Monday, May 28, 2012

மாற்றுத் திறனாளிகள் -ஒரு கண்ணோட்டம்


இது என்ன புது வார்த்தை என்று கேட்கத் 
தோன்றுகிறதா?

ஆம், புது வார்த்தைதான். 
பழமையான தமிழ்ச் சொல்லுக்குப் 
புது விளக்கம் தேவைப்பட்டது. 
அதனால் இந்த வார்த்தை உண்டாயிற்று. 
ஊனமுற்றோர் என்று சொன்னவுடன் 
எல்லோர் மனதிலும் உடனே 
ஒரு image தோன்றும். 
உடலில் குறைபாடு இருப்பவராகவோ 
அல்லது ஐம்பொறிகளில் எதிலாவது 
குறைபாடு இருப்பவராகவோ இருப்பவர் 
என்று நினைத்து நல்ல மனதுடையவர்கள் 
பரிதாபப்பட வாய்ப்பு உண்டு.

செவிடர்கள், குருடர்கள், நொண்டிகள்
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று 
சினிமாவிலும் டிராமாவிலும் நகைச்சுவை 
என்ற பெயரில் இவர்களை வைத்து 
நையாண்டி செய்து வந்திருக்கின்றனர். 
இன்னும் அது தொடர்கிறது. 
ஊனம் ஒரு பலவீனம் இல்லை. 
அதையும் தாண்டி மனிதன் 
வெளிபடுத்தக் கூடிய ஆற்றல் இருக்கிறது 
என்ற ஒரு யதார்த்த நிலையை 
யாரும் நினைப்பதாகத் தெரியவில்லை.

ஊனமில்லாதவர்களுக்கு ஒரு திறன் 
இருந்தால் ஊனமுற்றவர்களுக்கு வேறு 
ஒரு மாற்றுத் திறன் இருக்கிறது. 
இதனால்தான் இவர்களை 
மாற்றுத் திறனாளிகள் 
என்று அழைக்கலாம் என்று 
தமிழ் தெரிந்தவர்கள் 
இந்தச் சொல்லை உருவாக்கினர்.

Monday, May 21, 2012

வயதாகிக்கொண்டிருந்தாலும் இளமையாக இருப்பது எப்படி? ஒரு பாட்டியின் டிப்ஸ்


வயதாவதை யாரும் தடுக்க முடியாது. 
கண்ணே கண்ணு, ஒண்ணே ஒண்ணு’ 
என்று ஒரே ஒரு மார்க்கண்டேயரைத்தானே 
இன்னும் என்றும் 16 வயதினர் 
என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். 
எல்லோருக்கும் ஆசைதான்
மார்க்கண்டேயரைப் 
போல் இளமை மாறாமல் இருக்க! 
அது முடியாத காரியம் என்று தெரிகிறது. 
இருந்தாலும்  எத்தனையோ முதியோர் 
இன்னும் இளமைத் துடிப்போடு 
வாழ்கிறார்களே
அது எப்படி?

சில பேருக்கு எவ்வளவு வசதிகள் 
இருந்தாலும் 
துக்கமாகவே இருப்பது 
ஒரு அலாதியான கலை. 
இன்னும் சில பேருக்கு
ஒன்றுமே இல்லாவிட்டாலும் 
சந்தோஷமாக இருப்பதில் பிரியம். 
நீங்கள் முந்திய ரகத்தைச் சேர்ந்தவரானால்
உடனே உங்கள் டிராக்கை’ 
மாற்ற யோசியுங்கள். 
இதோ அதற்கான பாட்டி வைத்தியம்’.  
இவைகளைப் பின்பற்றினால்
நீங்கள் வயதாவதை 
நிச்சயம் தடுக்க முடியாது. 
ஆனால் 
உங்கள் வருங்கால நாட்கள் 
நிச்சயமாக 
இன்பமயமாக இருக்கும்.

இதோ அந்த டிப்ஸ்

Sunday, May 13, 2012

தெரிந்த தமிழ் - தெரியாத புலவர்கள் 3


இரட்டைப் புலவர்கள்

கி.பி. 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த இரண்டு 
புலவர்கள் பிறப்பில் இரட்டையர்கள் அல்ல. 
அத்தை மகன், அம்மான் மகன் உறவு 
முறையில் சேர்ந்து வாழ்ந்தவர்கள்.

