Monday, August 06, 2012

தெரிந்த அனுமார்-தெரிந்திருக்க வாய்ப்பில்லாத கதை

எங்கேயும்,எப்போதும்,
எல்லா இந்துக்களாலும்
(சைவ,வைஷ்ணவ,சாக்த
வேறு பாடு இல்லாமல்)
துதிக்கப்படும்  ஒரே
Super Star,Super Man,
Super Hero,Ultimate Star
நம்முடைய அனுமார் தான் 
என்பதில், யாருக்கும் கருத்து
வேறு பாடு இருக்காது என்று
அடித்து சொல்லலாம்.













குழந்தை பருவத்தில் சூரியனைப்
பிடிக்க முயற்சி செய்தது,
இந்திரனினால் அடிக்கப்பட்டு,
மயங்கி கிடந்தது,
வாயு கோபம் அடைந்து உலகோரை
மூச்சு விடாமல் திணர செய்தது,
மும்மூர்த்திகளும் ,மற்ற தேவர்களும் 
தோன்றி அவருக்கு எல்லா வரங்களையும்
அளித்த கதை சிறுவர் முதல் பெரியவர் 
வரை எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

மேலும்,அவர் பெரியவரான போது,
சுக்ரீவருக்கு மந்திரியானது,
ராம,லக்ஷ்மணரை சந்தித்தது,
ராமருக்காக சீதையை தேட
ஆகாயத்தை கடந்தது,
சீதையிடம் மோதிரத்தை கொடுத்து
சூடாமணியை வாங்கியது,
ராவணனை சந்தித்து அறிவுரை
வழங்கியது,இலங்கையை எரித்தது-
என்ற நிகழ்ச்சிகள் தெரியாதவர்கள்
இருக்க வாய்ப்பில்லை.
ராம-ராவண யுத்ததில், அவருடைய பங்கு ,
ராமாயண கதை படித்தவர்களுக்கு
நன்றாகவே தெரியும்.

அனுமார் இல்லாமல் ராமரால் இவ்வளவு
சாதனைகள் செய்திருக்க முடிந்திருக்குமா,
என்று நினைக்க தோன்றும்.

ஆனால்,அனுமாருக்கு அந்த மாதிரி 
எண்ணம் வந்ததே இல்லை.வரவும் வராது.
அதனால் தான், அவருடைய நல்ல
பண்புகளையும் குணங்களையும்
நினைத்து, அவரை, இன்றும் என்றும்
வணங்கி வருகிறோம்.

எப்படி இவரால்,அதுவும் 
ஒரு குரங்காக இருந்து
கொண்டு, இவ்வளவு சாதனைகள் 
செய்ய முடிந்தது?

அதற்கு ஒரே காரணம் தான் 
இருக்க முடியும்.
அவர் தேவாம்சம் பெற்றவராக
இருந்திருக்க வேண்டும்.
சாதரண தேவருடைய அம்சமாக
இருக்க வாய்ப்பில்லை.

பின் யாருடைய அம்சம் இவர்?

சாஷாத் பரமேஸ்வரனுடைய 
அம்சம்.

அது என்ன கதை?

Monday, July 30, 2012

உருப்படியாகப் புகார்செய்தல் (Creative Complaining)


நீங்கள் அடிக்கடி எதற்கெடுத்தாலும் 
புகார் செய்பவரா?
அவசரப்பட்டு “இல்லை” என்று 
சொல்லிவிடாதீர்கள். 
நீங்கள் நிச்சயமாக ஒரு புகார் பேர்வழிதான். 
அது ஒரு தப்பான, வெட்கப்பட வேண்டிய, 
வேதனைப்பட வேண்டிய 
(விசு சார், மன்னிக்கவும்) விஷயமே இல்லை. 
இதை நான் சொல்லவில்லை. 
ஒரு பிரபல மனோதத்துவ விஞ்ஞானி, 
Robin M. Kowlaski சொல்லியிருக்கிறார்.

அவர் சொல்லுகிறார்: 
“Complaining has value. 
We would't do it otherwise. 
புகார் செய்வதில் ஒரு மதிப்பு 
இருக்கிறது. இல்லையென்றால் 
நாம் அதை செய்ய மாட்டோம்.”

