைக்கு இது போதும் 
என்று நினைக்கிறேன் 

மற்ற விளக்கங்கள்,  
அடுத்த வாரம்.

புராணம் தொடரும்...






1 comment:

Unknown said...

சார் 40 வயதுக்கு மேல் எல்லோருக்கும் நாய் குணம் வரும் என்று சொல்கிறார்களே அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? எனக்கு இன்னும் 40 வயதாகவில்லை. முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம் என்ற ஆவல்தான்.

Asha