சோழ நாட்டில் ஆலந்துறையில் செங்குந்தர் 
வேளாளர் குலத்தில் பிறந்தவர்கள். 
ஒருவருக்குப் பிறவியிலேயே கண் 
பார்வை கிடையாது. மற்றவருக்குக் கால்கள் 
கிடையாது. பெற்றோர்களுக்குக் கவலை. 
பெரியவர்கள் குழந்தைகளை ஊனம் இருந்தாலும் 
ஞானம் மிகப் பெற்று, ஞாயிறு போன்று 
பிரகாசித்து, ஞாலத்தை (தேசத்தை) வலம் 
வருவார்கள்என்று வாழ்த்தினார்கள். 
முன்னவருக்கு முதுசூரியர் என்றும் 
இளையவருக்கு இளஞ்சூரியர் என்றும் 
பெயரிட்டனர்.

Monday, May 07, 2012

தெரிந்த தமிழ் - தெரியாத புலவர்கள் 2


சீனிச் சர்க்கரைப் புலவர்

சீனியும் சர்க்கரையும் ஒரே பொருளைத்தான் 
குறிக்கின்றன. ஆனால், எது சீனி? எது சர்க்கரை
என்பது நீங்கள் எந்த மாவட்டத்துக்காரர் 
என்பதைப் பொறுத்தது.

நான் திருநெல்வேலிக்காரன். 
முதல் முதலில் (1953) சென்னை வந்தபோது 
ஒரு ஹோட்டலில் போய் ஒரு கப் காப்பி 
ஆர்டர் பண்ணினேன். சர்வரிடம் கொஞ்சம் 
அதிகமாகச் சீனி போட்டுக் கொண்டுவரச் 
சொன்னேன். (அது அந்தக் காலம். 
இப்பொழுது sugarless தான் - டயபிடிஸ் இல்லை) 
அவன் ஒரு முழி முழித்தான். 
நான் ஆங்கிலத்தில் sugar என்றேன். 
உடனே, புரிந்துகொண்டு, வெள்ளை பொடிச் 
சர்க்கரையைப் போட்டு கொண்டுவந்தான். 
மேலும், என்னிடம் சார், இனிமேல்
சர்க்கரை என்று சொல்லுங்கள்” 
என்று அட்வைஸ் பண்ணினான். 
நான் மனதுக்குள் வா, மகனே, எங்கள் ஊர்ப் பக்கம். 
சாதாரண ஹோட்டலில் போய்
சர்க்கரை என்று சொல்லிப்பார். 
கருப்பட்டித் தண்ணீர்தான் கொண்டுவருவான். 
பெரிய ஹோட்டல்களில் அச்சு வெல்லத்தை 
(கோபுரம் மாதிரி இருக்கும்) 
உடைத்துப் பொடியாகக் கொண்டுவருவார்கள். 
சீனி என்று சொன்னால் மட்டும்தான் 
வெள்ளைப் பொடி சர்க்கரைக் கிடைக்கும்” 
என்று கருவிக்கொண்டேன். 
400 மைல் தூரம்தான். 
நெல்லைக்கும் சென்னைக்கும் 
இதற்கு நடுவில் எத்தனை விதமான 
டமில்ஸ்’.

வாழ்க தமிழ்.

Diversionக்கு மன்னிக்கவும்.

புலவரைச் சந்திப்போம்.