Sunday, July 22, 2012

கணக்கில் வராத ‘கலோரிகள்’

மீடியாவில் அதிகமாகப் பேசப்படும், 
எழுதப்படும் டாப் டென் (Top Ten) 
வார்த்தைகளில், ‘கலோரி’ நிச்சயமாக 
இடம் பெறும்.

இந்த வார்த்தை, இப்பொழுது 
தனிப்பட்ட உரையாடல்களிலும் 
குடும்ப, சமூக விவாதங்களிலும் 
ரொம்பவே முக்கியத்துவத்தை 
அடைந்திருக்கிறது.

இத்தனை நாள், இந்த ‘கலோரி’ 
எங்கே போயிருந்தது? 
அறிவியல் பாடப் புத்தகத்தில் மாத்திரம் 
புதைந்துகிடந்த இந்த ‘கலோரி’ 
பூதாகாரமாக வெளிக் கிளம்பி 
எல்லோருடைய வாழ்க்கையிலும் 
ஏதோ ஒரு விதத்தில் 
விளையாடிக்கொண்டிருக்கிறது. 

Monday, July 16, 2012

தேர்தலில் ஜெயிப்பது எப்படி?

எத்தனை “ How to ” - “எப்படி” 
புத்தகங்கள் படித்திருப்பீர்கள்?

“ஒரே வருஷத்தில் கோடீஸ்வரராக 
ஆவது எப்படி?”
“ஒரே மாதத்தில் 20 பவுண்ட் எடை 
குறைப்பது எப்படி?”
“30 நாளில் ஆங்கிலத்தில் பேசுவது 
எப்படி?”
என்று பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றிப் 
புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. 
ஆனால், இதுவரை வெளிவராத விஷயம் 
“தேர்தலில் ஜெயிப்பது எப்படி?”  என்பது. 
எல்லோருக்கும் உள்மனதில் இருக்கும் 
ஆசை, அரசியலில் ஒரு செல்வாக்குள்ள 
பதவியைப் பிடிப்பது. 
ஆனால் வெளியில் சொல்ல மாட்டார்கள். 
இன்றைய உலகில் தகுதி எதுவும் 
இல்லாமல் கிடைக்கும் பதவி, 
அரசியல் பதவிதான்.

அந்த அரசியல் பதவி, எந்த மட்டத்தில் 
இருந்தாலும், கிடைக்க வேண்டுமானால் 
கீழே சொல்லப்பட்டிருக்கிற அறிவுரைகளை 
முழுவதுமாக நம்பிப் பின்பற்ற வேண்டும். 

இந்த அறிவுரைகள் — fool proof —  
எல்லாக் காலத்திற்கும் ஒத்து வரக்கூடியவை. 
வெற்றி நிச்சயம். 
மேலே படியுங்கள்.

Sunday, July 08, 2012

தெரிந்த பாதை- தெரியாத பாதை: இதில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?



கேள்விக்குப் பதில் சொல்ல நினைக்கும் முன், 
இந்தக் கதையை முதலில் படியுங்கள்.

இந்தக் கதையின் பெயர் “The Black Door” 
எழுதியவர் யார் என்று சரியான தகவல்கள் 
இல்லை. Paul J. Meyer என்றவர் 
எழுதியதாகச் சில தகவல்கள் கூறுகின்றன. 

கதையைப் படிக்கலாமா?

ரொம்பரொம்ப காலத்திற்கு முன், 
பாரசீக நாட்டில் ஒரு புகழ்பெற்ற 
படைத் தலைவர் (Army General) இருந்தார். 
பெரிய வீரர். மிக புத்திசாலி, 
மனிதாபிமானம் கொண்ட தயாள குணம் 
படைத்தவர்.

இவர் போர்க் கைதிகளை நடத்திய 
விதம் புதுமையானதாகவும், அதே சமயம், 
புதிரானதாகவும் இருந்தது. 
இவர் காலம், ஜெனீவா கன்வன்ஷன் 
(Geneva Convention) போர்க் கைதிகளை 
எப்படி நடத்த வேண்டும் என்ற 
ஒரு ஒப்பந்தம்  நடைமுறைக்கு வராத காலம்.

Tuesday, July 03, 2012

முதலாளித்துவத்திற்கு மாறிய சில பிரபல சோஷியலிஸ்ட்டுகள்.



