Thursday, May 02, 2013

ஞமலி (நாய்) புராணம் தொகுத்தவர்: வேதவியாச தாசன் தி.சு. பாம்பரசனார் பகுதி -4 நிறைவு பகுதி



பிரபா - நாகராஜன் உரையாடல் தொடர்கிறது.
பிரபா: 
என் கேள்விக்கு என்ன பதில்?
நான்: 
(பார்த்த)கேட்ட ஞாபகம் இல்லையோ?
பிரபா: 
சினிமாப்  பாட்டு புதிர் 
போதும் என்று நினைக்கிறேன். விஷயத்திற்கு வாரும்.
நான்: 
சரி.. முதலில் நாயின் 
மூலத்தைப் பற்றிக் கொஞ்சம் 
ஆராய்வோம்.
நாய் ஒரு அனைத்துண்ணி. 
பாலுண்ணி (பாலூட்டி) விலங்கு.
இப்பொழுது உலகம் முழுவதும்
"Pet" ஆக வளர்க்கப்படும் 
இந்த நாய் ஜென்மம் எப்போது
எங்கே, ஏன் இப்படி வளர்ப்பு 
நாயாக மாறிற்று என்பதை 
இன்னும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துவருகிறார்கள். 
எல்லோராலும் அநேகமாக 
ஒத்துக்கொள்ளப்பட்ட 
விஷயம் என்னவென்றால் 
நாயின் மூதாதையர்கள் 
Eurasian Grey Wolf 
(canis lupis) - 
ஐரோப்பியக் கண்டத்து 
ஓநாய்கள்தான். 
வெறித்தனம் கொண்ட 
ஓநாய்கள் எப்படி நம்முடைய 
நண்பர்களான நாய்களாக 
மாறின  என்பதுதான் 
ஆராய்ச்சி.
2005ஆம் ஆண்டு DOG 
genome (DNA) 
டாஷா என்ற Boxer வகை 
நாயிடமிருந்து எடுக்கப்பட்டது. 
இதன் முழு விபரம் இன்னும் வெளிவரவில்லை.











இதற்கு முன் வெளியிடப்பட்ட 
ஆராய்ச்சிகள் நாய்கள் 
கிழக்கு ஆசிய பகுதியிலிருந்து 
வந்திருக்க வேண்டும் 
என்று சொல்கின்றன.
எது எப்படியோ, குறுக்கு 
புத்தியும், விஷமத்தனமும் 
உள்ள ஓநாய் வர்க்கம்- 
அன்பு,பாசம்,நம்பிக்கை
புத்திசாலித்தனம் உள்ள 
நாயாக மாற்றப்பட்டது 
என்பது வரவேற்க 
வேண்டிய விஷயம்தானே?
பிரபா: 
நாய்களில் எத்தனை 
வகைகள்
தமிழ் இலக்கியத்தில் அவை 
எப்படி அழைக்கப்படுகின்றன?

நான்: எத்தனை கோடி இன்பம் 
தந்தாய் இறைவா
என்று பாடத் தோன்றுகிறது. 
அவ்வளவு அவதாரங்கள் 
இந்த நாய்கள் எடுத்திருக்கின்றன... எடுத்துக்கொண்டிருக்கின்றன.
காவல் நாய்கள் -மேய்ப்பு நாய்கள் - வேட்டை நாய்கள் -
பணிபுரியும் நாய்கள் - 
இழு நாய்கள் -வழிகாட்டு நாய்கள்--
இத்யாதி 
தமிழில் ஞாளி,சிவிங்கி நாய்
சடைநாய், எகினம், கடிநாய்
அக்கன், அசுழம், கூரன்
கொக்குசெந்நாய், தோல் நாய்.
பிரபா: 
இந்த நாயின் விசேஷ 
குணாதிசயங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?
நான்: 
நாயிடம் எத்தனையோ 
நல்ல குணங்கள் இருந்தாலும் 
இரண்டு குணங்கள் மிகவும் 
பாராட்டப்பட வேண்டியவை
முதலாவது,அவற்றின் 
அறிவுத் திறன்,. 
இரண்டாவது, அதனுடைய 
மோப்பத் திறன். 
மிகக் குறைந்த அதிர்வெண் 
கொண்ட ஒலிகளையும் 
(16 - 20 Hz) 
மிக அதிக அதிர்வெண் 
ஒலிகளையும் (70 - 700 KHz)  
கேட்க வல்லவை. 
நாய்களுக்கு 220 மில்லியன் 
நுகர்ச்சிக் கண்ணறைகள் (cells) இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர் . 
மனிதனுக்கு 5 மில்லியன் 
செல்கள் தாம் உள்ளன. 
இதனுடைய மற்ற சிறப்பு 
குணங்களில் இதனுடைய 
எஜமான விசுவாசமும்
இதனுடைய multi-task  
திறமைகளும் குறிப்பிடத்தக்கவை.
இதன் பரிமாணம் (size) 
ரொம்பவே மாறுபட்டது. 
70 Kg (154 பவுண்டு) உள்ள 
St.Bernard ஒரு பக்கம். 