Monday, April 30, 2012

தெரிந்த தமிழ்- தெரியாத புலவர்கள்-1

அந்தகக் கவி வீரராகவ முதலியார்

எத்தனையோ புலவர்கள் இந்த நாட்டுக்கும் தமிழுக்கும் 
சேவை செய்திருக்கிறார்கள். 
அவர்கள் இப்பொழுது இல்லை. 
அவர்கள் பாடிக் கொடுத்த பாடல்கள்தான் 
சிரஞ்சீவியாக இன்னும் ஒலித்துக்
கொண்டிருக்கின்றன. 
தமிழ் தெரிந்த பெருபான்மையோருக்கு 
திருவள்ளுவர், கம்பர், ஔவையார், அருணகிரிநாதர்
பட்டினத்தார், ராமலிங்க அடிகள், காளமேகப் புலவர்... 
இவர்களைப் பற்றி ஓரளவு தெரிந்திருக்கும். 
ஆனால், எத்தனை பேருக்கு தெரியும்
தமிழ் புலவர்கள் நூற்றுக்கும் மேலே 
இருந்திருக்கிறார்கள் என்று. 
இவர்களில் பெரும்பான்மையோர் 
வறுமையினால் வாடி, கஷ்டப்பட்டு
வயிற்றுப்பிழைப்புக்காக 
அரசர்களையும், தனவந்தர்களையும் புகழ்ந்துப் 
பாடி வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார்கள். 
இதில் பாராட்ட வேண்டிய விஷயம் 
என்னவென்றால், எந்த சூழ்நிலையிலும் 
இந்தப் புலவர்கள் தங்கள் நகைச்சுவை 
உணர்வை (sense of humor
விட்டுக்கொடுத்ததில்லை. 
அதிகமாகப் பரிச்சயம் இல்லாத 
சில புலவர்களைப் பற்றியும் அவர்கள் படைத்த 
சில பாட்டுகளைப் பற்றியும் 
சுருக்கமாகத் தெரிந்துகொள்ளலாமே!

இதோ, முதலில் 
அந்தகக் கவி வீரராகவ முதலியார்.

Sunday, April 22, 2012

“ஓம் (Om) - காஃபிர் (Kafir)”



இது என்ன புதுமையான தலைப்பு.

ஒன்று — “கோகுலாஷ்டமி
மற்றது — “அப்துல் காதர்

இரு துருவங்களான இரண்டு விஷயங்களில் 
என்ன சம்பந்தம் இருக்கிறது...  
இருக்கிறது. நான் சொல்லவில்லை. 
சொன்னவர், ஒரு பெரிய மகான், யோகி. 
சுவாமி விவேகானந்தரால் 
அத்வைத சித்தாந்தத்தின் வழிகாட்டி" 
(Torch Bearer) என்று அழைக்கப்பட்டவர். 
இந்தியாவின் Noblest Soul என்று 
மகாத்மா காந்தியால் வர்ணிக்கப்பட்டவர். 

சஸ்பென்ஸ் போதும்.

அவர் பெயர் சுவாமி ராமா தீர்த்தர். 
காலம் 1873 - 1906. 
பிறந்த ஊர் - குஜரன் வாலா கிராமம், பஞ்சாப். 
பூர்வாசிரமப் பெயர் - கோஸெயின் தீர்த்த ராமா.


Monday, April 16, 2012

Light Bulb ஜோக்ஸ்



Light bulb ஜோக்ஸ் என்பது  60, 70களில் 
பிரபலமான கடிஜோக்ஸ்.
இது கேள்வி-பதில் பாணியில் இருக்கும்.

கேள்வி - ஒரு “Light”பல்பை மாற்ற 
ஒருவருக்கு எவ்வளவு நேரமாகும்?
இந்த ஒருவர்”, ஒரு சமுதாயத்தையோ
ஒரு இனத்தையோ, ஒரு அரசாங்க 
இலாகாவையோ, ஒரு நபரையோ குறிக்கும்.

பதில்-ஒரு Punch lineல் கொடுக்கப்படும்.

இதோ, ஒரு உதாரணம்.

தமிழ் நாடு சர்க்கார் அலுவலகம் ஒன்றில் 
ஒரு light பல்ப் fuse ஆகிவிட்டது. 
இதை மாற்றி, புது பல்ப் போட எவ்வளவு 
காலம் ஆகும்
இது கேள்வி...
பதில்- ஒரே பதில்தான்...
ரொம்ப காலம் ஆகும்.
ஆனால், விளக்கங்கள் பலவிதம். 
அந்த சுவாரசியமான, நம்பத் தகுந்த 
விளக்கங்களைப் படியுங்கள்...

Monday, April 09, 2012

பொறாமை கொடிது - ஒரு திருஷ்டாந்தக் கதை


பொறாமைக்கு க்ரியா அகராதி 
கொடுக்கும் விளக்கம்: 
ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் 
கிடைக்கவில்லை என்பதைப் பொறுக்காமல் 
ஒருவர் அடையும் எரிச்சல் கலந்த மனக்குறை.’ 
ஆங்கிலத்தில் envy, jealousy என்று 
சொல்வார்கள். 
கிறிஸ்துவர்கள் கருதும் 
‘deadly sins’ listல் 
envyக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. 
பொறாமைப் பிடித்தவனுக்குத் 
தண்டனை ஐஸ் கட்டித் தண்ணீரில் 
மூழ்கடிப்பது.’ (Freezing water)

வள்ளுவர், ‘அழுக்காறாமைஎன்று 
பொறாமையைப் பற்றி  
10 குறள்கள் இயற்றியுள்ளார்.