சார்லஸ் ஆலிவர் (Charles Oliver) என்ற 
பத்திரிகையாளர், ஒரு பத்திரிகையில் 
(Investor's Business Daily) 
எழுதுகிறார்: 
“முதலாளித்துவக் கொள்கைகளை 
எதிர்த்துப் பேசும் ஒரு இடதுசாரி 
இளைஞனைப் பார்த்தால், 
அவனுடைய முகத்தை உங்கள் 
உள்மனதில் ஆழமாகப் பதித்து
வைத்துக்கொள்ளுங்கள். 
அநேகமாக, இன்னும்10,20 ஆண்டுகளில் 
அவன் நிச்சயமாக முதலாளித்துவத்தின் 
பெருமையைப் புகழ் பாடிக்கொண்டிருப்பான்.” 

இது விளையாட்டுக்காக எழுதிய 
வாசகம் இல்லை. 

இப்பொழுது உலகத்தில் பிரபலமாக 
இருக்கும் சில முதலாளிகள், 
தங்கள் வாழ்க்கையின் 
ஆரம்பத்தில் தீவிர 
சோஷியலிஸ்ட்டுகளாகவோ, 
கம்யூனிஸ்ட்டுகளாகவோ 
இருந்திருக்கிறார்கள்.

அவர்களில் சிலரைப் பற்றித் தெரிந்து
கொள்வோமா?

Monday, June 25, 2012

பலிக்காமல் போன ‘ஆரூடங்கள்’


“சான்றோர், அறிஞர், நிபுணர் - 
இவர்கள் வாக்கு ஒருபோதும் பொய்யாகாது” 
என்பது உலக வழக்கு. 
அதே மூச்சில் “யானைக்கும் அடி சறுக்கும்” 
என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

கீழே கொடுத்திருக்கும் ஆரூடங்களையும் 
அவற்றின் தற்கால நிலையையும் 
ஒப்பிட்டுப் பார்க்கும்போது 
எத்தனை யானைகளுக்கு 
அடி சறுக்கியிருக்கிறது 
என்பது புரியும்.

ஒவ்வொரு நூற்றாண்டு ஆரம்பத்திலும் 
பெரியபெரிய அறிஞர்களையும் 
விஞ்ஞானிகளையும் அவர்களுடைய
பொன்னான அபிப்பிராயங்களைக் கேட்க 
பேட்டி எடுப்பது பத்திரிகைகளுக்கு 
ஒரு விளையாட்டான பொழுதுபோக்கு. 
அப்படிப் பேட்டி எடுத்துப் பத்திரிகைகளில் 
பிரசுரமான சில பெரியவர்களின் கருத்துகளை 
இங்கே படியுங்கள். 
அவர்கள் சொன்ன கருத்துகள் 
பல விஷயங்களைப் பற்றியது. 
அவற்றில் சிலவற்றை இங்கே 
கொடுத்திருக்கிறேன்.

Monday, June 18, 2012

பாப்கார்ன்



இது மிகவும் பிரபலமான ஒரு ஆங்கில-தமிழ் 
வார்த்தை - பஸ், சைக்கிள், கம்ப்யூட்டர், 
டெலிபோன் போல.

இந்த வார்த்தையைக் கேட்டவுடன் வித்தியாசம் 
பாராமல் கேட்பவர் மனதில் தோன்றுவது 
கீழே உள்ள Image ஆகத்தான் இருக்கும்.
பாப்கார்ன் என்று சொல்வதற்குப் பதிலாக 
இதனுடைய தமிழ்ச் சொல்லான 
மக்காச்சோளப் பொரி என்று சொன்னால் 
மேலே உள்ள image எவ்வளவு தூரம் 
மனதில் கொண்டுவரும் என்பது 
ஒரு கேள்விகுறியாகத்தான் இருக்கும்.

பாப்கார்ன் ஒரு பாப்புலரான உணவு. 
சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை விரும்பி 
உண்ணும் உணவுப்பொருள். 
இதை ஒரு addictive உணவு என்றுகூடச் 
சொல்வார்கள். 
அதாவது, பாப்கார்ன் பாத்திரத்தில் (bowl)  
கை வைக்க ஆரம்பித்தால், கை, 
திரும்பத்திரும்ப அந்தப் பாத்திரத்துக்குள்ளேயே 
போகும். 
நிறுத்த நினைத்தாலும் மனது கேட்காது. 