5 1/2 lb (2.5kg) உள்ள 
chikauhua மறுபக்கம்; 








Formஇல், ஒல்லியான 
இத்தாலி நாட்டு 
Greyhourd லிருந்து 











பெரிய 
Dogue de Bordeaux வரை;










Irish Wolf houndக்கு 
நீளமான கால்கள். 










Bassetக்கு குட்டைக் கால்கள் 











Bulldogஇன் தலையைப் 
பற்றித் தெரியும். 









Borzoiனுடைய கம்பீரத் 
தோற்றம் கவர்ச்சியானது. 















உலகத்தில் உள்ள 
எந்த விலங்கினத்திற்கும் 
இவ்வளவு variety கிடையாது.
1359ஆம் ஆண்டு எழுதப்பட்ட 
poem sut la chasse சொல்கிறது.
A dog hath true love.
A dog hath right good 
understanding.
A wise dog knoweth 
all things.
A dog hath mettle 
and is comely.
A dog is in all things 
seemly.
A knowing dog thinketh 
no evil.
A dog hath a memory 
that forgeteth not.
I say unto you again 
a dog forsaketh 
not his duty,
Hath might and cunning 
therewith and a great 
brave heart.
சொல்லிக்கொண்டே 
போகலாம்... 
இது போதும் என்று 
நினைக்கிறேன்.
பிரபா: 
நாயைப் பற்றி நிறைய 
myths இருக்கே 
அதைப் பற்றி சொல்லுங்களேன்?
நான்: 
Myths தானே
நிறையவே இருக்கு. 
முக்கியமானதைப் 
பற்றிச் சொல்லுகிறேன்.
Myth 1
நாய்களுக்குத் இயற்கையை 
மீறிய  உணர்வு 
(Super natural vision) 
உண்டு. நாய்கள், fairies, 
hob goblines, (குட்டிச் சாத்தான்) elvesகளைப் பார்க்கும் 
திறன் உண்டு. 
அவை பக்கத்தில் இருந்தால் 
நாய்கள் குரைக்கும். 
அவற்றின்  பார்வை 
ரொம்பவே கூர்மையானது. 
இது உண்மையா
தெரியலேயே...
Myth 2
வரப்போகும் ஆபத்தை 
நாய்களால் நன்கு உணர முடியும்.
ஒரு நாய் ஒரு கட்டடத்தின் 
கூரையின் மேல் ஏறினால் 
பக்கத்தில் கட்டாயம் 
ஒரு நெருப்பு (fire) உண்டாகும்.
ஒரு நாய் இரவில் ஊளையிட்டால் பூகம்பமோ, மரணமோ 
சம்பவிக்கிறதற்கு அறிகுறி. 
உண்மையா? பொய்யா
அவரவர் அனுபவத்தைப் 
பொறுத்தது.
Myth 3
நாய்களுக்குப் புதையல்களைக் கண்டுபிடிக்கும் சக்தி உண்டு.
புதையலைத் தேடிப்போகிறவர்கள் துணைக்கு நாய்களைக் 
கூட்டிக்கொண்டு போவது வழக்கம். 
எதையும் தோண்டக்கூடிய 
விருப்பத்தில் ஒரு சமயம் 
புதையலும் கிடைக்கலாம். 
3 காலுடைய நாய் கட்டாயம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். 
3 தலை நாய் நிச்சயம் 
புதையலைக் கொடுக்கும்.
Myth 4
நாய்கள் பெரும் பொய்யர்கள் 
(Terrible liars). 
ரொம்ப நாள்களுக்கு 
முன் நாய்கள் பேசிவந்தன . 
ஒரு நாய் தன் எஜமானனை 
ஒரு கரடியிடம் காட்டிக்
கொடுத்துவிட்டது. 
கரடி மனிதனைக் கொன்றுவிட்டு
நாயை மனிதனின் மனைவியுடன் 
கொஞ்ச அனுமதித்துவிட்டுச் சென்றுவிட்டது. 
நாய் எஜமான் வீட்டுக்குச் 
சென்று எஜமானியிடம்,
"உங்கள் கணவர் சாகும்முன்
நீங்கள் என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் 
என்று சொல்லச் சொன்னார்" 
என்று சொல்லிற்று. 
எஜமானிக்குக் கோபம் வந்தது 