அழுக்கற்று அகன்றாரும் இல்லை; அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்லை.

பொறாமைப் பிடித்தவன் ஒருபோதும் 
மகானாக ஆவதில்லை. 
பொறாமையில்லாத 
மனதுடையவர்கள் மகானாக 
ஆகாமல் இருந்ததில்லை. 


இதை விளக்க ஒரு சிறிய கதை.

Sunday, April 01, 2012

உடற்பயிற்சி செய்யாததற்கு Ready-made நொண்டிச் சாக்குகள்.


சாப்பிடுவது, தூங்குவது போன்று உடற்பயிற்சியும் 
நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கம் என்று 
நம்மில் பல பேர் நினைப்பதில்லை.

உடலில் வியாதியின் அறிகுறி தெரிந்த பிறகு 
டாக்டர் அட்வைஸ்பேரில், அநேகர் 
உடற்பயிற்சி  செய்ய ஆரம்பிக்கிறார்கள். 
ஏன், உடற்பயிற்சியை ஒரு அன்றாடச் 
சமாசாரமாக நினைப்பதில்லை என்ற 
கேள்விக்குக் கிடைத்த பதில்கள் 
கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. 
பெரும்பாலான பதில்கள்
தமிழ் அகராதியில் இருக்கும், 
நொண்டிச் சாக்கு’ என்ற வார்த்தைக்கு 
உதாரணங்கள்.

Tuesday, March 27, 2012

இறைவனை அடைய ஒன்பது வழிகள் - இறுதிப் பகுதி


7. தாஸ்யம் - தொண்டு

ஏழாவது நிலை, ‘தொண்டு’ - ‘தாஸ்யம்’ 
என்று சொல்வார்கள்.
இறைவனிடமோ அல்லது இறைவன் 
சம்பந்தப்பட்ட ஏதாவது விஷயங்களிலோ 
தன்னை ஈடுபடுத்திக்கொண்டு 
தொண்டுசெய்வது.

தன்னலமற்ற தொண்டுக்குச் சிறந்த உதாரணம் 
அப்பர் என்று அழைக்கப்படும் 
திருநாவுக்கரசர் சுவாமிகள்.

Tuesday, March 20, 2012

இறைவனை அடைய ஒன்பது வழிகள் - பகுதி 2



4. பாதஸேவனம் - திருவடி தொழல்

நான்காவது நிலை. திருவடி தொழல். 
இனியவை நாற்பது என்பது பதினெண் 
கீழ்கணக்கில் உள்ள ஒரு நூல். 
அதில் வரும் கடவுள் வாழ்த்துப் பாடல் 
இறைவனுடைய திருவடியைத் தொழுவது 
ஒரு இனிமையான செயல் என்று சொல்கிறது.

கண் மூன்ற உடையான் தாள் 
சேர்தல் கடிது இனிதே
தொல் மான் துழாய் மாலை யாளைத் 
தொழல் இனிதே
முத்துறப் பேணிமுகம் நான்கு 
உடையானைச் சென்று அமர்ந்து 
ஏத்தல் இனிது.

Tuesday, March 13, 2012

இறைவனை அடைய ஒன்பது வழிகள் - பகுதி 1


அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது! 
என்று ஔவையார் பாடியுள்ளார்.
இந்த அரிய பிறவியின் பயன் 
இறைவன் அடியைச் சேருவது.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் 
நீந்தார் இறைவன் அடி சேராதார்”           
வள்ளுவர் கூற்று.

இறைவன் அடியைச் சேராதவர்கள் 
பெருங்கடலில் நீந்திக்கொண்டிருப்பார்கள். 
இறைவனின் திருவடியைத் தொழுவதே 
கல்வியினால் உண்டாகும் பயன்.

இறைவனடி தொழுதல் பக்தி எனப்படும். 
பக்தி என்பது இறைவனிடம் நாம் வைக்கும் 
நம்பிக்கை. நமக்கு அவரிடம் ஒரு உறவை 
ஏற்படுத்துவது பக்தி.