Monday, June 11, 2012

ஒப்புரவு அறிதல்


சுயநலமற்ற சமூக சேவையைப் பற்றி 
இந்த வாரம் எழுதுவதாக சொல்லிவிட்டு, 
இது என்ன புது ‘சப்ஜக்ட்’ என்று கேட்கலாம். 
நியாயமான கேள்வி.
பதில் - ‘இது அதேதான்.’ 
ஒரு சிறு விளக்கம்:
இந்த ‘ஒப்புரவு’ தற்காலத் தமிழ் 
அகராதிகளில் காணப்படவில்லை. 
இந்தச் சொல் புழக்கத்தில் இல்லாதுதான் 
காரணம். ஆனால், இதை உபயோகித்தவர் 
சாதாரண பேர்வழியில்லை. 
சாட்சாத் வள்ளுவர் பெருமான்தான். 
இந்த வார்த்தையை ஒரு அதிகாரத்திற்குத்  
தலைப்பாக வைத்து 10 குறள்களில் 
இதன் அவசியத்தை வலியுறுத்திருக்கிறார். 
(அத்தியாயம் 22: 211-220)

ஒப்புரவு அறிதல் என்பதன் பொருள்: 
உன் சமூகத்திற்கு நீ செய்ய வேண்டிய கடமை.

Monday, June 04, 2012

உபயோகமற்ற பொருள் என்று ஒன்றுமே இல்லை (Nothing is useless)

ஒரு திருஷ்டாந்தக் கதை

இது ஒரு ஆசிரியரையும் அவருடைய 
மாணவனையும் பற்றிய கதை.

ஒரு ஊரில் ஒரு ஆசிரியர் இருந்தார். 
அவர் மிகவும் நல்லவர். 
ஒரு நாள் அவருடைய பிரியமான 
மாணவன் அவரைப் பணிவுடன் அணுகி, 
“ஐயா, என் படிப்பு முடிந்துவிட்டது. 
நான் வீடு திரும்பும்முன் உங்களுக்கு 
ஏதாவது பொருளைக் காணிக்கையாகக் 
கொடுக்க விரும்புகிறேன். 
ஆனால் உங்களுக்கு என்ன கொடுப்பது 
என்று தெரியவில்லை. அதனால் தயவுசெய்து 
நீங்களே நான் என்ன செய்ய வேண்டும் 
என்று கட்டளையிடுங்கள்” என்றான்.

அந்த நல்ல ஆசிரியர் சிஷ்யனை 
வாஞ்சையுடன் பார்த்து “குழந்தாய், நான் 
உன்னிடமிருந்து எதையுமே 
எதிர்பார்க்கவில்லையே? 
இருந்தாலும் நீ ஆசைப்பட்டுக் 
கேட்பதனால் சொல்கிறேன்.

Monday, May 28, 2012

மாற்றுத் திறனாளிகள் -ஒரு கண்ணோட்டம்


இது என்ன புது வார்த்தை என்று கேட்கத் 
தோன்றுகிறதா?

ஆம், புது வார்த்தைதான். 
பழமையான தமிழ்ச் சொல்லுக்குப் 
புது விளக்கம் தேவைப்பட்டது. 
அதனால் இந்த வார்த்தை உண்டாயிற்று. 
ஊனமுற்றோர் என்று சொன்னவுடன் 
எல்லோர் மனதிலும் உடனே 
ஒரு image தோன்றும். 
உடலில் குறைபாடு இருப்பவராகவோ 
அல்லது ஐம்பொறிகளில் எதிலாவது 
குறைபாடு இருப்பவராகவோ இருப்பவர் 
என்று நினைத்து நல்ல மனதுடையவர்கள் 
பரிதாபப்பட வாய்ப்பு உண்டு.

செவிடர்கள், குருடர்கள், நொண்டிகள், 
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று 
சினிமாவிலும் டிராமாவிலும் நகைச்சுவை 
என்ற பெயரில் இவர்களை வைத்து 
நையாண்டி செய்து வந்திருக்கின்றனர். 
இன்னும் அது தொடர்கிறது. 
ஊனம் ஒரு பலவீனம் இல்லை. 
அதையும் தாண்டி மனிதன் 
வெளிபடுத்தக் கூடிய ஆற்றல் இருக்கிறது 
என்ற ஒரு யதார்த்த நிலையை 
யாரும் நினைப்பதாகத் தெரியவில்லை.