கொஞ்சம் மண்ணை எடுத்து 
நாயின் வாயில் திணித்துவிட்டாள். அன்றிலிருந்து நாய்க்குப் 
பேசும் சக்தி போய்விட்டது.
Myth 5
நாய்கள் ஒரு "colour blind" 
விலங்கு. அதாவது கறுப்பு
வெள்ளை மாத்திரம்தான் 
பார்க்க முடியும். 
இது பாதிதான் உண்மை. 
நாய்களுக்கு வர்ணங்களைப் 
பார்க்கும் சக்தி உண்டு. 
அதன் கண்களில் உள்ள 
Receptors நீலம், பச்சை 
வர்ணங்களைப் பார்க்க இயலும். 
சிவப்பு, பார்க்க முடியாத 
வர்ணம்.  
brightners, contrast, 
motion - 
எல்லாமே நாய்க்கு முக்கியம். 
அதனால்தான் அதனால் 
தன் சுற்றுப்புறச் சூழ்நிலையை 
உணர முடிகிறது.
Myth 6
ஒரு நாயின் மூக்கு சூடாக 
இருந்தால் அது நாயின் 
சுககேடுக்கு அறிகுறி.
இது ஒரு தப்பான அபிப்பிராயம். 
மூக்கு சூட்டுக்கும் நாயின் உடல் 
நலத்திற்கும் எந்த சம்பந்தமும் 
இல்லை.
Myth 7
நாய் வாலை ஆட்டினால்
அது சந்தோஷமாக இருக்கிறது 
என்று அர்த்தம். 
பாதி உண்மை. 
நிஜமாகவே நாய்கள் 
சந்தோஷமாக இருந்தால் 
வால்களை ஆட்டும். 
நாய் வாலாட்டுவது அதன் 
மனநிலையைப் பொறுத்தது.
சங்கடப்பட்டாலோ
எரிச்சல் பட்டாலோ
பயந்தாலோ, கோபப்பட்டாலோ 
கூட நாய்கள் 
வால்களை ஆட்டும். 
ஆராய்ச்சியாளர்களின் 
முக்கியக் கண்டுபிடிப்பு. 
நாய் தனியாக இருக்கும்போது 
வாலை ஆட்டுவதில்லை. 
வாலாட்டும் படலம் 
மற்றவர்கள்கூட இருக்கும்போது 
மட்டும் நடப்பது.
Myth 8
நாயின் வாய் மனிதனின் 
வாயைவிடச் சுத்தமானது. 
அதன் எச்சிலில் antiseptic 
properties இருக்கின்றன . 
இது ஒரு தப்பான அபிப்பிராயம். 
நாயின் வாயிலும் "germs" 
இருக்கும். 
எதிர்ப்புச்சக்தி குறைவானவர்களும் குழந்தைகளும் நாயின் 
எச்சிலுடன்  நேரடித் தெடர்பு 
கொள்ளக் கூடாது. 
Avoid "Dog's breath".
Myth 9
நாயின் ஒரு வருஷம் மனிதனின் 
7 வருஷத்திற்குச் சமம்.
இதன் அடிப்படை நாய் 10 - 12 
வருஷங்கள் வாழ்கிறது. 
மனிதன் 70 - 74 வருடங்கள் 
வாழ்கிறான். கணக்குப்படி 
1 நாய் வருஷம் - 7 மனித வருஷம்.
இந்த பார்முலா தப்பு. 
சரியான பார்முலா-இதோ:
நாய்                    மனிதன்
1 வருடம்              15 வருடம்
2  "                       24 "
4  "                       32 "
7  "                       45 "
10 "                      56 "
15 "                      75 "
20 "                      98 "
பெரிய நாய்களின் ஆயுட்காலம் 
சின்ன நாய்களின் ஆயுட்காலத்தை
விடக் குறைவு.
Myth 10
வயதான நாய்களுக்குப் புதிய
tricks கற்றுக்கொடுக்க முடியாது.
தப்பு. நாய் தன் கடைசி மூச்சுவரை 
எந்த புதிய பாடத்தையும் 
கற்றுக்கொள்ளும்.
Myth 11
நாய்கள் வயிற்றில் உள்ளதை வெளிக்கொண்டுவரப் 
புல்லைத் தின்னும்.
இது கண்கூடாகப் 
பார்க்கும் நிகழ்ச்சி. 
புல்லைச் சாப்பிட்டவுடன் 
நாய் வாந்தி எடுப்பது நடக்கிற 
நிகழ்ச்சி. 
Upset வயிற்றுக்காகத்தான் 
புல்லைச் சாப்பிடுகிறது என்பது 
ஜீரணிக்க முடியாத விஷயம்.