இறைவனிடம் பக்தி கொள்ள 
எத்தனையோ வழிகளை 
நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். 
அவற்றில் முக்கியமான ஒன்பது வழிகள் 
ராமாயணத்திலும் பாகவத புராணத்திலும் 
விவரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

இந்த வழிகளில் ஏதேனும் ஒன்றையோ
அல்லது இரண்டு, மூன்று வழிகளைச் சேர்த்தோ 
கடைப்பிடித்துவந்தால் நிச்சயமாக 
இறைவனடி அடையலாம் என்பதைத் 
தங்கள் வாழ்க்கையின் மூலம் 
பல மகான்கள் நமக்குக் காட்டியுள்ளார்கள்.

இந்த பக்தி மார்க்கம் சுலபமானது. 
வீட்டை விட்டுக் காடு செல்ல 
வேண்டியதில்லை. 
கடுமையான விரதங்களை 
அனுஷ்டிக்க வேண்டியதில்லை.

இதோ அந்த 9 வழிகள்:

ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:
ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
ஸக்யம் ஆத்ம நிவேதனம்.
இந்த சமஸ்கிருத ஸ்லோகத்தின் 
விளக்கம் பின்வருமாறு:

Tuesday, March 06, 2012

உடல்தகுதி(fitness) பெறுவதில் ஆர்வமுள்ளவரா?

இதோ ஒரு சிறிய Quiz-க்விஸ்-

தேவை-ஒரு பென்ஸில்,பேப்பர்,
நிறைய  நேர்மை.

உடல்தகுதி என்பது எடை பார்க்கும் 
எந்திரம் கொடுக்கும் புள்ளி விவரத்தாலோ,
உங்கள் உடல் கொழுப்பு (body fat)
கணக்கினாலோ தெரிந்து கொள்ள கூடிய 
ஒரு திட்ட வட்டமான சயந்ஸ் 
(exact  science) அல்ல.

உங்கள் உடல்  நல்ல  shapeல் இருக்க 
தேவயான அஸ்திவாரம் உங்களுடைய 
மோட்டிவேஷன்(motivation).
உடல் பயிற்சியாளர்களும்(trainers),
nutritionistகளும்அடிக்கடி உபயோகிக்கும் 
வார்த்தை-
உங்களை நீங்களே அறிந்து கொள்ளுவது-
Self awareness.

இந்த குவிஸை ஒரு checkpoint ஆக 
எடுத்துக் கொண்டு உங்களுடைய
உடல்தகுதி motivation ஐ 
தெரிந்து கொள்ளுங்கள்.
பாஸ்,பெயில் கிடையாது.
குவிஸுக்கு போகலாமா?

Monday, February 27, 2012

வாழ்க்கையும் உலகநீதியும்


வாழ்க்கை என்பது என்ன?

தத்துவ விளக்கத்தில் ஈடுபடாமல் யோசித்தால்
வாழ்க்கை பல பரிமாணங்களைக் கொண்ட 
ஒரு விஷயம் என்பது புலப்படும். 
பல கோணங்களில் இந்தப் பரிமாணங்களை 
அலசலாம், வெவ்வேறு கோணங்கள் வெவ்வேறு 
தோற்றங்களைக் கொடுக்கும். 
அது பார்ப்பவரின் பார்வையையும் 
மனநிலையையும் பொறுத்தது. 
ஒவ்வொரு மனிதரும் வித்தியாசமானவர். 
எல்லோரும் ஒரே விதத்தில் ஒரு பொருளைப் 
பார்ப்பதும் இல்லை. சிந்திப்பதும் இல்லை.

உதாரணமாக, வாழ்க்கை ஒருவருக்குச் 
சவலாக இருக்கும். 
இன்னொருவர் அதை ஒரு விளையாட்டாக 
எடுத்துக்கொள்வார். 
மற்றொருவர் அதைப் புதிராகக் கருதலாம்.

வாழ்க்கையின் பல பரிமாணங்களையும் 
அந்த வித்தியாசமான பரிமாணங்களை 
ஒருவர் எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதைக் 
கீழே குறிப்பிட்டுள்ள அட்டவணையில் பார்க்கலாம்.

வாழ்க்கை என்பது என்ன?
(What is life?)