ஊனமில்லாதவர்களுக்கு ஒரு திறன் 
இருந்தால் ஊனமுற்றவர்களுக்கு வேறு 
ஒரு மாற்றுத் திறன் இருக்கிறது. 
இதனால்தான் இவர்களை 
மாற்றுத் திறனாளிகள் 
என்று அழைக்கலாம் என்று 
தமிழ் தெரிந்தவர்கள் 
இந்தச் சொல்லை உருவாக்கினர்.

Monday, May 21, 2012

வயதாகிக்கொண்டிருந்தாலும் இளமையாக இருப்பது எப்படி? ஒரு பாட்டியின் டிப்ஸ்


வயதாவதை யாரும் தடுக்க முடியாது. 
‘கண்ணே கண்ணு, ஒண்ணே ஒண்ணு’ 
என்று ஒரே ஒரு மார்க்கண்டேயரைத்தானே 
இன்னும் என்றும் 16 வயதினர் 
என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். 
எல்லோருக்கும் ஆசைதான், 
மார்க்கண்டேயரைப் 
போல் இளமை மாறாமல் இருக்க! 
அது முடியாத காரியம் என்று தெரிகிறது. 
இருந்தாலும்  எத்தனையோ முதியோர் 
இன்னும் இளமைத் துடிப்போடு 
வாழ்கிறார்களே? 
அது எப்படி?

சில பேருக்கு எவ்வளவு வசதிகள் 
இருந்தாலும் 
துக்கமாகவே இருப்பது 
ஒரு அலாதியான கலை. 
இன்னும் சில பேருக்கு, 
ஒன்றுமே இல்லாவிட்டாலும் 
சந்தோஷமாக இருப்பதில் பிரியம். 
நீங்கள் முந்திய ரகத்தைச் சேர்ந்தவரானால், 
உடனே உங்கள் ‘டிராக்கை’ 
மாற்ற யோசியுங்கள். 
இதோ அதற்கான ‘பாட்டி வைத்தியம்’.  
இவைகளைப் பின்பற்றினால், 
நீங்கள் வயதாவதை 
நிச்சயம் தடுக்க முடியாது. 
ஆனால் 
உங்கள் வருங்கால நாட்கள் 
நிச்சயமாக 
இன்பமயமாக இருக்கும்.

இதோ அந்த டிப்ஸ்

Sunday, May 13, 2012

தெரிந்த தமிழ் - தெரியாத புலவர்கள் 3


இரட்டைப் புலவர்கள்

கி.பி. 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த இரண்டு 
புலவர்கள் பிறப்பில் இரட்டையர்கள் அல்ல. 
அத்தை மகன், அம்மான் மகன் உறவு 
முறையில் சேர்ந்து வாழ்ந்தவர்கள்.

சோழ நாட்டில் ஆலந்துறையில் செங்குந்தர் 
வேளாளர் குலத்தில் பிறந்தவர்கள். 
ஒருவருக்குப் பிறவியிலேயே கண் 
பார்வை கிடையாது. மற்றவருக்குக் கால்கள் 
கிடையாது. பெற்றோர்களுக்குக் கவலை. 
பெரியவர்கள் குழந்தைகளை ‘ஊனம் இருந்தாலும் 
ஞானம் மிகப் பெற்று, ஞாயிறு போன்று 
பிரகாசித்து, ஞாலத்தை (தேசத்தை) வலம் 
வருவார்கள்’ என்று வாழ்த்தினார்கள். 
முன்னவருக்கு முதுசூரியர் என்றும் 
இளையவருக்கு இளஞ்சூரியர் என்றும் 
பெயரிட்டனர்.

Monday, May 07, 2012

தெரிந்த தமிழ் - தெரியாத புலவர்கள் 2


சீனிச் சர்க்கரைப் புலவர்

சீனியும் சர்க்கரையும் ஒரே பொருளைத்தான் 
குறிக்கின்றன. ஆனால், எது சீனி? எது சர்க்கரை? 
என்பது நீங்கள் எந்த மாவட்டத்துக்காரர் 
என்பதைப் பொறுத்தது.