இந்த மாதிரி நாயைப் பற்றி 
நிறைய mythsகள் இருக்கின்றன. 
நாய்கள், மனிதர்களை எவ்வளவு 
தூரம் கவர்ந்திருக்கின்றன 
என்பதற்கு இந்த mythsகள் 
எடுத்துக்காட்டு.
பிரபா: 
வாஸ்தவம். இன்னும் 
ஏதாவது சொல்ல இருக்கா?
நான்: 
சொல்லணும் என்றுதான் 
ஆசை. அப்படிச் செய்தால் 
இன்னும் குறைந்தது 
இரண்டு ஆண்டுகளாவது 
நாயைப் பற்றித்தான் 
எழுதிக்கொண்டிருப்பேன். 
எழுத ஆரம்பிக்கிறபோது 
என்ன எழுதப் போகிறேன் 
என்ற நினைப்பு. இப்பொழுது 
எவ்வளவு விஷயங்கள் 
இன்னும் எழுத இருக்கிறது 
என்ற மலைப்பு.
இந்தியாவைப் பற்றித் தெரியாது. 
இந்த ஊர் ஒரு கவுண்டி (county) நூலகத்திற்குச் சென்றாலும் 
நாயைப் பற்றின புத்தகங்கள் 
4 அலமாரிகளில் வைத்திருக்கிறார்கள். அவ்வளவு ஆராய்ச்சிகள், 
அவ்வளவு நாய் பக்தர்கள்.
இதை எழுதுவதினால் 
நானும் நாயைப் பற்றி நிறைய 
விஷயங்கள் தெரிந்துகொண்டேன். 
நாயின் முக்கியத்துவத்தைப் பற்றி 
ஒரு பெரிய மனிதர் எழுதுகிறார்.
மனிதர்களையும் மனித 
நாகரீகத்தையும் முழுவதுமாக 
பாதித்த விலங்கினங்களில் 
நாய்க்குத்தான் முதலிடம் 
வகிக்க தகுதி உண்டு. 
பழைய உலகமானாலும் சரி
புது உலகமானாலும் சரி
6 விஷயங்களில் மனிதர்கள் 
எப்பொழுதும் நாட்டம் 
கொண்டவர்கள். அவை: 
music, 
visual art, 
story telling, 
alcohol consumption, 
religion and 
an interest in dogs.
மனிதன் கண்டுபிடித்த 
படைப்பில் முக்கியமானது 
நாய்க்குப் பயிற்சி கொடுத்து 
அதை ஒரு உபயோகமுள்ள 
வீட்டு மிருகமாக மாற்றியதுதான்.
சில சமுதாயங்களில் 
அவை கடவுள்களாகப் 
பார்க்கப்பட்டிருக்கின்றன. 
இன்னும் சிலருடைய பார்வையில் 
அது ஒரு வேண்டப்படாத 
மிருகமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 
ஆனால், இன்றைய உலகில் 
நாய்கள் கோடிக்கணக்கான 
நபர்களுக்கு நண்பர்களாகக் 
கருதப்படுகிறது. 
இது நாய்களுக்கும் 
அதன் உரிமையாளர்களுக்கும் 
பெருமைக்குரிய விஷயம்.
ஒரு குட்டிக் கதையுடன் 
இந்தப் புராணத்தை 
முடித்துக்கொள்கிறேன்.
இது Plutarch என்பவர் 
Symposia, ADC 100ல்
எழுதியது.
Pyrrhus மன்னர் காட்டுப் 
பகுதியில் பயணம் 
செய்துகொண்டிருந்தார். 
வழியில் ஒரு நாய்
கொல்லப்பட்ட 
தன் எஜமானின் உடல் பக்கம் உட்கார்ந்துகொண்டிருந்தது. 
பக்கத்து ஊர் ஜனங்கள் 
அந்த நாய் 3 நாட்கள் சோறு 