Sunday, February 19, 2012

சீட்டுக்கட்டு - ஒரு வித்தியாசமான அறிமுகம்

பொம்மி விளம்பரத்தில் தேவயானி சொல்கிற மாதிரி 
எங்கும்... எப்போதும்இருக்கிற ஒரு பொருள் - 
சீட்டுக்கட்டு.

எளிதில் புரியும் தமிழில் சொல்ல வேண்டுமானால்
“Cards Pack”.

சில பல ஆத்ம விசாரகர்கள், “அந்தக் காலத்து மனுஷாள்” 
-சீட்டு என்ற வார்த்தையைக் கேட்டவுடன் முகத்தைச் 
சுளிப்பார்கள். அவர்கள் பார்வையில் சீட்டாட்டம் 
ஒரு சூதாடிகளின் பொழுதுபோக்கு. 
அழிவைக் கொடுக்கும் நாசகாலி.

உண்மைதான்... சூதில் எத்தனையோ வகைகள் 
இருந்தாலும், மிகப் பெரிய சூது - 
பணம் வைத்துச் சீட்டு விளையாடுவதுதான். 
இதற்கு முதலிடம் கிடைப்பதற்குக் காரணம்
இது எல்லா சமூகத்தையும் பாதிக்கக்கூடியது. 
சீட்டுக்கட்டுக்கும் அதிலிருக்கும் 52 சீட்டுகளுக்கும் 
கிடைத்திருக்கிற அவப் பெயர் இது ஒன்றுதான்.

இந்த ஒரு தன்மையைத் தவிர்த்துச் 
சீட்டாட்டத்தையும் சீட்டுக்கட்டையும் ஆராய்ந்தால்
இதைவிடக் குடும்பத்தினர் அனைவருக்கும் 
பொருந்தும் சிறந்த பொழுதுபோக்குச் சாதனம் 
இருக்க முடியாது என்பது சீட்டாடியவர்களுக்குப் 
புரியும்.

Sunday, February 12, 2012

குறட்டை ஜோஸியம்

குறட்டை: இதைப் பற்றி எல்லோருக்கும் 
தெரியும். எல்லோருக்கும் நிறைய 
கேள்வி ஞானம்உண்டு.
ஜோஸியம் என்பது வாழ்க்கையோடு 
ஊறிப்போன சமாசாரம். 
ஆனால், இது என்ன 
குறட்டை ஜோஸியம்?”

விளக்கம் ...    பின்னால்.

இதோ ஒரு காட்சி.
ஒரு விருந்தாளி தன் நண்பர் வீட்டில் 
உணவு அருந்தி நண்பர் அறையிலேயே 
இரவு படுத்து உறங்குகிறார்.  
மறுநாள் காலையில் விருந்தாளி - நண்பர் 
உரையாடல் பின்வருமாறு:
நண்பர் - Good Morning நன்றாகத் 
தூங்கினீர்களா?
விருந்தாளி  - சார், ஒரு கேள்வி.
நண்பர் - கேள்விக்குக் கேள்வியா
பேஷ், பேஷ், சொல்லுங்கள்.
விருந்தாளி  - சார், நீங்கள் 
என்ன ஒரு குறட்டைவாதியா?
நண்பர் - என்ன! புதுசா இருக்கே! 
ஏதோ நான் ஒரு தீவிரவாதி 
என்பது மாதிரி                              
கேள்வி கேட்கிறீர்களே?
விருந்தாளி -கோபித்துக்கொள்ளாதீர்கள்! 
நேற்று நீங்கள் போட்ட குறட்டைச்                                             
சத்தத்தில் தூக்கமே வரவில்லை 
அதைத்தான் சொன்னேன்.
நண்பர்- நானா! குறட்டையா
சான்ஸே கிடையாது. நீங்கள் 
தூங்காததற்கு                                
வேறு காரணம் இருக்கும். 
உடனே டாக்டரிடம் போய்                                         
விசாரியுங்கள்.
இந்த உரையாடலில், நண்பர்-விருந்தாளிக்குப் 
பதிலாக,கணவன்-மனைவி;தகப்பன் -மகன் 
என்று வைத்துக்கொள்ளலாம். 
இது அநேகமாக தினசரி எங்கேயாவது 
நடக்கும் சர்வ சாதாரணமான நிகழ்ச்சி.