நான் திருநெல்வேலிக்காரன். 
முதல் முதலில் (1953) சென்னை வந்தபோது 
ஒரு ஹோட்டலில் போய் ஒரு கப் காப்பி 
ஆர்டர் பண்ணினேன். சர்வரிடம் கொஞ்சம் 
அதிகமாகச் சீனி போட்டுக் கொண்டுவரச் 
சொன்னேன். (அது அந்தக் காலம். 
இப்பொழுது sugarless தான் - டயபிடிஸ் இல்லை) 
அவன் ஒரு முழி முழித்தான். 
நான் ஆங்கிலத்தில் sugar என்றேன். 
உடனே, புரிந்துகொண்டு, வெள்ளை பொடிச் 
சர்க்கரையைப் போட்டு கொண்டுவந்தான். 
மேலும், என்னிடம் “சார், இனிமேல், 
சர்க்கரை என்று சொல்லுங்கள்” 
என்று அட்வைஸ் பண்ணினான். 
நான் மனதுக்குள் “வா, மகனே, எங்கள் ஊர்ப் பக்கம். 
சாதாரண ஹோட்டலில் போய், 
சர்க்கரை என்று சொல்லிப்பார். 
கருப்பட்டித் தண்ணீர்தான் கொண்டுவருவான். 
பெரிய ஹோட்டல்களில் அச்சு வெல்லத்தை 
(கோபுரம் மாதிரி இருக்கும்) 
உடைத்துப் பொடியாகக் கொண்டுவருவார்கள். 
சீனி என்று சொன்னால் மட்டும்தான் 
வெள்ளைப் பொடி சர்க்கரைக் கிடைக்கும்” 
என்று கருவிக்கொண்டேன். 
400 மைல் தூரம்தான். 
நெல்லைக்கும் சென்னைக்கும் 
இதற்கு நடுவில் எத்தனை விதமான 
‘டமில்ஸ்’.

வாழ்க தமிழ்.

Diversionக்கு மன்னிக்கவும்.

புலவரைச் சந்திப்போம்.

Monday, April 30, 2012

தெரிந்த தமிழ்- தெரியாத புலவர்கள்-1

அந்தகக் கவி வீரராகவ முதலியார்

எத்தனையோ புலவர்கள் இந்த நாட்டுக்கும் தமிழுக்கும் 
சேவை செய்திருக்கிறார்கள். 
அவர்கள் இப்பொழுது இல்லை. 
அவர்கள் பாடிக் கொடுத்த பாடல்கள்தான் 
சிரஞ்சீவியாக இன்னும் ஒலித்துக்
கொண்டிருக்கின்றன. 
தமிழ் தெரிந்த பெருபான்மையோருக்கு 
திருவள்ளுவர், கம்பர், ஔவையார், அருணகிரிநாதர், 
பட்டினத்தார், ராமலிங்க அடிகள், காளமேகப் புலவர்... 
இவர்களைப் பற்றி ஓரளவு தெரிந்திருக்கும். 
ஆனால், எத்தனை பேருக்கு தெரியும், 
தமிழ் புலவர்கள் நூற்றுக்கும் மேலே 
இருந்திருக்கிறார்கள் என்று. 
இவர்களில் பெரும்பான்மையோர் 
வறுமையினால் வாடி, கஷ்டப்பட்டு, 
வயிற்றுப்பிழைப்புக்காக 
அரசர்களையும், தனவந்தர்களையும் புகழ்ந்துப் 
பாடி வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார்கள். 
இதில் பாராட்ட வேண்டிய விஷயம் 
என்னவென்றால், எந்த சூழ்நிலையிலும் 
இந்தப் புலவர்கள் தங்கள் நகைச்சுவை 
உணர்வை (sense of humor) 
விட்டுக்கொடுத்ததில்லை. 
அதிகமாகப் பரிச்சயம் இல்லாத 
சில புலவர்களைப் பற்றியும் அவர்கள் படைத்த 
சில பாட்டுகளைப் பற்றியும் 
சுருக்கமாகத் தெரிந்துகொள்ளலாமே!

இதோ, முதலில் 
அந்தகக் கவி வீரராகவ முதலியார்.