தண்ணீர் இல்லாமல் அங்கேயே 
காவல் காப்பதாகச் சொன்னார்கள். 
அரசன் உடனே அந்த உடலைத் 
தகனம் பண்ண ஏற்பாடு 
பண்ணச் சொல்லி
நாயை தன்னுடன் எடுத்துச் 
சென்றான்.
ஒரு நாள் அரச சபையில் எல்லா 
ராணுவ வீரர்களையும் வரிசையாக 
நிறுத்தி parade நடத்தினார்கள். 
அரசன் பக்கத்திலிருந்த நாய் 
அந்தக் கூட்டத்திலிருந்த தன் 
எஜமானின் கொலையாளிகளை அடையாளம் கண்டு குரைக்க 
ஆரம்பித்தது. 
அரசன் சந்தேகப்பட்டு 
நாய் காட்டிய ஆட்களை 
விசாரித்ததில் உண்மை 
புலப்பட்டது. 
அவர்களும் குற்றத்தை 
ஒப்புக்கொண்டு 
தண்டனை பெற்றார்கள்.
பிரபா: 
புராணம் நன்றாக 
இருந்தது. 
ஏதாவது "பல-சுருதி" சொல்லப்போகிறீர்களா?
நான்: 
வழக்கமாக, எந்தப் 
புராணத்திலும் எந்த 
ஸ்லோகத்திலும் முடிவில் 
"இந்த ஸ்லோகத்தை
புராணத்தைப் படித்தவர்கள் 
தனம்,தான்யம்,பசு,புத்திர 
பாக்கியம் பெறுவார்கள்" 
என்று பல-சுருதி சொல்வது 
உண்டு. 
அதே மாதிரி நானும் சொல்வேன் 
என்று எதிர்பார்த்தால் 
ஏமாற்றம்தான் ஏற்படும். 
எனக்கு "பல-சுருதி" பிடிக்காது. நம்பிக்கையோடு படிக்கும் 
புராணத்திற்கு வேறு 
additional incentives 
எதற்கு? 
அதனால், இந்த புராணத்தைப் படிக்கிறவர்களுக்கு தேவ உலகம் கிடைக்கும் என்று உறுதியாக 
சொல்ல முடியாது. 
நாயைப் பற்றி இவ்வளவு 
விஷயம் தெரிந்தபின்
நாயை கெளரவமாக நடத்தினால் 
நிச்சயம் கடவுள் அன்புக்குப் பாத்திரமாவார்கள். 
பெரியவர்கள் சும்மாவா 
சொன்னார்கள்
 "உன்னுள் இருக்கும் உயிர்தான் 
அந்த நாயிடமும் இருக்கிறது" 
என்று!

கால பைரவர் துணை...














புராணம் முற்று பெறுகிறது.

...கிளறல் தொடரும்.






4 comments:

பாலாஜி said...

Very interesting. Thanks for your efforts.
Regards
Balaji

Balam said...

Yes, Dog is a great animal. Thanks for a lot of information. Now you can take up the cause of cat, horse, parrot.....
Balam

Balam said...

I think there is a mention of a dog in Mahabharata which follows Dharmaputhra when he goes to heaven
Balam

tsnagarajan said...

thanks for the kind words.

i did mention about the"dog in mahabharatha" in the
third part.Since this is a well known story i did not eloborate.

nagarajan